Home
News

ஜியோனா சும்மாவா? அதிரடியாய் 6 Jio AirFiber திட்டங்களை அறிமுகம் செய்த Jio.. விலை என்ன?

ஜியோ நிறுவனம் அதன் இந்திய பயனர்களுக்காக புதிதாக ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வயர்லெஸ் இணைய சேவை இப்போது இந்தியாவின் முக்கியமான 8 நகரங்களில் பயன்படுத்த கிடைக்கிறது.

ஜியோ ஏர்ஃபைபர் என்பது ஜியோவின் வயர்லெஸ் இணைய சேவையாகும். இது அதிவேக இணைய இணைப்பை வழங்கும் புதிய 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இது பயனர்களுக்கு தேவையான ஒட்டுமொத்த டேட்டா நன்மை மட்டுமின்றி, 550 டிவி சேனல்கள், 14 பிளஸ் OTT நன்மைகள், ஸ்மார்ட் ஹோம் சேவைகள் மற்றும் அதிவேக பிராட்பேண்ட் சேவை போன்றதை வழங்குகிறது.

ஜியோனா சும்மாவா? அதிரடியாய் 6 Jio AirFiber திட்டங்கள் அறிமுகம்..

இது பாரம்பரிய ஃபைபர்-ஆப்டிக் இணைப்புகளுடன் ஒப்பிடக்கூடிய வேகத்தை வழங்குகிறது. ஆனால், இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது வயர்லெஸ் ஆக காற்றில் பரவி உங்களுக்கான இணைய சேவையை வழங்குகிறது. ஜியோ ஏர்ஃபைபர் அதன் பயனர்களுக்கு 1 ஜிபிபிஎஸ் வரை வேகத்தை வழங்குகிறது. ஜியோ ஏர்ஃபைபர் வயர்லெஸ் 4ஜி டாங்கிள்களைப் போன்றது.

ஆனால், 5ஜி வழியாக பிராட்பேண்ட் போன்ற வேகத்தை கூடுதல் நன்மைகளைக் கொண்டுள்ளது. இது 30Mbps, 100Mbps, 150Mbps, 300Mbps, 500Mbps மற்றும் 1Gbps என்று வெவ்வேறு வேகத்தை அடங்கிய திட்டங்களுடன் இப்போது பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. JioAirfiber திட்டங்கள் பற்றி பேசுகையில், ஜியோ ஏர்ஃபைபர் உடன், நிறுவனம் ஆறு ஏர்ஃபைபர் திட்டங்களை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொன்றும் அதிவேக டேட்டா, டிவி சேனல், OTT நன்மை மற்றும் துணை அம்சங்களை வழங்குகிறது. இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள், ஏர்ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் மேக்ஸ் என இரண்டு வகைகளில் இப்போது வாங்க கிடைக்கிறது. ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் முறையை, ரூ. 599, ரூ. 899 மற்றும் ரூ. 1199 ஆகிய மூன்று திட்ட விலைகளில் வருகிறது.

இந்தத் திட்டங்கள் 3 ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தின் கீழ் வருகின்றன. இதில் 550க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேனல்கள் மற்றும் 14 OTT பயன்பாடுகளுக்கான அணுகல் போன்ற கூடுதல் சலுகைகளுடன், 100 Mbps வரையிலான இணைய வேகத்தை இத்திட்டங்கள் வழங்குகின்றன. ஜியோ ஏர்ஃபைபர் ரூ.1199 திட்டத்தில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் ஆகியவற்றுக்கான இலவச சந்தாக்களும் கிடைக்கும்.

ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டங்கள் நிறுவனம் 3 திட்டங்களை வைத்துள்ளது. இவை முறையே ஜியோ ஏர்ஃபைபர் ரூ. 1499, ரூ. 2499 மற்றும் ரூ. 3999 என்ற விலையில் வருகிறது. இந்த மூன்று திட்டங்களையும் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் பிரிவின் கீழ் வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் 1Gbps வரையிலான இணைய வேகத்தை வழங்குகிறது.

அதேபோல், இந்த திட்டங்கள் 550-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேனல்கள் மற்றும் Netflix, Amazon Prime மற்றும் JioCinema Premium போன்ற 14 OTT பயன்பாடுகளுக்கான அணுகல் உட்பட கூடுதல் பலன்களை வழங்குகிறது. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் கிடைக்கும். சூப்பர் ஸ்பீட் இன்டர்நெட் சேவையுடன், Jio AirFiber ஆனது பெற்றோர் கட்டுப்பாடுகள், Wi-Fi 6க்கான ஆதரவு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஃபயர்வால் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber 6 Plans Launched In 8 Cities In India Check The Price and Other Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X