வீட்டுக்கு வீடு கேபிள் டிவி.. அப்புறம் Jio எதுக்கு.. ரூ.599 போதும்.. 800 சேனல்கள்.. 14 ஓடிடி ஆப்.. 1TB டேட்டா!
கேபிள் டிவியின் நிலைமை ஏற்கனவே கவலைக்கிடமாக இருக்கும் நேரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், வெறும் ரூ.599 மதிப்பிலான திட்டத்தில் 800 டிவி சேனல்கள், 11 ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், கூடவே 1000 ஜிபிக்கான வை-பை டேட்டாவை கொடுத்து ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. ஜியோ ஏர்ஃபைபர் (Jio Airfiber) திட்டங்களின் கீழ் மலிவான விலையில் நம்ப முடியாத சலுகைகளை கொடுக்கிறது. ஆரம்பமே மூன்று மாதங்கள் வேலிடிட்டி என்றால் சொல்லவா வேண்டும்.
ஜியோ நிறுவனம், லைவ் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் டேட்டா சலுகையை ஒரே திட்டத்தில் கொடுத்து வீட்டுக்கு வீடு நுழைந்து வருகிறது. இந்த திட்டங்கள் மிகவும் மலிவான விலைக்கு கிடைப்பது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் சேவை வழங்கப்படுவதால், கஸ்டமர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் 2 திட்டங்களை பார்ப்போம்.

ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் மலிவான விலைக்கு 30 எம்பிபிஎஸ் வேகத்தில் மட்டுமே திட்டங்கள் கிடைக்கின்றன. முதல் திட்டம் ரூ.599 விலையிலும், 2ஆவது திட்டம் ரூ.888 விலையிலும் கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப ஓடிடி சலுகையில் மட்டும் வேறுபாடுகள் இருக்கின்றன. மற்றபடி 2 திட்டங்களிலும் ஒரே மாதிரியான சலுகைகளே கிடைக்கின்றன.
ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இந்த மலிவு விலை ஏர்ஃபைபர் திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதிகபட்சமாக 1000 ஜிபி ஹை-ஸ்பீடு டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக லேண்ட்-லைன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும்.
ஆனால், அதற்கான டிவைஸ்களை கஸ்டமர்கள் ஏற்கனவே வைத்திருக்க வேண்டும். இதுபோக 800+ லைவ் டிவி சேனல்களின் (Live TV Channels) சந்தாவை பெற்று கொள்ளலாம். இதற்காக வை-பை ரூட்டருடன், ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. இந்த டிவி சேனல்களுக்கு அடுத்தபடியாக 14 ஓடிடி ஆப்களின் சந்தாவை (OTT Apps Subscription) கஸ்டமர்கள் பெறலாம்.
ஆகவே, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium) மற்றும் சன்நெக்ஸ்ட் (Sun NXT) போன்ற முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. மேலும், ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆல்ட்பாலாஜி (ALTBalaji), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) சந்தா வருகிறது.
அதேபோல ஷீமாரூமீ (ShemarooMe), டாகுபே (DocuBay), எபிக்ஆன் (EPICON) மற்றும் ஈடிவி வின் (ETV Win) சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், குறைந்தது 3 மாதங்களுக்கான தொகையை ஜிஎஸ்டி கட்டணத்துடன் கட்டினால் மட்டுமே சேவை வழங்கப்படுகிறது. முதல் தடவை இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும்.
அதற்கு பிறகு மாதம் எவ்வளவு தொகை இருக்கிறதோ அதை கொடுத்தால் போதும், டேட்டா, லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும். இப்போது, 30 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் மற்றொரு ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தை பற்றி பார்க்கலாம். இந்த திட்டத்தில் முந்தைய திட்டத்தின் அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றன. ஆனால், ஓடிடியில் மட்டும் கூடுதல் சலுகை வருகிறது.
அதாவது, 800+ டிவி சேனல்கள், 30 எம்பிபிஎஸ் வேகத்தில் 1000 ஜிபி டேட்டா மற்றும் 12 ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Video Lite) சந்தா கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இந்த அமேசான் பிரைம் வீடியோ சந்தாவை 2 வருடங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








