கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட்டி!
கேபிள் டிவி கஸ்டமர்களை ஒட்டுமொத்தமாக ஜியோவுக்கு மாற்றும்படியான விலையில் 4K செட்-டாப் பாக்ஸ் மூலம் 800 டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்நெக்ஸ்ட், ஜீ5 உள்ளிட்ட 14 ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே டிவியை பார்த்த காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இப்போது, தனித்தனியே மொபைலில் ஓடிடியை பார்க்கும் பழக்கத்துக்கு வந்துவிட்டோம். இந்த ஓடிடி ஆப்களின் சந்தா டிடிஎச் (DTH) சேவைகளிலும் வழங்கப்படுவதால், பாரம்பரிய கேபிள் டிவியின் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது.

இதை அடியோடு தூக்கியெறியும்படி ஜியோ நிறுவனம், இப்போது ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. ஜியோ ஏர்ஃபைபர் என்னும் ஒரே திட்டத்தில் இன்டர்நெட் சேவை மட்டுமல்லாமல், டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் என்று மொத்த சலுகைகளையும் வழங்குகிறது. இதற்கு வை-பை ரூட்டர் மற்றும் 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொடுத்து கஸ்டமர்களை எளிதாக கவர்கிறது.
இந்த ஏர்ஃபைபர் திட்டங்களின் விலையை கேட்டால் மூக்கில் விரல் வைக்கும்படி கம்மியாக இருக்கிறது. இருப்பினும், குறைந்தது 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான தொகையை மொத்தமாக செலுத்தினால் மட்டுமே இந்த சேவை கிடைத்தது. ஆனால், இப்போது 3 மாதங்களுக்கான தொகையை செலுத்தினாலே சேவையை வழங்க தொடங்கிவிட்டது.
இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் வெறும் ரூ.599 முதல் தொடங்குகின்றன. இந்த தொகையிலேயே டிவி சேனல்கள், ஓடிடி சந்தா, பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை மட்டுமல்லாமல், அதற்காக டிவைஸ்களும் வழங்கப்படுகிறது. இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தின் முழு சலுகைகள் மற்றும் எப்படி பெறலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளும் கிடைக்கிறது.
இதுபோக 800+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். அதேபோல டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, ஜியோசினிமா, சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், டிஸ்கவரி பிளஸ், ஆல்ட்பாலாஜி, ஈராஸ் நவ், லயன்ஸ்கேட் பிளே, டாக்கு பே, எபிக்ஆன், ஈடிவி வின் மற்றும் ஷீமாரூமி ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
இன்டர்நெட் சேவைக்கு வை-பை ரூட்டர் மற்றும் டிவி சேனல் சலுகைக்கு 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஓடிடி ஆப்களை பார்க்க இந்த டேட்டாவை பயன்படுத்தலாம். ஆனால், டிவி சேனல்களை வழக்கம் போல இன்டர்நெட் இல்லாமல் பார்த்து கொள்ளலாம். இந்த திட்டமானது, தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கிறது.
இந்த திட்டத்தை பெறுவது எப்படி? ஜியோ ஆப், ஜியோ வைப்சைட் மற்றும் அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோர்கள் மூலம் இந்த ஏர்ஃபைபர் திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த திட்டத்துக்கான தொகையை 3 மாதங்களுக்கும் சேர்த்து செலுத்த வேண்டும். அதாவது, இந்த திட்டத்தின் விலை ரூ.599 என்றால், ரூ.1797 செலுத்த வேண்டும்.
இந்த தொகையுடன் ஜிஎஸ்டி தொகையும் வசூலிக்கப்படும். ஆகவே, மொத்த தொகையையும் செலுத்திவிட்டால், உங்களின் வீட்டுக்கே வை-பை ரூட்டர், 4K செட்-டாப் பாக்ஸ் வந்துவிடும், அதை இன்ஸ்டால் செய்த பிறகு சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். முதல்முறை டிவைஸ்களை பெறும்போது மட்டுமே இந்த தொகை தேவைப்படும்.
அதற்கு பிறகு மாதம் எவ்வளவு கட்டணமோ அதை மட்டுமே செலுத்தி சேவைகளை தொடர்ந்து பெற்று கொள்ளலாம். இந்த ஏர்ஃபைபர் திட்டங்களை பெற வேண்டுமானால், ஜியோ சிம் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆகவே, திட்டத்தை புக்கிங் செய்யும் முன்பு ஜியோ சிம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








