கேபிள் டிவி முடிஞ்சு.. அம்பானி இறக்கிய 3 மாத ஆஃபர்.. 800+ டிவி சேனல்.. 10+ ஓடிடி சந்தா.. 30Mbps வேக டேட்டா!
ஜியோ (Jio) நிறுவனம் தீபாவளி தமாகா ஆஃபர் (Diwali Dhamaka Offer) மூலம் அடிமட்ட விலைக்கு 3 மாத வேலிடிட்டி மட்டுமல்லாமல், 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா, 800+ லைவ் டிவி சேனல்கள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் உள்ளிட்ட 12 ஓடிடி ஆப்களின் சந்தா போன்ற சலுகைகளை கொண்ட புதிய ஏர்ஃபைர் திட்டத்தை (New Aifiber Plan) களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகள் என்ன? எப்படி புக்கிங் செய்வது? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
இந்த திட்டத்தில் வை-பை டேட்டா, லைவ் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் போன்ற அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, அதற்கு ஏற்ப வை-பை ரூட்டர், 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் போன்ற டிவைஸ்களும் வழங்கப்படுகின்றன. 100 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. ஆகவே, டிவி, மொபைல், லேப்டாப் போன்ற மல்டிபிள் டிவைஸ்களில் பயன்படுத்தலாம்.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 2222 திட்ட விவரங்கள் (Jio Airfiber Rs 2222 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்துக்கு 3 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 3 மாதங்களில் வை-பை ரூட்டர் மூலம் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டா வரையில் பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபோக 100 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimted Voice Calls) செய்து கொள்ளலாம். 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் 800+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்த ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் ஓடிடி ஆப்களையும் பார்த்து கொள்ள முடியும். ஏனென்றால், இந்த திட்டத்தில் 12 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) கிடைக்கிறது.
அதேபோல சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), ஆல்ட்பாலாஜி (ALTBalaji), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஜியோடிவிபிளஸ் (JioTv+) கிடைக்கிறது.
ஆகவே, டேட்டா, டிவி சேனல்கள், ஓடிடி என்று ஒட்டுமொத்த சலுகைகளையும் ஒரே திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு ஜிஎஸ்டி கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். அதேபோல இன்ஸ்டாலேஷன் கட்டணம் வசூலிக்கப்படலாம். இந்த கட்டணங்களை செலுத்தி திட்டத்தை பெற்றுவிட்டால், அதன் பிறகு மாத கட்டணம் ரூ.599 முதல் தொடங்குகிறது.
இந்த ஜியோஏர்ஃபைபர் திட்டத்தை ஜியோ ஸ்டோர்கள், ஜியோ வெப்சைட் மற்றும் ஜியோ ஆப் மூலம் புக்கிங் செய்து கொள்ளலாம். இதே தீபாவளி தமாகா ஆஃபரில் கூடுதல் டேட்டா வேகத்தில் மற்றொரு திட்டம் இருக்கிறது. அதிகப்படியான டேட்டா தேவைப்படும் கஸ்டமர்கள் இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்துக்கு செல்லுங்கள். 100 எம்பிபிஎஸ் வேக டேட்டா கிடைக்கும்.
ஜியோ ஏர்ஃபைபர் ரூ 3333 திட்ட விவரங்கள் (Jio Airfiber Rs 3333 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்துக்கும் 3 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மாதத்துக்கு அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டா கிடைக்கும். இதுபோக ரூ.150 மதிப்பிலான 150 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும்.
மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கின்றன. ஆகவே, 800+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கிறது. அதேபோல டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜியோசினிமா பிரீமியம் உள்ளிட்ட 12 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








