Home
News

ஜியோ, ஏர்டெல், விஐ: 270 ரூபாய்க்கும் குறைவான மலிவு விலையில் தினமும் 1ஜிபி டேட்டா..

இந்தியாவின் மூன்று தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், தங்களின் சந்தாதாரர் தளத்திற்கு டன் கணக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும், மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டம் என்று பார்க்கையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்படும் தினசரி டேட்டா பேக்குகளாகவே உள்ளது. தினசரி டேட்டா பேக்குகள் அதிக டேட்டா விலையுயர்ந்த திட்டங்கள் முதல் குறைந்த டேட்டா வழங்கும் மலிவு விலை திட்டங்கள் வரை பரந்த அளவிலானவை.

மலிவான விலையில் தினசரி டேட்டா திட்டங்கள்

மலிவான விலையில் தினசரி டேட்டா திட்டங்கள்

இதனால், பயனர்கள் அவர்களுக்குச் சரியான திட்டத்தைத் தேர்வு செய்வதில் சிக்கல் எழுகிறது. விலை அதிகமாக இருக்கும் தினசரி டேட்டா திட்டங்களை குறைந்த எண்ணிக்கையிலான பயனர்கள் மட்டுமே பயன்படுத்த ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், குறைந்த விலை திட்டங்களின் நிலை அப்படி இல்லை, பெரும்பாலானோர் குறித்த விலையில் தினசரி டேட்டா கிடைக்கும் திட்டங்களையே தேடுகிறார்கள். ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வழங்கும் மலிவு விலையில் தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும் ரூ.300 விலைக்கும் குறைவான விலையில் கிடைக்கும் திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளோம்.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் தினசரி 1ஜிபி டேட்டா திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் தினசரி 1ஜிபி டேட்டா திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் மிக முக்கியமான சேவை வழங்குனர்களில் ஒன்றாகும். மேலும், சேவையின் விலைகள் மற்றும் நன்மைகள் என்று வரும்போது அதன் மற்ற இரண்டு போட்டியாளர்களை விட எப்போதும் ஒரு விளிம்பைக் கொண்டுள்ளது. ஜியோ ஒரு சில 1ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை வழங்குகிறது. அவை குறுகிய கால செல்லுபடியாகும் திட்டங்களாகும். முதல் திட்டம் ரூ. 149 விலையில் வருகிறது மற்றும் 20 நாட்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS நன்மைகளுக்கான அணுகலைப் பெறுகிறார்கள்.

28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இந்த திட்டத்தை பாருங்க..

28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இந்த திட்டத்தை பாருங்க..

அடுத்தபடியாக ரூ. 179 விலையில், 24 நாட்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் மற்றொரு பேக்கை ஜியோ வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிவை வருகிறது. பட்டியலில் உள்ள கடைசி திட்டமான ரூ. 209 திட்டமாகும், இது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களுடன் 28 நாட்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த அனைத்து திட்டங்களுடனும் பயனர்கள் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் இன்னும் சில ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதி ஏர்டெல் திட்டம்

பாரதி ஏர்டெல் திட்டம்

பாரதி ஏர்டெல் தனது சேவைகளையும் மேம்படுத்தி, தற்போது இந்தியாவில் இரண்டாவது வெற்றிகரமான தொலைத்தொடர்பு சேவையாக உள்ளது. ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களுக்கு சில கூடுதல் நன்மைகளுடன் இதே போன்ற திட்டங்களை வழங்குகிறது. பட்டியலில் உள்ள முதல் திட்டம் ரூ. 209 விலையில் வருகிறது. இது 21 நாட்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது.

28 நாட்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் ஏர்டெல் திட்டத்தின் விலை என்ன?

28 நாட்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் ஏர்டெல் திட்டத்தின் விலை என்ன?

அடுத்த பேக் ரூ. 239 திட்டமாகும். இது தினமும் 1ஜிபி டேட்டாவை 24 நாட்களுக்கு மொத்த செல்லுபடியாகும் காலத்திற்கு அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. பட்டியலில் உள்ள கடைசி திட்டமானது ரூ. 265 விலையில் வருகிறது மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்குத் தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான இலவச சோதனை மற்றும் Wynk மியூசிக் அணுகலுடன் வருகின்றது.

வோடபோன் ஐடியா வழங்கும் தினசரி 1ஜிபி டேட்டா திட்டம்

வோடபோன் ஐடியா வழங்கும் தினசரி 1ஜிபி டேட்டா திட்டம்

Vodafone Idea அல்லது Vi வளர்ச்சியடைந்து வருகிறது மற்றும் அதன் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் அதன் 4G சேவைகளை கணிசமாக அதிகரித்து வருகிறது. மலிவுத் திட்டங்களைத் தேடும் பயனர்களுக்கு, வியும் சில 1ஜிபி தினசரி டேட்டா திட்டங்களையும் வழங்குகிறது. Vi வழங்கும் முதல் திட்டம் ரூ. 199 விலையில் 18 நாட்களுக்கு தினமும் 1GB டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. அடுத்த பேக் ரூ. 219 திட்டமாகும், இது தினமும் 1ஜிபி டேட்டாவை 21 நாட்களுக்கு மொத்த செல்லுபடியாகும் காலத்திற்கு அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் Vi திட்டத்தின் விலை என்ன?

28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் Vi திட்டத்தின் விலை என்ன?

Vi வழங்கும் மூன்றாவது 1ஜிபி தினசரி டேட்டா திட்டம் ரூ. 239 விலையில் வருகிறது மற்றும் 24 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்குத் தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. பட்டியலில் கடைசியாக ரூ. 269 திட்டமானது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களுடன் மொத்தம் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் ரூ. 199, ரூ. 219 மற்றும் ரூ. 269 திட்டங்களுடன் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Jio Airtel And Vi Affordable 1 GB Daily Data Plans Under Rs 300 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X