கேபிள் டிவிக்கு நெத்தி அடி.. வெறும் ரூ.599 போதும்.. 550 டிவி சேனல்கள்.. 14 ஓடிடி சந்தா.. எப்படி பெறுவது?
இந்திய டெலிகாம் மார்கெட்டையே அதிரவிடும்படி வெறும் ரூ.599 விலையில் அன்லிமிடெட் இன்டர்நெட், 550+ டிவி சேனல்கள், 14 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் போன்ற சலுகைகளை வழங்கும் ஜியோ ஏர்ஃபைபர் (JioAirfiber) திட்டங்களை, எவ்வாறு பெறுவது? என்பதை விளக்குகிறது இந்த செய்தி.
ஜியோ ஏர்ஃபைபர் புக்கிங் (JioAirfiber Booking): இந்த ஏர்ஃபைபர் திட்டங்கள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே ஆகிய நகங்களில் மட்டுமே கிடைக்கின்றன. இந்த நகரங்களில் வசிக்கும் கஸ்டமர்கள் ஜியோ வெப்சைட், ஜியோ ஆப் மற்றும் அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோர் (Jio Store) மூலம் புக்கிங் செய்து கொள்ளலாம்.

அதேபோல 60008-60008 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் புக்கிங் செய்து கொள்ளலாம். இவை அனைத்திலும், உங்களது பெயர், முகவரி, இமெயில் மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும். அதோடு ஜியோ ஏர்ஃபைபரில் உள்ள திட்டங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிருக்கும். இதை முடித்த பின்பே, உங்களுக்கு ஜியோ ஏர்ஃபைபர் சேவைகள் வழங்கப்படும்.
ஜியோ ஏர்ஃபைபர் விலை (JioAirfiber Price): இந்த ஏர்ஃபைபரில் மொத்தம் 6 திட்டங்கள் உள்ளன. இந்த அனைத்து திட்டங்களுக்கும் 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டங்களை பெற வேண்டுமானால், நீங்கள் 6 மாதம் அல்லது 12 மாதங்களுக்கான வேலிடிட்டியை தேர்வு செய்து, அதற்கான முழு பணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
அதோடு ஜிஎஸ்டி தொகையும் வசூலிக்கப்படும். அதாவது, நீங்கள் ரூ.599 விலை கொண்ட திட்டத்தை பெற வேண்டுமானால், அதன் 6 மாதத்துக்கான தொகை ரூ.3,594 மற்றும் ஜிஎஸ்டி தொகையை சேர்த்து கட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல், முதல்முறை இன்ஸ்டாலேஷன் கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும். இந்த தொகைகளை செலுத்திவிட்டால், தொடர்ந்து 6 மாதங்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு பின்பு, ஒரு மாதத்துக்கான தொகையை மட்டும் கட்டி திட்டங்களை தொடரலாம்.
ஜியோ ஏர்ஃபைபர் நன்மைகள் (JioAirfiber Benefits): மேற்கூறிய தொகையை கட்டிய பின்பு, உங்களுக்கு 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் (4K Smart Set-Top Box), வை-பை ரூட்டர் (Wi-Fi Router) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) வழங்கப்படும்.
இதற்காக கூடுதல் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது கிடையாது. இதன் மூலம் ஓடிடி (OTT), டிவி சேனல்கள் (TV Channel) மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) பயன்படுத்திக் கொள்ள முடியும். இப்போது, ஜியோ ஏர்ஃபைபரில் கிடைக்கும் 6 திட்டங்களின் சலுகைகளை விரிவாக பார்ப்போம்.
ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த நாட்களில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவை வழங்கப்படும். அதோடு 550+ டிவி சேனல்களை பார்த்துகொள்ளலாம்.
மேலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (Zee5), ஜியோ சினிமா, சன் நெக்ஸ்ட், லயன்ஸ்கேட் பிளே, யுனிவர்சல்+, ஷீமாரூமி, ஹோய்சோய், டிஸ்கவரி+, ஆல்ட் பாலாஜி, ஈராஸ் நவ், எபிக் ஆன் மற்றும் டாகுபேய் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும்.
ஜியோ ஏர்ஃபைபர் ரூ 899 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 899 Plan Details): இந்த திட்டத்தில் மேற்கூறிய திட்டத்தின் டிவி சேனல்கள், ஓடிடி மற்றும் வேலிடிட்டி சலுகைகள் அனைத்தும் கொடுக்கப்படுகிறது. ஆனால், டேட்டா வேகம் மட்டும் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது.
ஜியோ ஏர்ஃபைபர் ரூ 899 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 899 Plan Details): இந்த திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் சேவை கிடைக்கும். 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். மேற்கூறிய திட்டத்தில் கிடைக்கும் ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும்.
இதே ஓடிடி, டிவி சேனல்கள் மற்றும் வேலிடிட்டி சலுகைகளுடன் ரூ.1,499, ரூ.2,499 மற்றும் ரூ.3,999 விலை கொண்ட திட்டங்கள் வருகின்றன. ஆனால், அவற்றில் டேட்டா வேகம் கூடுதலாக இருக்கிறது. அந்த வகையில் முறையே 300 எம்பிபிஎஸ், 500 எம்பிபிஎஸ் மற்றும் 1 ஜிபிபிஎஸ் டேட்டா வேகத்தில் மேற்கூறிய திட்டங்களுக்கு இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








