கேபிள் டிவி காலி.. கிராமங்களில் ஜியோ.. ரூ.599 போதும்.. 550+ டிவி சேனல்கள்.. 14 ஓடிடி.. அன்லிமிடெட் டேட்டா!
ஓடிடி வருகையால் கேபிள் டிவி மார்கெட் மெல்ல மெல்ல காணாமல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், ஜியோ நிறுவனமானது கிராமங்கள் முதல் டவுன்கள் வரையில் ஜியோ ஏர்ஃபைபர் (JioAirfiber) திட்டங்களை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், ஒரே திட்டத்தில் டிவி சேனல்கள், ஓடிடி மற்றும் டேட்டாவை கொடுக்கிறது.
ஆரம்பத்தில் முக்கிய நகரங்களில் மட்டுமே, இந்த ஜியோ ஏர்ஃபைபர் சேவைகள் கொடுக்கப்பட்டன. இப்போது, இந்தியா முழுவதும் பெரும்பாலான நகரங்கள் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் சேவைகள் கிடைக்கின்றன. அண்மையில் மணிப்பூர், மிசோரம், மேகாலாயா போன்ற மலை பிரதேசங்கள் உள்பட 136 நகரங்களில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மலை பிரதேசங்களிலேயே ஜியோ இப்படி சேவைகளை விரிவுபடுத்துகிறது என்றால், கேபிள் டிவி பயன்பாட்டில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்ட தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு சேவைகள் விரிவுபடுத்தப்படுத்தி இருக்கும் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் சேவைகள் கிடைக்கின்றன.
இப்போது, 270-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஜியோ ஏர்ஃபைபர் சேவையை பெற்று கொள்ளலாம். கேபிள் டிவிக்கு மாற்றாக வரும் அளவுக்கு இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் (JioAirfiber Plan) அப்படியென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களை பெறும் வாடிக்கையாளர்களுக்கு டிவி சேனல்களுக்காக 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் (4K Smart Set-Top Box) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், டிவி, மொபைல், லேப்டாப் போன்ற டிவைஸ்களில் டேட்டா பயன்பாட்டுக்காக வை-பை ரூட்டர் (Wi-Fi Router) கொடுக்கப்படுகிறது.

இதுபோக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளங்களில் சந்தாவை ஒட்டுமொத்தமாக கொடுக்கிறது. இப்படி, டேட்டா ரீசார்ஜ், ஓடிடி சந்தா, கேபிள் டிவி சந்தா ஆகிய அனைத்தையும் ஒரே திட்டத்தில் கீழ் கொடுப்பது மட்டுமல்லாமல், மலிவான விலையில் திட்டங்கள் அறிவித்துள்ளதால், மிகப்பெரிய மாற்றத்துக்கு இது வழிவகுத்துள்ளது.
ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களை எப்படி பெறுவது? இந்த திட்டங்களை ஜியோ வெப்சைட், ஜியோ ஆப் மற்றும் உங்களது பகுதியில் இருக்கும் ஜியோ ஸ்டோர் (Jio Store) மூலம் பெற்று கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், 60008-60008 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், வாடிக்கையாளர் சேவை மூலம் புக்கிங் செய்து கொள்ள முடியும்.
இந்த ஜியோ ஏர்ஃபைபர் சேவைகள் உங்களது பகுதிகளில் கிடைக்கிறதா? என்பதை ஜியோ ஆப் அல்லது வெப்சைட் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டங்கள் வெறும் ரூ.599 முதல் தொடங்குகின்றன. ஆனால், முதலில் சேவைகளை பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான கட்டணத்தை முழுவதும் செலுத்த வேண்டும்.
அதாவது, மாதத்துக்கு ரூ.599 கட்டணம் என்றால், அதை 6 மாதங்களுக்கு சேர்த்து செலுத்தினால் மட்டுமே சேவைகளை பெற முடியும். அதோடு ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். ஏனென்றால், ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ், வை-பை ரூட்டர், ரிமோட் போன்ற டிவைஸ்கள் இந்த திட்டங்களில் கொடுக்கப்படுகிறது. முதல் முறைக்கு பிறகு வரும்காலத்தில் மாதத்துக்கான தொகையை மட்டுமே செலுத்தினால் போதும்.
ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் 550+ லைவ் டிவி சேனல்களை பார்த்துகொள்ளலாம். 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
ஒடிடி சந்தாவை பார்க்கையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (Zee5), ஜியோ சினிமா (JioCinema), சன் நெக்ஸ்ட், ஹோய்சோய், டிஸ்கவரி பிளஸ், ஆல்ட்பாலாஜி, ஈராஸ்நவ், லயன்ஸ்கேட்ஸ்பிளே, ஷீமாரூமீ, டாகுபே, எபிக்ஆன், ஈடிவிவின் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். 6 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








