நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் ஜியோ ஏர்ஃபைபர்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான சாதனத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ நிறுவனம். அதாவது ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஏர்ஃபைபரை நாளை (செப்டம்பர் 19) அறிமுகம் செய்ய உள்ளது.
ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) என்னவென்றால், 5ஜி தொழில்நுட்பத்தை (5G Technology) பயன்படுத்தி காற்றில் ஃபைபர் போன்ற வேகத்தை(Fiber-like Speed Over The Air) வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய சேவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒரு ஆன்டெனாவுடன்(Antenna) வெள்ளை நிற ரூட்டர் (White Router) போன்று இருக்கும் ஒரு சாதனத்தை இணைத்து 'ஆன்' (ON) செய்வதன் மூலம் உங்களது வீடு அல்லது அலுவலகத்தில் 1.5 ஜிபிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை பெற முடியும்.

இந்த சேவையின் முக்கிய சிறப்பு என்னவென்றால், இதன் கீழ் 1.5 ஜிபிபிஎஸ் (1.5 Gbps) என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீட்(Internet Speed) கிடைக்கும். பின்பு ஜியோ ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் பேரண்டல் கண்ட்ரோல் (Parental control) மற்றும் வைஃபை 6 (Wi-Fi 6) ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இது ஜியோ ட்ரூ 5ஜியின் ஸ்டேண்ட் அலோன் (Standalone - SA) தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வீடு மற்றும் அலுவலகங்களில் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் இந்த ஜியோ ஏர்ஃபைபர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு பயனர்களுக்குத் தனித்துவ அனுபவத்தை வழங்கும் நோக்கில் இது அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூறினார்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஜியோஃபைபர் வித்தியாசங்களை இப்போது பார்ப்போம்: அதாவது ஜியோ ஃபைபரை பொறுத்தவரை ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் ஜியோ ஏர்ஃபைபர் பாயின்ட்-டு-பாயிண்ட் ரேடியோ சிக்னலை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் இணைய சேவையை வழங்குகிறது. குறிப்பாக எந்த வயரும் இல்லாமல் ஜியோ ஏர்ஃபைபர் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு எளிதாகக் கிடைத்துவிடும்.
அதேபோல் வயர்கள் கட்டானால் பிராட்பேண்ட் பிரச்சினையாகும். ஆனால் இந்த ஜியோ ஏர்ஃபைபரில் அந்த பிரச்சனை இல்லை. அதாவது ஜியோ ஏர்ஃபைபருக்கு வயர்கள் தேவை இல்லை என்பதால் எளிதாக எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். உங்கள் வீட்டில் எந்த இடத்திலும் ஜியோ ஏர்ஃபைபரை வைத்துப் பயன்படுத்த முடியும்.

ஜியோ நிறுவனம் விரைவில் கொண்டுவர உள்ள ஜியோ ஏர்ஃபைபர் சேவை ஆனது ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஆக்ட் (ACT) போன்ற பிற பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கும். குறிப்பாக இந்தியாவில் தற்போது ஏர்டெல் பிராட்பேண்ட் சேவை மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் ஜியோ ஏர்ஃபைபர் சேவை அறிமுகமானால், அப்படியே நிலைமை தலைகீழாக மாறிவிடும். அதாவது ஜியோ ஏர்ஃபைபர் சேவை தான் மிகவும் பிரபலமாக இருக்கும்.
ஆனால் ஜியோ ஏர்ஃபைபர் இப்போது கொஞ்சம் அதிகமாக உள்ளது. அதாவது இதன் விலை சுமார் ரூ.6000 ஆகும். ஆனால் சில மாதங்களில் இந்த சாதனத்தின் விலை குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மேம்பட்ட அம்சங்களுடன் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








