Home
News

கேபிள் டிவிக்கு செக்.. வெறும் ரூ.599 போதும்.. 550+ டிவி சேனல்கள்.. 14 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் டேட்டா!

இந்திய டெலிகாம் மார்கெட்டே அதிரும்படி வெறும் ரூ.599 விலையில் 550+ டிவி சேனல்கள், 14 ஓடிடி ஆப்கள், 30 எம்பிபிஎஸ் வேக இன்டர்நெட் சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற பிரம்மாண்ட சலுகைகளுடன் ஜியோ ஏர்ஃபைபர் ரூ.599 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தோடு மொத்தமாக 6 ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் இன்று (செப்டம்பர் 19) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே ஆகிய 8 முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும். இதன் முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

கேபிள் டிவிக்கு செக்.. ரூ.599 போதும்.. 550+ சேனல்கள்.. 14 ஓடிடி சந்தா!

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாகும். இந்த 30 நாட்களில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவை கிடைக்கும். அதேபோல வாய்ஸ் கால்களை செய்துகொள்ள முடியும். அதோடு, 550க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் பார்த்துக்கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், 14 ஓடிடி ஆப்களின் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. அதில், ஜியோ சினிமா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, யுனிவர்சல்+, லயன்ஸ்கேட் பிளே, சன் நெக்ஸ்ட், ஹோய்சோய், டிஸ்கவரி+, ஷீமாரூமி, ஆல்ட் பாலாஜி, ஈராஸ் நவ், எபிக் ஆன் மற்றும் டாகுபேய் ஆகியவை அடங்கும்.

இந்த திட்டத்தை பெற வேண்டுமானால், நீங்கள் 6 மாதம் அல்லது 12 மாதங்களுக்கான வேலிடிட்டியை தேர்வு செய்து, அதற்கான முழு பணத்தை ஜிஎஸ்டியுடன் கட்ட வேண்டும். அப்படி கட்டினால், உங்களுக்கு 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ், வை-பை ரூட்டர் மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் வழங்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.

ஆனால், இன்ஸ்டாலேஷன் கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும். இந்த தொகை 12 மாத வேலிடிட்டியை தேர்வு செய்வோர்களுக்கு, அந்த மொத்த தொகையில் இருந்து கழிக்கப்படும். இப்படியே மற்ற அனைத்து பிளான்களுக்கும் 6 மாதம் மற்றும் 12 மாதம் வேலிடிட்டிக்கு மொத்தமாக பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், முதல்முறை மட்டுமே அவ்வளவு தொகையை கட்ட வேண்டும்.

அதன்பின் மாதாந்திரத்துக்கு எவ்வளவு தொகை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதை மட்டுமே கட்டினால் போதுமானதாகும். இப்போது, இந்த ஜியோ ஏர்ஃபைபரில் உள்ள மற்ற திட்டங்களை பார்ப்போம். இதில் ஜியோ ஏர்ஃபைபர் (JioAirFiber) மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் (JioAirFiber Max) ஆகிய இரண்டு திட்டங்களில் கீழ் தலா 3 பிளான்கள் கிடைக்கின்றன.

ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள்: இதில் முதலாவது திட்டம் ரூ.599 விலையில் கிடைக்கிறது. இதில் 30 எம்பிபிஎஸ் வேகம், 550க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், 14 ஓடிடி ஆப்கள் சலுகை கிடைக்கும். இதற்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இரண்டாவது திட்டம் ரூ.899 விலையில் கிடைக்கிறது. இதிலும் மேற்கூறிய திட்டத்தின் சலுகைகள் கிடைக்கிறது.

ஆனால், கூடுதலாக 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. இறுதியாக ரூ.1,199 விலையில் மூன்றாவது திட்டம் கிடைக்கிறது. இதிலும் 2ஆவது திட்டத்தின் சலுகைகள் கிடைக்கிறது. அதேவேளையில் 14 ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக அமேசான் பிரைம் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும்.

ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டங்கள்: இதில் முதலாவதாக உள்ள ரூ.1,499 திட்டத்துக்கு 300 எம்பிபிஎஸ் வேகத்திலும், இரண்டாவதாக உள்ள ரூ.2,499 திட்டத்துக்கு 500 எம்பிபிஎஸ் வேகத்திலும், மூன்றாவதாக உள்ள ரூ.3,999 திட்டத்துக்கு 1000 எம்பிபிஎஸ் வேகத்திலும் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. இந்த மூன்று திட்டங்களுக்கும் 550க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், 14 ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் சப்ஸ்கிரிப்சன் கிடைக்கிறது.

இந்த மேக்ஸ் திட்டங்கள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இவற்றை புக் செய்ய வேண்டுமானால், அருகில் உள்ள ஜியோ ஸ்டோர்களை அனுகலாம் அல்லது 60008-60008 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் மிஸ்டு கால் கொடுக்கலாம். மிகவும் மலிவான விலையில் ஓடிடி மற்றும் டிவி சேனல்கள் கிடைப்பதால், இந்த திட்டங்கள் மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber Rs 599 Plan With 30 Mbps Speed Unlimited Data, Voice, 550 TV Channels, 14 OTT Apps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X