தத்தித் தடுமாறும் VI., உச்சாணிக் கொம்பை பிடித்த Jio., விரட்டிச் செல்லும் Airtel!

|

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயணிக்கும் பாதையை ஜியோ வருகைக்கு முன், ஜியோ வருகைக்கு பின் என இரண்டு கட்டமாக பிரிக்கலாம். காரணம், அந்த அளவிற்கு ஜியோ வருகைக்கு பின் அதன் வளர்ச்சியும் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஜியோ அதீத வாடிக்கையாளர்களை பெற்று நாட்டின் முதல் தொலைத் தொடர்பு நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது.

விஐ கடுமையான வீழ்ச்சி

விஐ கடுமையான வீழ்ச்சி

ஜியோ அறிமுகமானதில் இருந்து பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. அதிக வாடிக்கையாளர்களுடன் நாட்டின் முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ இருக்கிறது.தொடர்ந்து ஏர்டெல் இரண்டாவது இடத்திலும், விஐ மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் அதிகரிக்கவும் பல முயற்சிகளை ஏர்டெல் மற்றும் விஐ எடுத்து வருகிறது. இருப்பினும் சமீப காலமாக விஐ கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. காரணம் என்னவென்று தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ)

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ)

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாதத்தில் 42.2 லட்சம் பயனர்களையும், பார்தி ஏர்டெல் 7.9 லட்சம் பயனர்களையும் இணைத்துள்ளது. வோடபோன் ஐடியா(விஐ) பயனர் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டம்

காரணம், ஜியோ பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. ஏர்டெல் இணைய வேகத்தில் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிறுவனங்களுடன் ஈடுகட்ட முடியாத விஐ, கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.

உச்சாணிக் கொம்பை பிடித்த Jio.,

உச்சாணிக் கொம்பை பிடித்த Jio.,

ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாதத்தில் மட்டும் 4.2 மில்லியன் சந்தாதாரர்களை இணைத்திருக்கிறது.

ஜியோவுடன் நெருங்கிய போட்டியாளராக பாரதி ஏர்டெல் இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ந்து வருகிறது.

இருப்பினும் தற்போதைய நிலவரப்படி ஜியோ ஏர்டெல்லை விட 50 மில்லியன் சந்தாதாரர்களை அதிகமாக கொண்டிருக்கிறது.

அதாவது ஜூன் மாத நிலவரப்படி, ஏர்டெல் 363 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. அதேசமயத்தில் ஜியோ 413 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது.

தத்தித் தடுமாறும் VI.,

தத்தித் தடுமாறும் VI.,

இதெல்லாம் ஒருபுறம் இருக்க நாட்டின் மூன்றாவது தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் Vodafone Idea(VI) தொடர்ந்து கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அதாவது VI நிறுவனம் 1.8 மில்லியன் சந்தாதாரர்களை இழந்திருக்கிறது. விஐ கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

9 மில்லியன் சந்தாதாரர்களை இணைத்த Jio

9 மில்லியன் சந்தாதாரர்களை இணைத்த Jio

இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஜியோ மொத்தமாக 9 மில்லியன் சந்தாதாரர்களை இணைத்துள்ளது.

அதேபோல் ஏர்டெல் 2.6 மில்லியன் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா (விஐ) 4 மில்லியனுக்கு அதிகமான சந்தாதாரர்களை இழந்துள்ளது.

விரட்டிச் செல்லும் Airtel

விரட்டிச் செல்லும் Airtel

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை கணக்கெடுத்து பார்த்தால், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியாவை விட ஏர்டெல் முன்னணியில் இருக்கிறது.

அதாவது இந்த காலக்கட்டத்தில் மட்டும் ஏர்டெல் 7 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை இணைத்துள்ளது. ஜியோ 2.7 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதிலும் விஐ கடும் வீழ்ச்சி தான். அதாவது விஐ இந்த காலக்கட்டத்தில் 9 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது.

ஏற்ற இறக்கங்களில் மாற்றம் இருக்குமா?

ஏற்ற இறக்கங்களில் மாற்றம் இருக்குமா?

பெரும்பாலான பயனர்கள் 5G அறிமுகத்துக்கு தயாராகி விட்டனர். சமீபத்திய காலங்களில் அறிமுகமாகும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் கூட 5ஜி ஆதரவு இருக்கிறது.

5ஜி அறிமுகத்துக்கு பிறகு அதன் சேவை அடிப்படையில் இந்த வளர்ச்சியில் சில ஏற்ற இறக்கங்களை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 5ஜி சோதனை முழுவீச்சில் மும்முரமாக நடந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio, Airtel compete to grow: Vi Continued Losing

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X