பழைய செட்-டாப் பாக்ஸ் காலி.. முடிச்சு விட்ட அம்பானி.. 550+ டிவி சேனல்.. 16 ஓடிடி சந்தா.. 100எம்பிபிஎஸ் டேட்டா!
550 டிவி சேனல்கள், 16 ஓடிடி ஆப்கள், 100எம்பிபிஎஸ் டேட்டா போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், 4K செட்-டாப் பாக்ஸ், வை-பை ரூட்டர் போன்ற டிவைஸ்களையும் கொடுக்கும் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் (Jio AirFiber Plan) நெட்ஃபிளிக்ஸ் சந்தா கொண்ட திட்டங்களை பார்க்கப்போகிறோம்.
எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்க முடியாத சலுகைகள் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் கிடைக்கிறது. ஒரே செலவில் மொபைல், லேப்டாப்களுக்கு அதிவேக டேட்டா, டிவிகளில் ஓடிடி மற்றும் லைவ் சேனல் சலுகைகள் கிடைப்பதால், கேபிள் டிவிக்கு மாற்றாக இந்த ஜியோ ஏர்ஃபைபர் மாறிக் கொண்டிருக்கிறது.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 1199 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 1199 Plan Details): இந்த திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கிறது. அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 64 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலி டேட்டா கொடுக்கப்படுகிறது. 550+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.
ஓடிடி சலுகைகளை பார்க்கையில், நெட்ஃபிளிக்ஸ் (Netflix), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஈராஸ் நவ் (Eros Now) உள்ளிட்ட 16 ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.
ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் ரூ 1499 திட்ட விவரங்கள் (Jio AirFiber Max Rs 1499 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. முந்தய திட்டத்தை போலவே அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டாவை பயன்படுத்தலாம்.
அதேபோல 550+ லைவ் டிவி சேனல்கள் சலுகை மற்றும் நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்நெக்ஸ்ட், அமேசான் பிரைம் வீடியோ, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், ஜீ5, ஈடிவி வின் போன்ற 16 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. ஆனால், அமேசான் பிரைம் வீடியோவுக்கு ஒரு வருட சந்தா கொடுக்கப்படுகிறது.
ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் ரூ 2499 திட்ட விவரங்கள் (Jio AirFiber Max Rs 2499 Plan Details): முந்தை திட்டங்களை விட இதில் 500 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கிறது. இதுவொரு 5ஜி டேட்டா சலுகை என்பதால், மொபைல், டிவி என்று ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும், பக்காவாக வேகம் இருக்கும்.
550+ டிவி சேனல்கள் வருகிறது. நெட்ஃபிளிக்ஸ் ஸ்டான்டர்ட், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார்ட், சோனிலிவ், ஜீ5, ஜியோ சினிமா பிரீமியம், சன்நெக்ஸ்ட் போன்ற 16 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். இந்த ஏர்ஃபைபர் திட்டத்திலும் 1 வருடத்துக்கு அமேசான் பிரைம் வீடியோ சந்தா கொடுக்கப்படுகிறது.
ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் ரூ 3999 திட்ட விவரங்கள் (Jio AirFiber Max Rs 3999 Plan Details): இந்த திட்டத்தில் மட்டுமே 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அதிவேக டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. இதிலும் அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் டேட்டா சலுகை கிடைக்கிறது.
முந்தைய திட்டங்களை போலவே டு 550+ டிவி சேனல்கள் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் உள்பட 16 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இந்த 4 திட்டங்களுக்கும் 30 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. முதல்முறை பெறும் கஸ்டமர்கள் 6 அல்லது 12 மாதங்களுக்கான தொகையை முழுதாக கட்டினால் மட்டுமே சேவை வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








