Home
News

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா.. ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.. அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதுவும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனம் இன்னும் 5ஜி சேவையை வழங்கவில்லை. அதாவது இன்னும் சில மாதங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். சரி இப்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரூ.299 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. இதில் அதிக நன்மை வழங்கும் நிறுவனம் எது என்று பார்க்கலாம்.

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா.. ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்..

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 299 plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 42ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.

இதுதவிர அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் (Apollo 24|7 Circle), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5G data), ப்ரீ ஹாலோ டியூன்ஸ் (free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா.. ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்..

ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ( Jio Rs 299 Plan) தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா.. ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்..

வோடபோன் ஐடியாவின் ரூ.299 திட்டமானது (Vodafone Idea Rs 299 Plan) தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இதில் 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் வோடபோன் ஐடியாவின் ரூ.299 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 47ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அட்டகாசமான வோடபோன் ஐடியாவின் ரூ.299 திட்டம். இதுதவிர டேட்டா ரோல்ஓவர் (Weekend Data Rollover), பிங்கே ஆல் நைட் (Binge All Night) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

எது சிறந்தது: ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தான் அதிக டேட்டா மற்றும் அதிக சலுகைகளை வழங்குகிறது. அதற்குப் பிறகு வோடபோன் ஐடியா நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திடடம் தான் குறைவான டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio, Airtel and Vi Rs 299 Prepaid Plans: Which company offers the most benefits?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X