Just In
- 35 min ago
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- 14 hrs ago
இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
- 15 hrs ago
நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் புதிய Xiaomi போன்!
- 15 hrs ago
உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!
Don't Miss
- News
இடைத்தேர்தல் கோதாவில் இறங்கிய ஓபிஎஸ்.. நான் தான் ஒருங்கிணைப்பாளர்.. ‘இரட்டை இலை’ எங்களுக்கே - பரபர!
- Movies
பேசாம கிளாமர் டிரஸ்ஸே போட்டிருக்கலாம்...ஐஸ்வர்யா மேனனின் ஹாட் போட்டோஸ்!
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லாரோட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
1 வருடத்திற்கு பிரச்சனையே இருக்காது: எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் Jio, VI, Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டங்கள்!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் விரைவில் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தலாம் எனத் தகவல் வெளிவந்துள்ளது. எனவே இந்த சமயத்தில் ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வது தான் நல்லது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா
அதேபோல் தற்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் சிலர் ஒரு வருடம் வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்களைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்யத் தொடங்கிவிட்டனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.2545 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2545 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 336 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 504ஜிபி டேட்டாவை பெற முடியும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளன. இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 730ஜிபி டேட்டாவை பெற முடியும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளன. இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டி-ஐ நீட்டித்து இருக்கிறது ஜியோ நிறுவனம். தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 388 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தில் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவிற்கு ஒரு வருட சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் பாஸ்டாக்கில் ரூ.100 கேஷ்பேக் மற்றும் அப்பல்லோ 24/7 மெம்பர்ஷிப் உள்ளிட்ட சில சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பாஸ்டாக்கில் ரூ.100 கேஷ்பேக் மற்றும் அப்பல்லோ 24/7 மெம்பர்ஷிப் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்

ஏர்டெல் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.1799 ப்ரபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 24ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு 3600 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 365 வேலிடிட்டி வழங்குகிறது இந்த ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக அழைப்பு நன்மைகள் மட்டும் விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் கூடுதலாக 75 டேட்டா கிடைக்கும். பின்பு இரவு முழுவதும் இலவச டேட்டா மற்றும் வீக்கெண்டு டேட்டா ரோல்ஓவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் Vii மூவிஸ் & டிவி அணுகல் போன்ற போனஸ் நன்மைகளுடன் வருகிறது இந்த திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இரவு முழுவதும் இலவச டேட்டா மற்றும் வீக்கெண்டு டேட்டா ரோல்ஓவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் Vi i மூவிஸ் & டிவி அணுகல் போன்ற போனஸ் நன்மைகளுடன் வருகிறது இந்த திட்டம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470