அட்ராசக்கை! இந்த திட்டம் இருந்தா டேட்டா பற்றிய கவலையே இல்லை.. மாஸ் காட்டும் 3ஜிபி டேட்டா திட்டங்கள்..

|

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் சந்தாதாரர்களுக்கு பல்வேறு தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறார்கள், இருப்பினும், ஒரு நாளில் வழங்கப்படும் அதிகபட்ச டேட்டா 3ஜிபி தான். இந்த 3ஜிபி தினசரி டேட்டா பேக்குகள் தினமும் அதிக அளவு டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு ஏற்றது. ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வழங்கும் தினசரி 3ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் பயனர்கள் தேர்வு செய்ய கிடைக்கும் சிறப்பான திட்டங்கள் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளோம்.

ரிலையன்ஸ் ஜியோ தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்

ஜியோ ஒரு நாளைக்கு பல 3ஜிபி திட்டங்களை வழங்குகிறது. இதன் முதல் திட்டம் ரூ.419 என்ற விலையில் துவங்குகிறது. ஜியோ ரூ.419 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிவற்றை 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் காலத்திற்கு வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

OTT நன்மையுடன் கிடைக்கும் 3ஜிபி திட்டம் இதான்

OTT நன்மையுடன் கிடைக்கும் 3ஜிபி திட்டம் இதான்

ஜியோ மற்றொரு 3ஜிபி/நாள் ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.601 விலையில் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டமும் உங்களுக்குத் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் சேர்த்து, பயனர்களுக்கு மொத்தம் 6ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் Disney+ Hotstar Mobile OTT இயங்குதளத்திற்கான வருடாந்திர சந்தாவுக்கான அணுகலுடன் வருகிறது.

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள 'இந்த' பள்ளியில் தான் பிடித்தாரா? சுந்தர் பிச்சை பற்றி தெரியாத பல உண்மைகள்..சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள 'இந்த' பள்ளியில் தான் பிடித்தாரா? சுந்தர் பிச்சை பற்றி தெரியாத பல உண்மைகள்..

தினமும் 3ஜிபி கிடைக்கும் நீண்ட கால ஜியோ திட்டங்கள்

தினமும் 3ஜிபி கிடைக்கும் நீண்ட கால ஜியோ திட்டங்கள்

பட்டியலில் அடுத்ததாக உள்ள திட்டம் ரூ. 1,199 விலையில் வருகிறது. இந்த திட்டத்தின் விலைக்கேற்ப இதன் செல்லுபடியாகும் காலம், 84 நாட்கள் வரை செல்கிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMSகளுக்கான அணுகலைப் பயனர்கள் பெறுகிறார்கள். கடைசியாக, ஜியோ ஒரு வருடகால ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, இது ரூ. 4,119 விலையில் வருகிறது. இதுவும், வரம்பற்ற குரல் மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும் காலத்திற்குத் தினமும் 3GB டேட்டாவை வழங்குகிறது.

ஏர்டெல் வழங்கும் 3ஜிபி/நாள் திட்டங்கள்

ஏர்டெல் வழங்கும் 3ஜிபி/நாள் திட்டங்கள்

அதிக டேட்டா திட்டங்களுக்கு வரும்போது, ​​தொலைத்தொடர்பு நிறுவனம் தினமும் 3ஜிபி டேட்டா திட்டங்களை மட்டுமே வழங்குகிறது. இவை எதுவும் நீண்ட கால திட்டமல்ல. தொலைத்தொடர்பு நிறுவனம் 28 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டாவை வெறும் ரூ.599 விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் OTT இயங்குதளத்திற்கான வருடாந்திர சந்தாவுடன் வழங்குகிறது.

செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..

56 நாட்களுக்கு தினமும் 3ஜிபி கிடைக்கும் ஏர்டெல் திட்டம்

56 நாட்களுக்கு தினமும் 3ஜிபி கிடைக்கும் ஏர்டெல் திட்டம்

இதேபோல், ஒவ்வொரு நாளும் 3ஜிபி டேட்டாவை வழங்கும் மற்றொரு திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் ரூ.699 விலையில் வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தைப் பயனர்கள் 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் பெறுகிறார்கள். இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை, ஏர்டெல் தேங்க்ஸ் கூடுதல் நன்மைகளுடன் தொகுத்து வழங்குகிறது.

Vi வழங்கும் 3ஜிபி டேட்டா திட்டங்கள்

Vi வழங்கும் 3ஜிபி டேட்டா திட்டங்கள்

தினமும் 3ஜிபி இணையத்தை வழங்கும் பல ப்ரீபெய்ட் திட்டங்களையும் விஐ கொண்டுள்ளது. இதன் அடிப்படை 3ஜிபி டேட்டா பேக் ரூ. 475 என்ற விலையில் வருகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களுடன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. Vi பட்டியலில் உள்ள அடுத்த திட்டம் ரூ.699 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் 56 நாள் வேலிடிட்டி உடன் 3ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?

Vi வழங்கும் பெஸ்ட் 3ஜிபி டேட்டா திட்டங்கள்

Vi வழங்கும் பெஸ்ட் 3ஜிபி டேட்டா திட்டங்கள்

கடைசியாக, டெல்கோ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகலுடன் வரும் இரண்டு திட்டங்களை வழங்குகிறது. Vi ஆனது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு ரூ.601 விலையில் தினமும் 3ஜிபி திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. தினசரி 3ஜிபி டேட்டாவுடன், பயனர்கள் மொத்தம் 16ஜிபி டேட்டாவையும் பெறுகிறார்கள். மறுபுறம், தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு நாளைக்கு 3ஜிபி ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.901 விலையில் வழங்குகிறது.

இரவு முழுக்க இலவச டேட்டா வழங்கும் ஒரே நிறுவனம் Vi மட்டுமே

இரவு முழுக்க இலவச டேட்டா வழங்கும் ஒரே நிறுவனம் Vi மட்டுமே

இந்த திட்டம் 70 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இத்துடன், இந்த திட்டங்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன், இந்த திட்டங்கள் உங்களுக்கு வீக்கென்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கரண்ட் பில் சிக்கல் இல்லாமல் ஏசி பயன்டுத்தலாம்.. இந்த கம்மி விலை இன்வெர்ட்டர் ஏசி மாடலை பாருங்க..கரண்ட் பில் சிக்கல் இல்லாமல் ஏசி பயன்டுத்தலாம்.. இந்த கம்மி விலை இன்வெர்ட்டர் ஏசி மாடலை பாருங்க..

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio Airtel and Vi See Which 3 GB Daily Data Prepaid Plan Is Best For You : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X