Home
News

கேபிள் டிவி வேணமா? மாதம் ரூ.599 போதும்.. 550+ டிவி சேனல்கள்.. 13 ஓடிடி சந்தா.. வாய்ஸ் கால்கள்!

வெறும் ரூ.599 செலவில் 550+ டிவி சேனல்கள், அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் போன்ற 13 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனை கொடுக்கும் ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) திட்டத்தின் முழு விவரங்களை 2024ஆம் ஆண்டில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இதுவொரு போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), ஓடிடி (OTT) சலுகைகள் மட்டுமல்லாமல், டிவி சேனல்கள் (TV Channels) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

கேபிள் டிவி வேணமா? மாதம் ரூ 599 போதும்.. 550+ டிவி சேனல்.. 13 ஓடிடி!

இந்த திட்டத்தை பெற்றால், 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை வழங்கப்படுகிறது. அதேபோல லேண்ட்லைன் கனெக்சன் (Landline Connection) மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Call) செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், 13 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனை பெற்று கொள்ளலாம்.

ஆகவே, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜியோ சினிமா (JioCinema), சன் நெக்ஸ்ட் (Sun NXT), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஷீமாரூமி (ShemarooMe), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் ஆல்ட் பாலாஜி (ALTBalaji) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

அதேபோல எபிக் ஆன் (EPICON), ஈராஸ் நவ் (Eros Now) மற்றும் டாகுபேய் (DocuBay) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனும் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகள் போக 550+ டிவி சேனல்களை வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்ளலாம். இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

கேபிள் டிவி வேணமா? மாதம் ரூ 599 போதும்.. 550+ டிவி சேனல்.. 13 ஓடிடி!

இந்த திட்டத்துக்கு மாதாந்திர கட்டணமாக ரூ 599 நிர்ணயம் செய்யப்பட்டாலும், முதல் முறை பெறும்போது வாடிக்கையாளர்கள் 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான பணத்தை முழுவதும் செலுத்த வேண்டும். அதோடு ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தை செலுத்தி பிறகே உங்களுக்கு சேவைகள் வழங்கப்படும்.

அதாவது, 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் (4K set-top box), வை-பை ரூட்டர் (Wi-Fi Router) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) ஆகியவை உங்களது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதை இன்ஸ்டாலேஷன் செய்த பிறகு ஜியோஏர்பைபர் சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்துக்கு ஜிஎஸ்டி இல்லாமல் 6 மாதங்களுக்கு ரூ 3594 தேவைப்படுகிறது. ஆகவே, 180 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா, ஓடிடி மற்றும் டிவி சேனல் சலுகைகள் கிடைப்பதால் சற்று நல்ல திட்டமாகவே தெரிகிறது. ஏனென்றால், மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இந்த விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல், திருப்பூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி போன்ற பெரும்பாலான பகுதிகளிலும் கிடைக்கிறது.

இந்த திட்டங்களை புக்கிங் செய்ய ஜியோ வெப்சைட், ஜியோ ஆப் மற்றும் அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோர் (Jio Store) ஆகியவற்றை பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், 60008-60008 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், திட்டங்கள் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். அதன் மூலமும் புக்கிங் செய்து கொள்ளலாம். இதற்கு பெயர், முகவரி, இமெயில் மற்றும் மொபைல் நம்பர் அவசியமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber Rs 599 Plan Unlimited Data, Voice Call 550 TV Channels, 14 OTT Apps Check Postpaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X