Home
News

ஜியோவின் ருத்ர தாண்டவம்.. ரூ.100 போதும் 100ஜிபி டேட்டா.. ரூ.599 போதும் 550+ டிவி சேனல்கள்.. 13 ஓடிடி சந்தா!

ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் வெறும் ரூ.599 விலையில் அன்லிமிடெட் டேட்டா, 550+ டிவி சேனல்கள், 13 ஓடிடி ஆப்களின் சந்தா, லேண்ட்லைன் கனெக்சன் போன்ற சலுகைகள் கிடைத்துவந்த நிலையில், இப்போது ரூ.100 விலைக்கு 100 ஜிபி டேட்டா பூஸ்டர் கிடைக்கப் போகிறது.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 101 டேட்டா பூஸ்டர் விவரங்கள் (Jio AirFiber Rs 101 Data Booster Details): இந்த டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கு ஆக்டிவ் பேஸ் பிளானின் (Active Base Plan) வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அதேபோல, நீங்கள் பயன்படுத்தும் ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தின் டேட்டா வேகம் இந்த திட்டத்துக்கும் பொருந்தும்.

ரூ.100 போதும் 100ஜிபி டேட்டா.. ரூ.599 போதும் 550+ டிவி சேனல்கள்!

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 251 டேட்டா பூஸ்டர் விவரங்கள் (Jio AirFiber Rs 251 Data Booster Details): இந்த டேட்டா பூஸ்டர் திட்டத்தில் முழுதாக 500 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 1 ரூபாக்கு 2 ஜிபி என்ற கணக்கில் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தைப்போலவே, ஆக்டிவ் பிளானின் வேலிடிட்டி மற்றும் வேகம் வழங்கப்படுகிறது.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 401 டேட்டா பூஸ்டர் விவரங்கள் (Jio AirFiber Rs 401 Data Booster Details): இந்த திட்டம் ஏற்கனவே இருக்கும் திட்டமாகும். இந்த டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 1000 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த பூஸ்டர் திட்டத்துக்கும் ஆக்டிவ் பேஸ் பிளானின் வேலிடிட்டி மற்றும் வேகம் கொடுக்கப்படுகிறது.

இதுவொரு டேட்டா-ஆட் ஆன் பேக் (Data Add-on Pack) என்பதால், உங்களது ஆக்டிவ் பேஸ் பிளானின் வேலிடிட்டி முடியும்போது, இந்த திட்டத்தின் டேட்டாவும் காலாவதியாகிவிடும். ஆகவே, ஆக்டிவ் பேஸ் பிளான் முடியும் நேரத்தில் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.

ரூ.100 போதும் 100ஜிபி டேட்டா.. ரூ.599 போதும் 550+ டிவி சேனல்கள்!

ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களுக்கு மட்டுமே, மிகவும் கம்மியான விலையில் இப்படி அதிகப்படியான டேட்டா கொடுக்கப்படுகிறது. மற்ற ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இதுபோன்ற டேட்டா பூஸ்டர் திட்டங்களை எதிர்பார்க்க முடியாது. இந்த நேரத்தில் ஜியோ ஏர்ஃபைபரில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதன் பின்பு, 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா சேவை கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தில் டேட்டாவுக்கு வை-பை ரூட்டர் கொடுக்கப்படுகிறது. அதோடு லேண்ட்லைன் கனெக்சனும் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் மூலம் 550க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இதுபோக 13 ஓடிடிகளில் சந்தா கிடைக்கிறது.

ஆகவே, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, டிஸ்கவரி+, ஜியோ சினிமா, சன் நெக்ஸ்ட், லயன்ஸ்கேட் பிளே, ஷீமாரூமி, எபிக் ஆன், ஈராஸ் நவ், ஹோய்சோய், ஆல்ட் பாலாஜி மற்றும் டாகுபேய் ஆகியவற்றின் சந்தாவை பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த திட்டத்தை முதலில் பெறும்போது, 6 மாதம் அல்லது 12 மாதங்களுக்கான வேலிடிட்டியை தேர்வு செய்து, அதற்கான முழு பணத்தையும் ஜிஎஸ்டியோடு கட்ட வேண்டும். இந்த திட்டம் சென்னை, கோவை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber Rs 101 Data Booster Plan Offers 100GB Data, Active Base Plan Validity And Speed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X