ஜியோவுக்கு தீபாவளி.. ரூ.599 போதும்.. தமிழ்நாட்டின் 22 சிட்டிகளில் டேட்டா.. 550 டிவி சேனல்.. 14 ஓடிடி சந்தா!
ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள், இப்போது 115 நகரங்களில் கிடைக்கிறது. அதில் தமிழ்நாட்டின் கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 22 நகரங்கள் வருகிறது. இந்த நேரத்தில் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் எப்படி? அவற்றை பெறுவது எப்படி? உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த திட்டங்கள் ஜியோ ஏர்ஃபைபர் (JioAirFiber) மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் (JioAirFiber Max) என்று 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் தலா 3 திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த 6 திட்டங்களிலும் டேட்டா, வாய்ஸ் கால்கள், டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. இப்போது, இந்த திட்டங்களின் விவரங்களை சுருக்கமாக பார்ப்போம்.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இந்த திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படுகிறது. 550+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 உள்ளிட்ட 14 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும்.
ஜியோ ஏர்ஃபைபர் ரூ 899 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 899 Plan Details): இந்த திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 550+ டிவி சேனல்கள் சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே சோனிலிவ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட 14 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
ஜியோ ஏர்ஃபைபர் ரூ 1199 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 1199 Plan Details): இந்த திட்டத்திலும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. அதோடு 550+ டிவி சேனல்கள் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 உள்ளிட்ட 16 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 1499 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 1499 Plan Details): இந்த திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படுகிறது. அதோடு அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 உள்ளிட்ட 16 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். அதேபோல 550+ டிவி சேனல்களை பார்த்துகொள்ளலாம்.
ஜியோ ஏர்ஃபைபர் ரூ 2499 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 2499 Plan Details): இந்த திட்டத்தில் 500 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 550+ டிவி சேனல் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனிலிவ், ஜீ5 உள்ளிட்ட 16 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
ஜியோ ஏர்ஃபைபர் ரூ 3999 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 3999 Plan Details): இந்த திட்டம் அதிகபட்ச சலுகை கொண்டதாகும். இதில் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெறலாம். அதேபோல டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனிலிவ், ஜீ5 உள்ளிட்ட 16 ஓடிடி ஆப்கள் மற்றும் 550+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.
இந்த திட்டங்கள் அனைத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இருப்பினும், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான வேலிடிட்டியை தேர்வு செய்து அதற்கான மொத்த பணத்தையும் கட்டினால் மட்டுமே, இவற்றை பெற முடியும். அதோடு ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். இந்த தொகை முதல்முறை திட்டத்தை பெற மட்டுமே, அதன்பிறகு திட்டத்துக்கான தொகையை மட்டுமே செலுத்தினால் போதும்.
இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களை, ஜியோ வெப்சைட், ஜியோ ஆப் அல்லது அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோர் (Jio Store) மூலம் புக்கிங் செய்து பெற்று கொள்ளலாம். அதோடு 60008-60008 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் புக்கிங் செய்து கொள்ள முடியும். இத்திட்டங்களை பெற உங்களது பெயர், முகவரி, இமெயில் மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும்.
ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களை பெறும் கஸ்டமர்களுக்கு வை-பை ரூட்டர், 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் வழங்கப்படுகிறது. முன்னதாக 8 நகரங்களில் மட்டுமே கிடைத்துவந்த நிலையில், இப்போது 115 நகரங்களில் கிடைக்கிறது. இதில் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, ஈரோடு, ஓசூர், திருப்பூர் உள்ளிட்ட 22 நகரங்கள் வருகிறது.


Click it and Unblock the Notifications