Home
News

வருடத்திற்கு ஒரே ரீசார்ஜ் போதும்.. ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் திட்டங்களின் கூடுதல் சலுகைகள்.. இதோ முழு விவரம்!

ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தற்போது ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன. முதலில் ஜியோ நிறுவனம் ஒரு வருட திட்டத்தில் சலுகையை அறிவித்ததை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி உள்ளன. இப்போது இந்த மூன்று நிறுவனங்களின் ஒரு வருட திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 15-க்குள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். எனவே நீங்கள் தற்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 380 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் திட்டங்களின் கூடுதல் சலுகைகள்.. இதோ விவரம்!

அதுவும் பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மொத்தம் 760ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வேலிடிட்டி சலுகையானது அக்டோபர் 1 முதல் அக்டோபர் 15 வரை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இப்போது இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 120ஜிபி போனஸ் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10ஜிபி டேட்டா வீதம் 120ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கும்.

எனவே நீங்கள் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1032.5ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ சேவைக்கான சந்தா, நானோ பானானா ஏ.ஐ, 12 மாதங்களுக்கு கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) சந்தா, 5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சலுகைகள் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டம் மூலம் வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம். அதுவும் ஜியோ டிவி வழியாக மட்டுமே இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ள முடியும்.

தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, EasemyTrip வழங்கும் விமானங்கள் மற்றும் ஓட்டல் புக்கிங்களில் ரூ.2200 வவுச்சர், Cinepolis திரையரங்குகளில் ரூ.150 தள்ளுபடி வவுச்சர், ரூ. 200 AJIO தள்ளுபடி வவுச்சர் போன்ற சலுகைகளும் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த ஏர்டெல் திட்டத்திலும் கூடுதல் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதாவது தற்போது இந்த ஏர்டெல் திட்டத்தில் இலவசமாக 150ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

இப்போது வழங்கப்பட்டுள்ள 150ஜிபி கூடுதல் டேட்டா ஆனது 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 1062.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன.

ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் திட்டங்களின் கூடுதல் சலுகைகள்.. இதோ விவரம்!

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது. ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.

குறிப்பாக ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதிர்பார்க்கும் ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் பயனர்கள் மேலே உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

Best Mobiles in India

English summary
Jio, Airtel and BSNL Annual Prepaid Plans: Check Extra Data, Validity and Unlimited Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X