Home
News

கேபிள் டிவி எதுக்கு? ரூ.599-க்கு முடிச்ச அம்பானி.. 800 டிவி சேனல்கள் மட்டுமில்ல.. 12 ஓடிடி சந்தா.. டேட்டா கூட!

கேபிள் டிவிக்கு நிகரான லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 12 ஓடிடி ஆப்களின் சந்தாவுடன் வை-பை டேட்டா சலுகையை முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் கொடுக்கிறது. வெறும் ரூ.599 கட்டணத்தில் நம்ப முடியாக சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. இப்படி ரூ.1000 பட்ஜெட்டில் எந்தவொரு நிறுவனமும் கொடுக்க முடியாத விலைக்கு 2 ஏர்ஃபைபர் திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களின் விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ ஏர்ஃபைபர் திட்டம் ரூ 599 (Jio AirFiber Plan Rs 599): இந்த ஏர்ஃபைபர் திட்டம் ஆரம்ப விலையில் தொடங்குகிறது. வெறும் ரூ.599 செலவில் ஃபைபர் டேட்டா, லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கிறது. டேட்டா சலுகையை பார்க்கையில், 30 எம்பிபிஎஸ் வேகத்தில் ரூட்டர் மூலம் வை-பை டேட்டா கிடைக்கிறது.

கேபிள் டிவி எதுக்கு? ரூ.599-க்கு முடிச்ச அம்பானி.. 800 டிவி சேனல்கள்!

இந்த வேகத்தில் அதிகபட்சம் 1 டிபி டேட்டா வரையில் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த 1 டிபி டேட்டாவுக்கு பிறகு வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. 800+ டிவி சேனல்களை இந்த ஏர்ஃபைபர் திட்டம் கொடுக்கிறது. இந்த சேனல்களை பார்ப்பதற்கு ஆண்ட்ராய்டு பாக்ஸ் கிடைக்கிறது.

இப்போது, ஓடிடி சலுகைகளுக்கு வருவோம். இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தில் 12 ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த ஆப்களில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), சோனிலிவ் (Sony Liv) மற்றும் ஜீ5 (ZEE5) கிடைக்கிறது. இதுபோக சன்நெக்ஸ்ட் (Sun NXT) சந்தா இருக்கிறது.

மேலும், ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play),ஹோய்சோய் (Hoichoi), ஆல்ட்பாலாஜி (ALTBalaji), எபிக்ஆன் (EPICON), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) மற்றும் ஷீமாரூமீ (ShemarooMe) ஆப்கள் கிடைக்கின்றன. அதேபோல டாகுபே (DocuBay) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆப்கள் கிடைக்கின்றன. இப்போது, அடுத்த திட்டத்தை பார்ப்போம்.

ஜியோ ஏர்ஃபைபர் திட்டம் ரூ 899 (Jio AirFiber Plan Rs 899): இந்த ஏர்ஃபைபர் திட்டத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், டேட்டா வேகத்தில் இது கூடுதலாக சலுகையை கொடுக்கிறது. அதாவது, முந்தைய ஏர்ஃபைபர் திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை ரூட்டர் டேட்டாவை பயன்படுத்த முடிந்தது.

ஆனால், இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும், அதிகபட்சம் 1 டிபி வரையில் மட்டுமே டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே இருக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் 800+ டிவி சேனல்கள் கிடைக்கிறது.

ஓடிடி சலுகையும் அதேபோல கிடைக்கிறது. அதாவது, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா ப்ரீமியம், சோனிலிவ், ஜீ5 சன்நெக்ஸ்ட், ஈராஸ்நவ், லயன்ஸ்கேட் பிளே ,ஹோய்சோய், ஆல்ட்பாலாஜி, எபிக்ஆன், டிஸ்கவரி பிளஸ் மற்றும் ஷீமாரூமீ ஆப்கள் வருகின்றன. மேலும், டாகுபே மற்றும் ஈடிவி வின் ஆகிய ஆப்களும் கிடைக்கின்றன.

இந்த ஏர்ஃபைபர் திட்டங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களுக்கு விலையை பார்த்தால், அடிமட்டமாகவே இருக்கிறது. ஆனால், வை-பை ரூட்டர், ஆண்டார்ய்டு பாக்ஸ் போன்ற டிவைஸ்கள் கிடைப்பதால், முதல் முறை திட்டத்தை பெறும்போது மட்டும் 6 மாத வேலிடிட்டிக்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber Plans With 12 OTT Subcriptions 800 Live TV Channels Fiber Data Under Rs 1000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X