Jio, Airtel, Vi : கொத்தா கிடைக்கும் நன்மை.. இது தெரியமா போஸ்ட்பெய்டு திட்டத்தை மிஸ் பண்ணிட்டோமே..
மக்கள் பொதுவாக ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid plans) தான் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சிலர் மட்டுமே போஸ்ட்பெய்டு திட்டங்களை (Postpaid plans) பயன்படுத்த விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் இருக்கிறது. இருப்பினும் சிலர் மாதாந்திர கட்டணத்தை பற்றி கவலைகொள்கிறார்கள்.
அப்படி, நீங்களும் மாதாந்திர கட்டணத்தை பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அவை தான் மலிவு விலை போஸ்ட்பெய்டு திட்டங்கள். இது மிகவும் மலிவு விலையில் உயர்ந்த நன்மைகளை வழங்குகிறது. இது ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற டெலிகாம் ஆப்ரேட்டர்களிடம் இருந்து வருகிறது.

இந்த நுழைவு-நிலைத் திட்டங்களைப் (Basic standard plans) பார்த்து உங்கள் தேவைகளுக்கு ஏதேனும் பொருந்துமா என்பதைத் பாருங்கள். இந்தியாவில் உள்ள மூன்று தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் நுழைவு-நிலை போஸ்ட்பெய்ட் திட்டங்களைப் பற்றி பார்க்கையில், வெவ்வேறு விலையில் வருகின்றன. நுழைவு நிலை திட்டங்கள், நிச்சயமாக, நீங்கள் நிறுவனத்திடமிருந்து பெறக்கூடிய மிகவும் மலிவு விலை திட்டங்களாகும்.
ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம்: (Jio Postpaid Plans)
தங்கள் நுகர்வு முறைகளைப் பற்றி கவலைப்படாமல், பில் வந்தவுடன் பணம் செலுத்த விரும்புபவர்களுக்கு போஸ்ட்பெய்ட் சேவைகள் சிறந்தவை. சரி, முதலில் ஜியோ வழங்கும் போஸ்ட்பெய்டு திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, இந்த பட்டியலில் மிகவும் மலிவு விலையில் உள்ளது. இது மாதம் 299 ரூபாய் (Jio Rs 299 Postpaid Plan) விலையில் வருகிறது.
இந்த திட்டம் 30ஜிபி டேட்டாவுடன் வருகிறது. அதன் பிறகு, இதன் பயனர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கூடுதல் ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) போன்ற நன்மைகளை வழங்குகிறது. வரம்பற்ற 5G டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் நன்மைகள் ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud) மற்றும் ஜியோ டிவி (JioTV) நன்மைகளை வழங்குகிறது.
பார்தி ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம்: (Airtel Postpaid Plans)
பார்தி ஏர்டெல் அதன் நுழைவு நிலை சலுகையாக ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது 40ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது ஜியோவின் ரூ.299 திட்டத்தில் நீங்கள் பெறுவதை விட அதிகம். ஏர்டெல் வழங்கும் வரம்பற்ற 5ஜி டேட்டா ஆஃபரைப் பெற நீங்கள் தகுதியுடையவர்கள். அதைப் பெற, நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் பயன்படுத்த வேண்டும். மற்ற நன்மைகள் ஜியோவை போன்றது.
வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் திட்டம்: (Vodafone Idea Postpaid Plans)
வோடபோன் ஐடியாவின் மிகவும் மலிவு விலையில் உள்ள போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ. 401 விலைக்கு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில், Vi அதன் போஸ்ட்பெய்டு சலுகைகளை மேம்படுத்தியது. புதிய நுழைவு நிலை திட்டம் ரூ.399 விலையில் இருந்து ரூ.401 விலைக்கு மாறியது. இது பணத்திற்கு வரும்போது குறிப்பிடத்தக்க வித்தியாசம் இல்லை. நீங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, 3000 எஸ்எம்எஸ் மற்றும் 50 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள்.
நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டா, விஐ மூவீஸ் மற்றும் டிவி (Vi Movies & TV), ஹங்கமா மியூசிக் (Hungama Music), விஐ கேம்ஸ் (Vi Games) போன்றவற்றையும் வழங்குகிறது. பிறகு, பின்வரும் மூன்று நன்மைகளில் ஒன்றையும் நீங்கள் தேர்வு செய்யலாம். 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile), 12 மாதங்களுக்கு சோனிலைவ் (SonyLIV) மொபைல் சந்தா அல்லது 1 வருடத்திற்கு சன்நெக்ஸ்ட் (SunNXT) பிரீமியம் சந்தா போன்றவையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








