ஆகஸ்ட் 28க்கு அப்புறம்.. Airtel கம்பெனி காலி.. 20% குறைவான விலைக்கு Jio ஏர்ஃபைபர்.. அம்பானி புது ஸ்கெட்ச்!
ஜியோ நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. கூடிய விரைவில் ஜியோ நிறுவனம் தனது முதல் 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது இந்த ஜியோ ஏர்ஃபைபர் என்னவென்றால், 5ஜி தொழில்நுட்பத்தை (5G Technology)பயன்படுத்தி காற்றில் ஃபைபர் போன்ற வேகத்தை(Fiber-like Speed Over The Air) வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய சேவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒரு ஆன்டெனாவுடன்(Antenna) வெள்ளை நிற ரூட்டர் (White Router)போன்று இருக்கும் ஒரு சாதனத்தை இணைத்து 'ஆன்' (ON)செய்வதன் மூலம் உங்களது வீடு அல்லது அலுவலகத்தில் 1ஜிபிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை பெற முடியும்.

மேலும் இந்த சேவையின் முக்கிய சிறப்பு என்னவென்றால், இதன் கீழ் 1 ஜிபிபிஎஸ் (1Gbps) என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீட்(Internet Speed) கிடைக்கும். பின்பு ஜியோ ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் பேரண்டல் கண்ட்ரோல் (Parental control) மற்றும் வைஃபை 6 (Wi-Fi 6) ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இது ஜியோ ட்ரூ 5ஜியின் ஸ்டேண்ட் அலோன் (Standalone - SA) தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜியோ ஏர்ஃபைபர் சேவையை விழாக்காலத்தை முன்னிட்டு அசத்தலான சலுகை உடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது ஜியோ நிறுவனம். அதாவது தற்போது வெளியான தகவலின்படி, இந்தியாவில் ஜியோ ஏர்ஃபைபர் விலை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபரை விட 20 சதவீதம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் ஜியோ நிறுவனம் விரைவில் வெளியிடும்.
ஜியோ நிறுவனம் விரைவில் கொண்டுவர உள்ள ஜியோ ஏர்ஃபைபர் சேவை ஆனது ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஆக்ட் (ACT) போன்ற பிற பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுக்குக் கடுமையான போட்டியை கொடுக்கும். குறிப்பாக இந்தியாவில் தற்போது ஏர்டெல் பிராட்பேண்ட் சேவை மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் ஜியோ ஏர்ஃபைபர் சேவை அறிமுகமானால், அப்படியே நிலைமை தலைகீழாக மாறிவிடும். அதாவது ஜியோ ஏர்ஃபைபர் சேவை தான் மிகவும் பிரபலமாக இருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio)நிறுவனத்தின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் (Annual General Meeting) வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் ஜியோவின் ஏர்ஃபைபர் திட்டத்தை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஜியோவின் ஏர்ஃபைபர் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.1099 மற்றும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை இப்போது பார்ப்போம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும்.
குறிப்பாக ரூ.1099 மற்றும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்கும் என்பதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற உள்ள ஜியோ நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








