தினமும் 3ஜிபி டேட்டா.. அதுவும் உங்கள் பட்ஜெட்டிற்குள் வேண்டுமா? அப்போ இந்த திட்டங்கள் தான் பெஸ்ட்..

|

என்ன தான் 2022 ஆம் ஆண்டு நமக்கெல்லாம் அருமையாகத் துவங்கி இருந்தாலும், மக்களிடம் கோவிட் தொடர்பான பீதிகள் மட்டும் குறைந்த பாடாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் கோவிட்-19 புதிய வடிவில் உருமாறிப் பரவி வருகிறது. கோவிட்டின் அழிவு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மக்கள் மத்தியில் பரவத் துவங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரிய பீதியை ஏற்படுத்தத் தொடங்கி இருந்தாலும் கூட, அலுவலகம் சென்று வேலை பார்க்கும் சூழ்நிலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலையில் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்பதனால் சிலர் குஷியில் இருக்கிறார்கள்.

ஊரடங்கு மீண்டும் வந்தால் டேட்டா தேவை அதிகரிக்குமா?

ஊரடங்கு மீண்டும் வந்தால் டேட்டா தேவை அதிகரிக்குமா?

மஞ்சள் எச்சரிக்கை மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவுகளுடன், பூட்டுதல் நிலைமையும் வலுவடைந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மீண்டும் அனைத்து பள்ளிகளும் அலுவலகங்களும் வீட்டில் இருந்து வேலை மற்றும் வீட்டில் இருந்து படிக்கும் நிலைக்கு மாறிவிடும் என்பதனால், வீட்டிலிருந்து படிப்பது மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடங்கும் போது, ​​பயனர்களிடையே தரவுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்குகிறது. ஒவ்வொருவரும் அதிகபட்ச டேட்டா அணுகலைப் பெறும் ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறார்கள்.

அதிக டேட்டா நன்மை கிடைக்கும் பட்ஜெட் விலை திட்டங்கள்

அதிக டேட்டா நன்மை கிடைக்கும் பட்ஜெட் விலை திட்டங்கள்

அதிலும் அதிக டேட்டா நன்மை கிடைக்கும் பட்ஜெட் விலை திட்டங்களின் மீதே மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பலருக்கு, இன்றைய காலகட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா போதுமானதாக இல்லை என்பதே உண்மை. அத்தகைய சூழ்நிலையில், தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மீது பயனர்களின் செல்கிறது. ஆனால், தினசரி 3ஜிபி டேட்டா வேண்டும் என்றால் அதற்கான கட்டணமும் கணிசமாக உயருகிறது. எந்த திட்டத்தைத் தேர்வு செய்வது என்ற குழப்பமும் எழுகிறது. இதை எளிமையாக்க உங்களுக்காக இங்கு சில சிறந்த திட்டங்களைத் தொகுத்துள்ளோம்.

புதிய வங்கி விதி: இனி பணம் எடுத்தாலும் கட்டணம்.. டெபாசிட் செய்தாலும் கட்டணமா? இது ரொம்ப முக்கியம் மக்களே..புதிய வங்கி விதி: இனி பணம் எடுத்தாலும் கட்டணம்.. டெபாசிட் செய்தாலும் கட்டணமா? இது ரொம்ப முக்கியம் மக்களே..

பட்ஜெட் விலைக்குள் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் சிறந்த திட்டங்கள்

பட்ஜெட் விலைக்குள் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் சிறந்த திட்டங்கள்

இந்த பதிவின் மூலம் உங்கள் பட்ஜெட் விலைக்குள் உங்கள் பாக்கெட் பணத்திற்குப் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தாத திட்டங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் மற்றும் ஐடியா அல்லது விஐ போன்ற அனைத்து தனியார் டெலிகாம் நிறுவனங்களின் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றிய தகவலை நாங்கள் இங்கு உங்களுக்காக வழங்கியுள்ளோம். இருப்பினும், பயனர்களின் பட்ஜெட்டை மனதில் வைத்து, இந்த நிறுவனங்கள் குறைந்த செலவில் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை வழங்கியுள்ளோம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் வழங்கும் தினசரி 3 ஜிபி டேட்டா திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் வழங்கும் தினசரி 3 ஜிபி டேட்டா திட்டம்

குறைந்த விலையில் தினசரி 3 ஜிபி டேட்டா வசதியைப் பெற ஜியோ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 419 ரீசார்ஜ் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த வகையில், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 84 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு வசதி மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமாகக் கிடைக்கிறது.

உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..

ஏர்டெல் வழங்கும் தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டம்

ஏர்டெல் வழங்கும் தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்த விலை திட்டம் ரூ. 599 ஆகும். இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் வெறும் டேட்டா நன்மை மட்டுமின்றி பல பயனுள்ள மற்ற நல்ல பலன்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இது தவிர, இந்த திட்டத்துடன் பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் செல்லுபடியாகும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி இலவச 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கிறது.

1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் உடன் தினமும் 3ஜிபி டேட்டா

1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் உடன் தினமும் 3ஜிபி டேட்டா

முன்பே சொன்னது போல, இந்த ரூ. 599 திட்டம் உங்களுக்குத் தினசரி 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்குவதோடு, கூடுதல் நன்மையையும் சேர்த்து வழங்குகிறது. கூடுதல் நன்மைகள் என்பது இப்போது பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பல திட்டங்களுடன் சேர்த்துக் கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் உங்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் நன்மை கிடைக்கிறது. இதன் படி, இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது. இந்த சந்தா உங்களுக்கு 1 வருடம் வரை செல்லுபடியாகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.26 திட்டம்: 2ஜிபி டேட்டா.. வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா? இது சூப்பர்ஹிட் ரீசார்ஜ்..ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.26 திட்டம்: 2ஜிபி டேட்டா.. வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா? இது சூப்பர்ஹிட் ரீசார்ஜ்..

தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் Vi திட்டம்

தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் Vi திட்டம்

Vi இன் மலிவான தினசரி 3GB டேட்டா திட்டம் ரூ. 475 விலையில் கிடைக்கிறது. இது 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். டேட்டாவைத் தவிர, இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன. இவை அனைத்துடனும், டேட்டா ரோல்ஓவர் மற்றும் இரவு நேர இலவச டேட்டா நன்மையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவரின் கீழ், திங்கள் முதல் வெள்ளி வரை மீதமுள்ள தரவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தலாம். நைட் டேட்டாவில், நிறுவனம் உங்களுக்கு வரம்பற்ற இலவச டேட்டா உபயோகத்தை நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio Airtel And Vi Prepaid Recharge Plans With Daily 3GB Data Benefits At Budget Price : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X