மேடையில் கொக்கரித்த அம்பானி.. விநாயகர் சதுர்த்தி அன்று அறிமுகம் ஆகும்.. Airtel-க்கு வேட்டு வைக்கும்! என்னது?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் (Annual General Meeting) இன்று நடைபெற்றது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, வரும் செப்டம்பர் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஜியோ ஏர்ஃபைபர் சேவை தொடங்கும் என இந்த 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜியோ ஏர்ஃபைபர் என்னவென்றால், 5ஜி தொழில்நுட்பத்தை (5G Technology) பயன்படுத்தி காற்றில் ஃபைபர் போன்ற வேகத்தை(Fiber-like Speed Over The Air) வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய சேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆன்டெனாவுடன்(Antenna) வெள்ளை நிற ரூட்டர் (White Router)போன்று இருக்கும் ஒரு சாதனத்தை இணைத்து 'ஆன்' (ON)செய்வதன் மூலம் உங்களது வீடு அல்லது அலுவலகத்தில் 1ஜிபிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை பெற முடியும்.

இன்னும் தெளிவாகக் கூறவேண்டும் என்றால், ஜியோ ஏர் ஃபைபர் என்பது அல்ட்ரா வேகத்தில் இணையச் சேவையை வழங்கும் முறையாகும். இதுவரை எந்த நிறுவனமும் அளிக்காத அளவுக்கு வேகமான இணையத்தை இந்த ஏர் ஃபைபர் மூலம் பயன்படுத்த முடியும். பொதுவாக ஃபைபர் சேவையைப் பயன்படுத்துவதற்கு கேபிள்கள் தேவையாக இருக்கும்.
ஆனால் ஜியோ நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதாவது ஜியோ ஏர் ஃபைபர்-ஐ பயன்படுத்தி எந்த கேபிளின் உதவி இல்லாமல் காற்றிலேயே அல்ட்ரா ஸ்பீட் இணைய சேவையை வழங்க இருக்கிறது. ஜியோ ஏர் ஃபைபர் சேவையின் முக்கிய சிறப்பு என்னவென்றால், இதன் கீழ் 1 ஜிபிபிஎஸ் (1Gbps) என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீட்(Internet Speed) கிடைக்கும். பின்பு ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் பேரண்டல் கண்ட்ரோல் (Parental control) மற்றும் வைஃபை 6 (Wi-Fi 6) ஆதரவும் உள்ளது.
ஜியோ ஏர் ஃபைபர்-ஐ ஸ்மார்ட் டிவி, போன், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றுடன் மிக சுலபமாக இணைக்கலாம். மேலும் ஏற்கனவே வெளியான தகவலின்படி, ஜியோ ஏர்ஃபைபர் விலை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபரை விட 20 சதவீதம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏர்டெல் ஏர்ஃபைபர் திட்டத்தின் ஆரம்ப விலை மாதத்திற்கு ரூ.799-ஆக உள்ளது. அதேபோல் ஏர்டெல் ஏர்ஃபைபர் சேவை 6 மாதத்திற்கு வேண்டும் என்றால் ரூ.4,435 செலவு செய்ய வேண்டும்.
ஆனால் ஜியோ நிறுவனம் 20 சதவீதம் குறைவான விலையில் கொண்டுவர இருக்கிறது. அதாவது ஜியோ ஏர் ஃபைபர் சேவை ஆனது ரூ.640-க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ நிறுவனம் செப்டம்பர் 19-ம் தேதி கொண்டுவர உள்ள ஜியோ ஏர்ஃபைபர் சேவை ஆனது ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஆக்ட் (ACT) போன்ற பிற பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுக்குக் கடுமையான போட்டியை கொடுக்கும்.
குறிப்பாகச் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய பகுதிகளில் இந்த ஜியோ ஏர் ஃபைபர் சேவை முதலில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் ஜியோ நிறுவனம் ஒரு முக்கியமான ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியது, அதற்குப் பதிலாக ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவந்தது.
அதாவது சமீபத்தில் ஜியோ நிறுவனம் தனது ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியது. குறிப்பாக இந்த ஜியோ ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1.5ஜிபி டெய்லி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜியோ ரூ.119 திட்டத்திற்குப் பதிலாக ரூ.149 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது ஜியோ நிறுவனம்.
ஜியோ (jio) ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 1 ஜிபி டெய்லி டேட்டா (1GB Daily Data) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் (100 SMS/Day) சலுகைகளை வழங்குகிறது. இதுதவிர ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud), ஜியோ டிவி (JioTV) ஆகியவற்றின் சந்தாவும் கிடைக்கும். அதேபோல் ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட திட்டம் ஆனது 20 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








