Home
News

புது Jio ஆபர்! 3 மாசத்துக்கு ரீசார்ஜ் செஞ்சா ரூ.1000 கிடைக்கும்! 2025 நியூ இயர் ஆபரை இப்போவே அறிவித்த அம்பானி!

என்ன அம்பானி சார்.. ஜியோவின் 2025 நியூ இயர் ஆபர்களை (Jio 2025 New Year Offer) இப்போதே அறிவிக்க தொடங்கி விட்டீர்கள் போல.. என்று கேட்கும்படியாக முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் புதிய ஆபர் ஒன்றை அறிவித்து உள்ளது.

2024 தீபாவளி பண்டிகைக்காக, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 4 வகையான ஆபர்கள் அறிவிக்கப்பட்டதால், ஜியோ நிறுவனம் 2025 புத்தாண்டுக்கும் பல வகையான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில்.. ஜியோவின் இந்த புதிய ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

புது Jio ஆபர்.. 3 மாசத்துக்கு ரீசார்ஜ் செஞ்சா ரூ.1000 கிடைக்கும்!

என்ன ஆபர்? ஜியோ நிறுவனம் அதன் ஏர்ஃபைபர் சேவையின் கீழ் ஒரு புதிய ஆபரை அறிவித்துள்ளது. இதன்கீழ் ரூ.2,222 மதிப்புள்ள 3-மாத கால திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களிடம் ரூ.1000 இன்ஸ்ட்டாலேஷன் கட்டணம் வசூலிக்கப்பட்ட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,222 ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இது 1000ஜிபி டேட்டாவை வழங்கும். இது 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் ஒரு 30எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீட் திட்டமாகும். ஜியோ வலைதளத்தின் கூற்றுப்படி இந்த திட்டத்தில் ரூ.101 மதிப்புள்ள 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் 100 ஜிபி கூடுதல் டேட்டாவும் கிடைக்கும்.

டேட்டாவை தவிர்த்து ஜியோ ஏர்ஃபைபரின் ரூ.2,222 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் (800+ TV Channels ), 11 ஓடிடி தளங்களுக்கான (11 OTT Platforms) இலவச அணுகல்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

என்னென்ன ஓடிடி தளங்கள் இலவசமாக கிடைக்கும்? டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5, ஜியோ சினிமா பிரீமியம், சன் நெக்ஸ்ட், ஹோய் சொய், டிஸ்கவரி பிளஸ், ஆல்ட் பாலாஜி, ஈரோஸ் நவ், லயன்ஸ் கேட் பிளே, ஷீமாரோ மீ, ஜியோ டிவி பிரீமியம் வழியாக இடிவி வின் ஆகிய தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் 100எம்பிபிஎஸ் ஸ்பீட் திட்டங்களை தேடினால்.. ஜியோ ஏர்ஃபைபரின் கீழ் கிடைக்கும் ரூ.3,333 அல்லது ரூ.4,444 ஆகிய 2 திட்டங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். ரூ.3333-ன் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை இது ரூ.2222-ன் கீழ் கிடைக்கும் அதே நன்மைகளைத்தான் வழங்கும். ஆனால் இதன் இண் டர்நெட் ஸ்பீட் ஆனது 100எம்பிபிஎஸ் ஆக இருக்கும் மற்றும் 150 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும்.

மறுகையில் உள்ள ரூ.4444 திட்டமும் அப்படித்தான். இதுவும் 1000ஜிபி டேட்டாவை வழங்கும். இதுவும் 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், ஆகியவைகளை வழங்கும். ஆனால் இது 100எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடையும், கூடவே 200ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவையும் வழங்கும்.

இன்னொரு முக்கிய மாற்றம் என்னவென்றால் ரூ.4,444 திட்டமானது ரூ.2222 மற்றும் ரூ.3333 ஆகிய 2 திட்டங்களின் கீழும் கிடைக்கும் அதே 11 ஓடிடி தளங்களுக்கு கூடுதலாக ப்ரைம் வீடியோ (Prime Video) மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix) ஆகிய 2 ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களையும் சேர்த்து வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber New Offer For 3 Months Rs 2222 Plan Free Installation Worth Rs 1000 Till 2024 Ends
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X