Home
News

மாஸ் காட்ட நினைத்த Jio.. புது ரூ.401 திட்டம்.. 1TB டேட்டா.. யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? இது பெஸ்ட்டா?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென ரூ.401 விலையில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அதன் Jio 5G FWA சேவையின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 1TB டேட்டா நன்மையை வழங்குகிறது.

இந்த திட்டம் யாருக்கெல்லாம் கைகொடுக்கும்? இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி எவ்வளவு? உண்மையிலேயே இந்த திட்டத்தை யார் எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற முழு விபரம் இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது. வாருங்கள் விஷயத்திற்கு செல்லலாம். ஜியோ இந்த திட்டத்தை அதன் ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

மாஸ் காட்ட நினைத்த Jio.. புது ரூ.401 திட்டம்.. 1TB டேட்டா.. யாருக்கு?

இதுவொரு சாதாரண திட்டம் அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விலையில் 1TB டேட்டா கிடைக்கிறது என்றவுடன் ஜியோ பயனர்கள் உடனே குஷி அடைந்திருப்பார்கள். ஆனால், ஜியோவின் சூட்சமம் இங்கே தான் ஒளிந்திருக்கிறது. இந்த திட்டத்தை நீங்கள் பெற வேண்டும் என்றால், ஜியோவின் அடிப்படை திட்டங்களில் ஏதேனும் ஒன்றை பயனர்கள் முதலில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.

ஜியோவின் புது ஜியோ ஏர்ஃபைபர் ரூ.401 பிளான் (Jio AirFiber Rs 401 Plan):

ஜியோவின் ஏர்ஃபைபர் () திட்டங்கள் ரூ.599, ரூ.899 மற்றும் ரூ.1199 விலையில் வருகிறது. அல்லது, ஜியோ பயனர்கள் ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் பிளான் (Jio AirFiber Max Plans) திட்டங்களான ரூ.1499, ரூ.2499 மற்றும் ரூ.3999 திட்டங்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இந்த திட்டங்கள் அணைத்தும் ஜியோ ஏர்ஃபைபர் சேவையை ஆக்டிவ் மோடில் வைக்க உதவும் திட்டங்களாகும்.

ஜியோ 1TB டேட்டா நன்மை (Jio 1TB data benefits):

ஜியோ புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ.401 திட்டம் உங்கள் ஜியோ ஏர்ஃபைபர் புது சேவையை ஆக்டிவ் செய்ய உதவாது, காரணம் இந்த திட்டம் ஒரு டேட்டா பூஸ்டர் போல செயல்படுகிறது. இந்த திட்டம் 401 ரூபாய் விலையில் 1TB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது ஒரு பில்லிங் சைக்கிள் காலம் வரை மட்டுமே செல்லுபடியாகும்.

மாஸ் காட்ட நினைத்த Jio.. புது ரூ.401 திட்டம்.. 1TB டேட்டா.. யாருக்கு?

அதாவது, உங்கள் புதிய பில் ஜெனெரேட் செய்யப்படும் போது, இதன் வேலிடிட்டி நிறைவடைந்துவிடும். இந்த காலத்திற்குள் நீங்கள் பயன்படுத்தாத டேட்டா மிச்சம் இருந்தால், அதுவும் செல்லாமல் போய்விடும் என்று ஜியோ கூறியுள்ளது. உங்களுக்கு மீண்டும் கூடுதல் டேட்டா தேவைப்படுகிறது என்றால், நீங்கள் மீண்டும் ஒரு முறை ரூ.401 திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்த திட்டம் யாருக்கெல்லாம் கைகொடுக்கும்? (To whom this plan helps):

இந்த கூடுதல் டேட்டா பூஸ்டர் எல்லோருக்கும் தேவைப்படாது என்பதே உண்மையாகும். காரணம், ஜியோ வழங்கும் அதன் ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்துடன் 3.3TB டேட்டா 100Mbps வேகத்துடன் ஒவ்வொரு மாதமும் கிடைக்கிறது. இந்த FUP வரம்பை மீறும் ஹெவி டேட்டா யூசர்களுக்கு மட்டுமே இந்த டேட்டா பூஸ்டர் திட்டம் கைகொடுக்கும் என்பதே எங்களுடைய கருத்தாகும்.

இப்போது ஜியோ ஏர்ஃபைபர் சேவை இந்தியாவில் 21 மாநிலங்களில் 494 நகரங்களில் கிடைக்கிறது. இந்த 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் அதிக நகரங்களில் ஜியோ சேவை விரிவடையும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், Jio AirFiber இணையப் பக்கத்திற்குச் செல்லலாம். அல்லது ஜியோவின் இலவச அழைப்பு எண் ஆன 60008-60008 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்து முன்பதிவு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber Rs 401 Plan Is a Data Booster Comes With 1TB Data Benefits To Whom This Plan Suits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X