Home
News

ஒரே போடு.. ஆனால், இது ரொம்ப அதிகம்.. 800+ சேனல்கள்.. 1000GB டேட்டா.. 12+ ஓடிடி ஆப்.. Jio AirFiber Max திட்டம்!

ஜியோ கஸ்டமர்களாக இருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் அதிகபட்ச விலையில் ஒரு ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் (Jio AirFiber Max) திட்டம் கிடைக்கிறது. ஆனால், இந்த ஒரு திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் வேறு எந்தவொரு திட்டத்திலும் கிடைக்காது. 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் டேட்டா, 800+ லைவ் டிவி சேனல்கள், 12+ பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா போன்ற சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டத்தின் விலை என்ன? வேலிடிட்டி எவ்வளவு? விவரங்கள் இதோ.

இந்த திட்டத்தின் விலையானது சலுகைகளுக்கு ஏற்ப அதிகமாகவே இருக்கிறது. ரூ.3,999 விலைக்கு கிடைக்கிறது. இது மிகப்பெரிய தொகையாக இருப்பதால், ஜியோவில் அதிகப்பட்ச விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. ஆனால், சலுகைகளை சும்மா சொல்லிவிட முடியாது. டேட்டா, வாய்ஸ், ஓடிடி, டிவி சேனல்கள் என்று எல்லாமே அதிகபட்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே போடு.. ஆனால், இது ரொம்ப அதிகம்.. 800+ சேனல்கள்.. 1000GB டேட்டா!

ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் ரூ.3999 திட்டம் (Jio AirFiber Max Rs 3999 Plan): இந்த மேக்ஸ் திட்டத்தின் டேட்டாவை பார்க்கையில், 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கிறது. ஆகவே, ஒரே நேரத்தில் டிவி, மொபைல் மற்றும் லேப்டாப் என்று 5 டிவைஸ்களில் பயன்படுத்தினாலும் டேட்டா வேகம் பின்னிப்பெடல் எடுக்கும். 30 நாட்களுக்கு அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, நாளொன்றுக்கு 33 ஜிபி டேட்டாவுக்கும் அதிகமாக கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். இந்த 1000 ஜிபி டேட்டாவை 30 நாட்களுக்கு முன்பாக முடித்துவிட்டால், உங்களுக்கு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். இதற்கான வை-பை ரூட்டர் இந்த திட்டத்தின் விலையில் கொடுக்கப்பட்டுவிடும். இதன் மூலம் வை-பை கால்களை செய்யலாம்.

ஆகவே, டேட்டாவில் துளியும் குறையில்லாமல் இந்த திட்டம் கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு ஏற்ப 12+ ஓடிடி ஆப்களின் சலுகைகள் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இதில் ஒட்டுமொத்த பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவும் இருக்கின்றன. ஆகவே, நெட்ஃபிளிக்ஸ் பிரீமியம் (Netflix Premium), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), யூடியூப் பிரீமியம் (YouTube Premium) உள்ளது.

ஜியோஹாஸ்டார் (JioHotstar), ஜீ5 (ZEE5), சோனிலிவ் (Sony Liv), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஷீமாரூமீ (ShemarooMe), ஆல்ட்பாலாஜி (ALTBalaji), ஈராஸ் நவ் (Eros Now), ஈடிவி வின் (ETV Win) மற்றும் ஃபேன்கோட் (FanCode) ஆகிய ஆப்கள் கிடைக்கிறது. இதில் அமேசான் பிரைம் 2 வருடங்களுக்கு கிடைக்கிறது.

இந்த ஓடிடி ஆப்களையும், 800+ லைவ் டிவி சேனல்களையும் பயன்படுத்தி கொள்ள 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. இப்படியான அதிகப்பட்ச சலுகைகளை இந்த ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டம் கொடுக்கிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இது கூட்டு குடும்பமாக இருக்கும் கஸ்டமர்களுக்கு சரியாக இருக்கும்.

ஏனென்றால், ஒரே நேரத்தில் பல்வேறு ஓடிடி ஆப்கள் மற்றும் பல்வேறு டிவைஸ்களில் டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டத்தை பெறும் புதிய கஸ்டமர்கள் குறைந்தது 3 மாதங்களுக்கு திட்டத்தை பெற்றால் மட்டுமே கனெக்சன் வழங்கப்படும். ஏனென்றால், இதில் இன்ஸ்டாலேஷன், ஆண்ட்ராய்டு பாக்ஸ், வை-பை ரூட்டர் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber Max Rs 3999 Plan With 1Gbps Speed 1000GB Data 800 TV Channels Check Most Expensive Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X