ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன?
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் புதிய திட்ட விலை விபரங்களை அண்மையில் அதிகரிக்கப்போவதாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் ஏற்கனவே திருத்தப்பட்ட புதிய விலைகளை வெளியிட்டுள்ள நிலையில், ஜியோ இன்று தனது புதிய ஆள்-இன்-ஒன் திட்ட விலை விபரங்களை அறிவித்துள்ளது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா புதிய விலை பட்டியல்
ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பின்படி, டிசம்பர் 6ம் தேதி முதல் இந்த புதிய ஆள்-இன்-ஒன் திட்டங்கள் பயனர்களுக்குச் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்களும் தங்களின் விலை பட்டியலை வெளியிட்ட காரணத்தினால், தற்பொழுது பயனர்களுக்கு எந்த திட்டத்தை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கும்.

ரூ.500-க்கு கீழ் உள்ள சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் எது?
ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியாவின் புதிய திட்டங்கள் ரூ.129 க்குத் தொடங்கி ரூ.2,399 வரை செல்கின்றது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய மூன்று நெட்வொர்க்களை நன்கு கூர்ந்து கவனித்து, ரூ.500-க்கு கீழ் உள்ள சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை பட்டியலிட்டு பிரித்துள்ளோம். உங்களுக்கு பொருத்தமான நெட்வொர்க்கில் கிடைக்கும் இந்த சிறந்த திட்டத்தைத் பார்த்தபின் உங்கள் தேர்வை முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஜியோ புதிய ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த புதிய ரூ.444 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2ஜிபி டேட்டா, ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை, மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான 2000 வாய்ஸ் கால் நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த 2000 நிமிடங்கள் முடிந்த பின் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று வசூலிக்கப்படும். இந்த புதிய ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

ஜியோ புதிய ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த புதிய ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5ஜிபி டேட்டா, ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை, மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான 2000 வாய்ஸ் கால் நிமிடங்கள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகின அனைத்து சேவைகளுக்கான அனுமதியும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் புதிய ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த புதிய ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3ஜிபி டேட்டா, ஏர்டெல் - ஏர்டெல் அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு, மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான 1000 வாய்ஸ் கால் நிமிடங்கள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.399 திட்டத்துடன் ஒப்பிடுகையில் இத்திட்டத்தில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது, ஆனால் இதன் வேலிடிட்டி வெறும் 28 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன்-ஐடியா புதிய ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் இன் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டமும் இத்திட்டமும் ஒரே பலனைத் தான் வழங்குகிறது. இந்த புதிய ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3ஜிபி டேட்டா, சொந்த நெட்வொர்க்குகளுக்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை, மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான 2000 வாய்ஸ் கால் நிமிடங்கள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. FUP வரம்புக்குப் பின் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று வசூலிக்கப்படும்.

ரூ.398 மற்றும் ரூ.399 திட்டங்கள்
ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா வழங்கும் ரூ.398 மற்றும் ரூ.399 திட்டங்கள் ஒரே பலனைப் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களையும் ஜியோவின் ரூ.399 திட்டத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோவில் கிடைக்கும் கூடுதல் வேலிடிட்டி பலன்
ஆனால் இவற்றின் வேலிடிட்டி ஜியோவின் வேலிடிட்டியை விட பாதிக்குப் பாதியாக உள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ரூ.500 விலைக்குள் சிறந்த திட்டத்தைத் தேர்வு செய்ய விரும்பும் பயனர்கள் இந்த திட்டங்களைக் கருத்தில்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








