Home
News

கேபிள் டிவி கதை முடிந்தது.. மாதாந்திரம் ரூ.599 போதும்.. 12 மாதங்கள் சந்தா.. ப்ரீ இன்ஸ்டாலேஷன்.. 800+ சேனல்கள்!

ஒட்டுமொத்த கேபிள் டிவி கஸ்டமர்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) திட்டங்களுக்கு மாறும்படி மாதாந்திரம் வெறும் ரூ.599 செலவில் 12 மாதங்களுக்கு சந்தா மட்டுமல்லாமல், கூடுதலாக 1 மாத சந்தாவுடன் 800+ டிவி சேனல்கள், 30 எம்பிபிஎஸ் டேட்டா, 10+ ஓடிடி ஆப்கள் மற்றும் வாய்ஸ் கால்களை ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. இதில் இலவச இன்ஸ்டாலேஷன் (Free Installation) சலுகையை பெறுவது எப்படி? ஏர்ஃபைபர் திட்டத்தின் முழு சலுகைகள் எப்படி? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் மாதாந்திரம் ரூ.599 மற்றும் ரூ.899 விலையில் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த திட்டங்கள் 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டியில் மட்டுமே பெற்று கொள்ள கிடைக்கின்றன. அதாவது, முதன்முதலில் ஏர்ஃபைபர் திட்டங்களை பெறும்போது, குறைந்தது 3 மாதங்களுக்கான முழு தொகையையும் ஜிஎஸ்டி கட்டணத்துடன் செலுத்த வேண்டும்.

கேபிள் டிவி கதை முடிந்தது.. மாதாந்திரம் ரூ.599 போதும்.. 12 மாத சந்தா!

இதேபோல 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான முழு தொகையை செலுத்தி திட்டங்களை பெற்று கொள்ளலாம். ஏனென்றால், முதன்முதலில் திட்டங்களை பெறும்போது அவர்களுக்கு ஆண்ட்ராய்டு பாக்ஸ், வை-பை ரூட்டர், டிவி ரிமோட் மற்றும் அதற்கான இன்ஸ்டாலேஷன் இருக்கிறது. இதனாலேயே குறைந்தது 3 மாதங்களுக்கான தொகை செலுத்த வேண்டி இருக்கிறது.

இதில் இன்ஸ்டாலேஷன் தொகையானது 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் வேலிடிட்டியில் வேறுபடுகிறது. அதாவது, 3 மாத வேலிடிட்டியை தேர்ந்தெடுத்தால் ரூ.1000 இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்கும். அதுவே 6 மாத வேலிடிட்டிக்கு ரூ.500ஆக குறையும். ஆனால், 12 மாத வேலிடிட்டி திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு இலவசமாக இன்ஸ்டாலேஷன் கிடைக்கிறது.

இப்போது ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 மதிப்பிலான திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படும். இந்த டேட்டாவை மொபைல், டிவி மற்றும் லேப்டாப் போன்ற மல்டிபிள் டிவைஸ்களில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான வை-பை ரூட்டர் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

மாதத்துக்கு 1 டிபி டேட்டாவை அதிகபட்சமாக பயன்படுத்தலாம். அதோபோல வை-பை கால்களும் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் டிவி ரிமோட் டிவைஸ்களுடன் 800+ டிவி சேனல்களை பெற்று கொள்ளலாம். இதில் கட்டணங்கள் செலுத்தியும் கூடுதலாக தேவைப்படும் டிவி சேனல்களை கஸ்டமர்கள் பார்த்து கொள்ள முடியும்.

இந்த டேட்டா மற்றும் டிவி சேனல்களுக்கு அடுத்தபடியான பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, ஜியோ ஏர்ஃபைபர் கஸ்டமர்களுக்கு டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony Liv) மற்றும் ஜீ5 (ZEE5) போன்ற முன்னணி ஓடிடி ஆப்கள் மற்றும் ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), சன்நெக்ஸ்ட் (Sun NXT) சந்தாவும் கிடைக்கிறது.

இதுபோக டிஸ்கவரி பிளஸ் (Discovery+), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக்ஆன் (EPICON), ஈராஸ்நவ் (Eros Now), ஹோய்சோய் (Hoichoi), ஈடிவி வின் (ETV Win), ஆல்ட்பாலாஜி (ALTBalaji), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் டாகுபே (DocuBay) ஆகிய ஆப்களின் சந்தாவும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த ஒட்டுமொத்த சலுகைகளும் வெறும் ரூ.599 விலைக்கு கிடைக்கிறது.

ஆனால், இது மாதாந்திர செலவுதான், ஆகவே, 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்வு செய்யும்போது, ரூ.7,188 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும். இதேபோல 3 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் வேலிடிட்டிக்கு விலையில் மாற்றம் இருக்கும். ஆனால், மாத செலவு ரூ.599ஆக மட்டுமே இருக்கிறது. 12 மாதங்களுக்கு திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு கூடுதலாக 1 மாதம் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber 12 Months Bill Cycle Plans Offers Free Installation 800 Channels Monthly Cost At Rs 599
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X