கொடுத்துவச்ச Jio பயனர்கள்.. குறைந்த விலையில் இவ்வளவு சலுகைகளா? அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. எந்த திட்டம்?
ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ (jio) நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனம் கொண்டுவந்த ஏர்ஃபைபர் திட்டம் ஒன்று மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்
ஜியோ நிறுவனம் முன்பு 1, 6, 12 மாத வேலிடிட்டி உடன் ஏர்ஃபைபர் திட்டங்களை வழங்கி வந்தது. ஆனால் தற்போது கம்மி பட்ஜெட்டில் 3 மாத திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த 3 மாத திட்டம் ஆனது 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அதிக வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்டம் (Jio AirFiber Rs 599 Plan) தான் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவையை வழங்குகிறது. குறிப்பாக இது ஒரு என்ட்ரி லெவல் திட்டம் (பிளான்) ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 1000ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. மேலும் பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த புதிய திட்டம்.
அதாவது டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலைவ், ஜீ5, ஜியோ சினிமா, சன் நெக்ஸ்ட், ஹோய்சாய், டிஸ்கவரி+, ஏஎல்டி பாலாஜி, ஈரோஸ் நவ், லயன்ஸ்கேட் பிளே, ஷெர்மாரூமே, டோகுபே, எபிக்ஆன், ஈடிவி வின் ஆகிய 14 ஓடிடி தளங்களின் இலவச சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். பின்பு இதனுடன் 800க்கும் மேற்பட்ட டிமாண்ட் டிவி சேனல்கள் பார்க்கலாம்.

மேலும் ஹைஸ்பீடு விரும்பும் பயனர்களுக்கு 100 எம்பிபிஎஸ் பிளான் இரண்டு அடுக்குகளாக வழங்கப்படுகிறது. அதாவது மாதம் ரூ.899 கட்டணத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் ஓடிடி சேனல்களை பார்க்கலாம். பின்பு மாதம் ரூ.1199 கட்டணத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் சந்தாக்களும் கிடைக்கும்.
இதுதவிர ஜியோ காலாண்டு திட்டங்கள் (Jio AirFiber quarterly plans) 300 எம்பிபிஎஸ், 500 எம்பிபிஎஸ், 1 ஜிபிஎஸ் வேகத்தில் தலா ரூ.1499, 2499, ரூ.3999 ஆகிய கட்டணத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு பெறும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.
அதாவது உங்களது பகுதியில் ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு உள்ளதா என்பதை மைஜியோ ஆப் (MyJio app), ஜியோ வைப்சைட் பயன்படுத்திப் பார்க்கவும். அல்லது கஸ்டமர் கேரில் தெரிந்து கொள்ளலாம்.
புக்கிங் செய்வது எப்படி? நீங்கள் 60008-60008 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால்டு கொடுக்கவும். பின்பு ஜியோ ஜியோ வெப்சைட்டுக்கு சென்று அல்லது உங்களுக்கு அருகில் உள்ள ஜியோ ஸ்டோருக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக தனிப்பட்ட ஆவணங்களைக் கொடுத்து ஜியோ எர் ஃபைபர் இணைப்பைப் பெறலாம்.

குறிப்பாக இணைப்பு உறுதியானதும் ஜியோ நிறுவனம் உங்களின் லொகேஷனுக்கு ஏர்ஃபைபர் பேக்கேஜ் அனுப்பும். தொடர்ந்து ஒரு டெக்னீஷயன் வந்து இன்ஸ்டலேஷனை செய்து தருவார். அதேபோல் இந்த புதிய 3 மாத திட்டத்தின் மூலம் ஜியோ நிறுவனத்தின் அதிவேக இன்டர்நெட் சேவையை கூடுதல் வேகத்துடன் வாடிக்கையாளர்களின் குறுகிய கால விருப்பத்துக்கு ஏற்ப தருகிறது. இந்த 3 மாத திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications