Home
News

ஜியோவுக்கு கும்பிடு.. ரூ.599 போதும்.. 550 டிவி சேனல்.. 14 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் டேட்டா.. ஏர்டெல்லில் மிஸ்!

ஜியோ ஏர்ஃபைபரில் (Jio AirFiber) குறைந்தபட்ச விலை கொண்ட ரூ.599 திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா, 550+ டிவி சேனல்கள், 14 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் போன்ற சலுகைகள் கிடைக்கும்போது, ரூ.799 விலை கொண்ட ஏர்டெல் ஏர்ஃபைபர் (Airtel AirFiber) திட்டத்தில் என்ன கிடைக்குமென்று நினைக்கிறீர்கள்?

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இந்த திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவை வழங்கப்படும். அதேபோல லேண்ட்லைன் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், 550க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்.

ஜியோவுக்கு கும்பிடு.. ரூ.599 போதும்.. 550 டிவி சேனல்.. 14 ஓடிடி சந்தா!

இதுபோக, 14 ஓடிடி ஆப்களின் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. ஆகவே, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, சன் நெக்ஸ்ட், சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, யுனிவர்சல்+, டிஸ்கவரி+, ஷீமாரூமி, ஹோய்சோய், ஆல்ட் பாலாஜி, எபிக் ஆன், ஈராஸ் நவ், மற்றும் டாகுபேய் ஆகியவற்றை பார்த்துக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆனால், இதை பெற வேண்டுமானால், நீங்கள் 6 மாதம் அல்லது 12 மாதங்களுக்கான வேலிடிட்டியை தேர்வு செய்து, அதற்கான முழு பணத்தை கட்ட வேண்டும். அதோடு ஜிஎஸ்டியும் கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த பணத்தை கட்டிய பின்பு, உங்களுக்கு 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ், வை-பை ரூட்டர் மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கொடுக்கப்படும்.

இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது. ஆனால், இன்ஸ்டாலேஷன் கட்டணமாக ரூ.1000 கட்ட வேண்டும். ஆகவே, 6 மாத திட்டத்தை தேர்வு செய்கிறீர்கள் என்றால், ரூ.3,594 மற்றும் ஜிஎஸ்டி தொகையை கட்டினால், மேற்கூறிய அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

இப்படியே ஜியோ ஏர்ஃபைபரின் மற்ற அனைத்து பிளான்களுக்கும் 6 மாதம் மற்றும் 12 மாத வேலிடிட்டிக்கு மொத்தமாக பணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல ஜியோ ஏர்ஃபைபரில் 6 பிளான்கள் கிடைக்கின்றன. ஆனால், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபரில் ஒரேவொரு திட்டம் மட்டுமே இருக்கிறது. அதைப் பற்றி இப்போது, விரிவாக பார்ப்போம்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ரூ 799 திட்ட விவரங்கள் (Airtel Xstream AirFiber Rs 799 Plan Details): இந்த திட்டத்தில் வயர்லெஸ் ஹோம் இன்டர்நெட் டிவைஸ் வழங்கப்படும். இதில் 5ஜி சேவை கொடுக்கப்படுகிறது. 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அதிவேக இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். இதில் அதிகபட்சமாக 64 டிவைஸ்களை கனெக்ட் செய்து இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதற்கு எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ஆப் (Xstream AirFiber App) மூலம் கியூஆர் கோட் பயன்படுத்தி, கனெக்ட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆனால், முதல்முறை இந்த திட்டத்தை பெற வேண்டும் என்றால், 6 மாதத்துக்கான பணத்தை மொத்தமாக செலுத்த வேண்டும். அதோடு 18 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் ரூ.2,500 செக்யூரிட்டி டெபாசிட் செய்ய வேண்டும். இந்த டெபாசிட் தொகை திரும்ப கொடுக்கப்பட்டுவிடும்.

நீங்கள் 6 மாதத்துக்கான பணத்தை செலுத்தும்போது, ரூ.359 சலுகை வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெற ரூ.7,733 மற்றும் ஜிஎஸ்டி தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இந்த திட்டத்தில் ஓடிடி மற்றும் டிவி சேனல்கள் சலுகை கொடுக்கப்படாது. ஆனால், முதலில் பார்த்த ஜியோ திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேக இன்டர்நெட் மட்டுமே கிடைக்கும். இதில் 100 எம்பிபிஎஸ் வேகம் கிடைக்கும்.

ஒருவேளை ஜியோவில் 100 எம்பிபிஎஸ் வேகம் வேண்டுமானால், நீங்கள் ரூ.899 விலையில் கிடைக்கும் ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தை தேர்வு செய்யலாம். அதில், 100 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் ரூ.599 திட்டத்தில் கிடைக்கும் மற்ற சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். இந்த திட்டத்துக்கு 6 மாத வேலிட்டிக்கான செலவு ரூ.5,394 மற்றும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். இது ஏர்டெல்லின் ரூ.799 திட்டத்தை விட கம்மியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber Rs 599 Plan Data, TV Channels, OTT Apps VS Airtel Xstream AirFiber Rs 799 Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X