Home
News

ஜியோ நெத்தி அடி.. வெறும் ரூ.1199 போதும்.. 4K செட்-டாப் பாக்ஸ்.. Wi-FI ரூட்டர்.. 16 ஓடிடி சந்தா!

ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் 550+ டிவி சேனல்கள் சலுகை மட்டுமல்லாமல், இலவச ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது. அப்படி, அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட 16 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும் திட்டங்களை பார்ப்போம்.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 1199 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 1199 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவை கொடுக்கப்படுகிறது. அதோடு 550+ டிவி சேனல்களை பார்த்து கொள்ள முடியும்.

ரூ.1199 போதும்.. 4K செட்-டாப் பாக்ஸ்.. Wi-FI ரூட்டர்.. 16 ஓடிடி சந்தா!

இந்த சலுகைகள் போக நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஜீ5 (ZEE5), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) உள்ளிட்ட 16 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனை பயன்படுத்தலாம்.

ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் ரூ 1499 திட்ட விவரங்கள் (Jio AirFiber Max Rs 1499 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு 300 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதோடு முந்தைய திட்டத்தைப் போலவே 550+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.

அதேபோல நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்நெக்ஸ்ட், லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், யுனிவர்சல் பிளஸ் மற்றும் ஜீ5 உள்ளிட்ட 16 ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் அமேசான் பிரைம் வீடியோவுக்கு ஒரு வருட சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் நெட்பிளிக்ஸ் பேஸிக் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் ரூ 2499 திட்ட விவரங்கள் (Jio AirFiber Max Rs 2499 Plan Details): இந்த ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டத்தில் 500 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். மொபைல், டிவி, லேப்டாப் போன்ற மல்டி டிவைஸ்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதேபோல டிவியில் கனெக்ட் செய்து 550+ டிவி சேனல்களை பார்க்கலாம். முந்தைய திட்டத்தின் அனைத்து ஓடிடி சலுகைகளும் இந்த திட்டத்துக்கும் வழங்கப்படுகிறது.

ரூ.1199 போதும்.. 4K செட்-டாப் பாக்ஸ்.. Wi-FI ரூட்டர்.. 16 ஓடிடி சந்தா!

ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் ரூ 3999 திட்ட விவரங்கள் (Jio AirFiber Max Rs 3999 Plan Details): இந்த திட்டத்தை பெற்றால் அதிகபட்ச டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடியும். அதாவது, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதனால் டிவி முதல் மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்ற 10+ டிவைஸ்களில் தடையில்லா இன்டர்நெட் சேவையை பெற முடியும்.

மேலும், நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, லயன்ஸ்கேட் பிளே, சோனிலிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட், டிஸ்கவரி பிளஸ், ஈராஸ்நவ், யுனிவர்சல் பிளஸ் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் உள்ளிட்ட 16 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். அதோடு 550+ டிவி சேனல்களை பார்த்து கொள்ள முடியும்.

இந்த திட்டங்கள் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, ஈரோடு, ஓசூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தாஞ்சாவூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கிடைக்கிறது. இந்த திட்டங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இருப்பினும், முதல்முறை சேவையை பெறும்போது 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான தொகையை ஜிஎஸ்டியோடு கட்ட வேண்டும். இந்த திட்டங்களில் 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் வை-பை ரூட்டர் மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டங்களை ஜியோ ஸ்டோர், ஜியோ ஆப் போன்றவற்றில் பெற்றுக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber Rs 1199 Plan With 30 Days Validity Unlimited Data, TV Channels, OTT Apps Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X