Home
News

Airtel-க்கு எதிரான அம்பானியின் ருத்ர தாண்டவம்.. 25 மாநிலங்களில் கண்ட்ரோல் எடுத்த Jio!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) லேட்டஸ்ட் அறிமுகங்களில் ஒன்றான ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) சேவையானது தற்போது மொத்தம் 25 இந்திய மாநிலங்களில் "கண்ட்ரோல்" எடுத்துள்ளது. அதாவது மேலும் பல நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விரிவடைந்துள்ளது.

முன்னதாக 21 மாநிலங்களில் அணுக கிடைத்த ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது பல புதிய நகரங்களில் அறிமுகமாகி, இப்போது மொத்தம் 25 மாநிலங்களில் அணுக கிடைக்கிறது. மேலும், ஜியோவின் இந்த லேட்டஸ்ட் சேவை அணுக கிடைக்கும் மொத்த நகரங்களின் எண்ணிக்கை 494 ல் இருந்து 500+ ஆகவும் உயர்ந்துள்ளது.

25 மாநிலங்களில் கண்ட்ரோல் எடுத்த Jio!

அடுத்த சில மாதங்களில், ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது இன்னும் அதிகமான மாநிலங்கள் மற்றும் நகரங்களில் அணுக கிடைக்கும் என்றும், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும் என்றும் ஜியோ அறிவித்துள்ளது. தற்போது ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது மொத்தம் 514 நகரங்களில் அணுக கிடைக்கிறது.

இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட மாநிலங்களின் பெயர்கள் என்ன? இந்த சேவை ஏற்கனவே எந்தெந்த மாநிலங்களில் கிடைக்கிறது? ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் அணுக கிடைக்கும் திட்டங்களின் விலை நிர்ணயம் என்ன? அவைகள் என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன? போன்ற விவரங்கள் இதோ:

25 மாநிலங்களில் கண்ட்ரோல் எடுத்த Jio!

ஜியோ ஏர்ஃபைபர் சேவை கிடைக்கும் பட்டியலில் நான்கு புதிய மாநிலங்களை ஜியோ சேர்த்துள்ளது. அந்த புதிய மாநிலங்களின் பெயர்கள் - ஹரியானா (Haryana), இமாச்சல பிரதேசம் (Himachal Pradesh), ஜம்மு & காஷ்மீர் (Jammu & Kashmir) மற்றும் பஞ்சாப் (Punjab) ஆகும்.

இந்த சேவை ஏற்கனவே இருந்த மாநிலங்களின் பெயர்கள்: தமிழ்நாடு, அசாம், சத்தீஸ்கர், டெல்லி, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், கேரளா, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மிசோரம், மகாராஷ்டிரா, ஒடிசா, நாகாலாந்து, ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம்.

25 மாநிலங்களில் கண்ட்ரோல் எடுத்த Jio!

ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது ஒரு மாநிலத்தில் தொடங்கப்பட்டால், ஒவ்வொரு மாவட்டம், நகரம் அல்லது நகரத்துக்கும் இது தொடங்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ளவும். இது உங்கள் பகுதியில் கிடைக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க, நீங்கள் ஜியோவின் கஸ்டமர் கேர் குழுவைத் தொடர்புகொள்ளலாம் அல்லது ஜியோ.காம் (jio.com) வலைதளத்தில் உள்ள ஜியோ ஏர்ஃபைபர் வலைப்பக்கத்திற்கு செல்லவும்.

நினைவூட்டும் வண்ணம் ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது கடந்த செப்டம்பர் 19, 2023 அன்று அறிமுகமானது. இந்த சேவையின்கீழ் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக பிராட்பேண்ட் அனுபவத்தை வழங்க ரிலையன்ஸ் ஜியோ அதன் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்துகிறது. இது ஜியோஃபைபர் (JioFiber) போன்றது தான், ஆனால் இதற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அதிலிருந்து வேறுபட்டது.

ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களின் விலைகள் மற்றும் நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது மொத்தம் 2 பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 திட்டங்களாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ஏர்ஃபைபர் (AirFiber) பிரிவின் கீழ் ரூ.599, ரூ.899 மற்றும் ரூ.1199 என மொத்தம் 3 திட்டங்கள் கிடைக்கின்றன.

ரூ.599 திட்டமானது 30 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடையும், ரூ.899 மற்றும் ரூ.1199 திட்டமானது 100 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடையும் வழங்குகின்றன. ஜியோவின் கூற்றுப்படி இந்த 3 திட்டங்களுமே 1000ஜிபி டேட்டாவை வழங்கும். ரூ.1199 ஆனது இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் வரும்.

ஏர்ஃபைபர் மேக்ஸ் (AirFiber Max) பிரிவின்கீழ் ரூ.1499, ரூ.2499 மற்றும் ரூ.3999 என மொத்தம் 3 திட்டங்கள் கிடைக்கின்றன. ரூ.1499 திட்டமானது 300 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடையும், ரூ.2499 திட்டமானது 500 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடையும் மற்றும் ரூ.3999 திட்டமானது 1ஜிபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடையும் வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber Service Now Available in 25 States 514 Cities All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X