Home
News

கேபிள் TV-க்கு டாட்டா காட்டிய அம்பானி.. 100Mbps ஸ்பீட்ல 1150GB டேட்டாவுடன் 15 OTT.. Jio யூசர்கள் காட்டில் மழை!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது.. பல இந்தியர்களின் வீடுகளில் உள்ள கேபிள் டிவி கனெக்ஷன் (Cable TV Connection), டிடிச் கனெக்ஷன்களை (DTH Connection) கட் செய்யும் படியான ஒரு ஆபரை, அதன் 2 திட்டங்களின் மீது அறிவித்துள்ளது. அதென்ன ஆபர்? அதென்ன திட்டங்கள்? இதோ விவரங்கள்:

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி எஃப்டபுள்யூஏ (பிக்ஸடு வயர்லெஸ் அக்சஸ்) சேவையான ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) சேவையின் கீழ் 2024 டிசம்பர் 31 ஆம் தேதி வரை அணுக கிடைக்கும் ஆபர் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் ஜியோ ஏர்ஃபைபரின் கீழ் உள்ள ரூ.3333 மற்றும் ரூ.4444 திட்டங்கள் (Jio AirFiber Rs.3333 and Rs.4444 Plans) மீது தான் இந்த ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

100Mbps ஸ்பீட்ல 1150GB டேட்டாவுடன் 15 OTT.. Jio யூசர்கள் காட்டில் மழை!

இவ்விரு திட்டங்களையும் 3 மாத காலத்திற்கு தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள இன்ஸ்டாலேஷன் கட்டணம் (Rs.1000 installation fee) வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுமே 100 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் (100 Mbps Speed) கீழ் 1டிபி அல்லது 1000ஜிபி வரையிலான எஃப்யுபி (ஃபேர் யூசேஜ் பாலிசி - Fair Usage Policy) டேட்டாவை வழங்குகின்றன.

அப்போது இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் என்ன? இவ்விரு திட்டங்களுக்குமான முக்கிய வேறுபாடு - இவைகள் வழங்கும் ஓடிடி (OTT - Over-the-top) நன்மைகளில் உள்ளன. ஜியோ ஏர்ஃபைபர் ரூ.3333 திட்டத்தின் கீழ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5, ஜியோசினிமா பிரீமியம், சன்நெக்ஸ்ட் ஆகிய பிரபலமான ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

கூனவே ஹோய்ச்சோய், டிஸ்கவரி பிளஸ், ஆல்ட் பாலாஜி, ஈரோஸ் நவ், லயன்ஸ்கேட் பிளே, ஷீமாரூமீ, மற்றும் இடிவி ஆகிய ஓடிடி தளங்களுக்கான அணுகல்களும் கிடைக்கும். இதனுடன் ஜியோ ரூ.3333 திட்டத்தில் ரூ.150 மதிப்புள்ள 150ஜிபி கூடுதல் டேட்டா நன்மையையும் கிடைக்கும். இந்த டேட்டா 90 நாட்கள் என்கிற வேலிடிட்டியை கொண்டிருக்கும்.

மறுகையில் உள்ள ரூ.4444 திட்டத்தில், ரூ.3333 திட்டத்தில் நீங்கள் பெறுவதை விட அதிகமான ஓடிடி நன்மைகள் உள்ளன. ஜியோ ஏர்ஃபைபர் ரூ.4444 திட்டத்தின் கீழ் நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic), அமேசான் ப்ரைம் லைட் (Amazon Prime Lite), ஃபேன் (FanCode) என கூடுதல் ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

இதுதவிர்த்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar), சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), சன் நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்ச்சோய் (Hoichoi), டிஸ்கவரி பிளஸ் (Discovery Plus), , ஆல்ட் பாலாஜி (ALTBalaji), ஈரோஸ் நவ் (ErosNow), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் இடிவி (ETV) ஆகிய ஓடிடிக்களும் அணுக கிடைக்கும்.

ரூ.3333 மற்றும் ரூ.4444 ஆகிய ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், மைஜியோ ஆப்பிற்கு (MyJio App) சென்று வவுச்சர்கள் பிரிவை சரிபார்ப்பதன் மூலம் தங்களுக்கான ஜியோசினிமா பிரீமியம் சந்தாவை ரீடீம் (Reedeem) செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் ஃபேன்கோட் மற்றும் இடிவி-யின் கீழ் கிடைக்கும் கன்டென்ட்கள் ஆனது ஜியோடிவி பிளஸ் (JioTV Plus) பிளாட்ஃபார்ம் மூலம் அணுக கிடைக்கும்.

இதே போல ஜியோ நிறுவனமானது 50 நாள் ஜியோ ஏர்ஃபைபர் ஆபர் (Jio AirFiber 50 Days Offer) என்கிற புதிய சலுகையையும் அறிவித்துள்ளது. இதன் கீழ் 800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள், 13 க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்கள் மற்றும் அன்லிமிடெட் வைஃபை ஆகிய நன்மைகள் கிடைக்கும். ரூ.3333 மற்றும் ரூ.4444-ஐ போலவே இந்த ஆபரிலும் ரூ.1,000 மதிப்புள்ள இலவச நிறுவல் அணுக கிடைக்கும்.

கூடவே ரூ.1,000 மதிப்புள்ள இலவச கூப்பன் மற்றும் ரூ.16,500 மதிப்புள்ள இலவச ஹோம் டிவைஸ்களும் கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50 முன்பணம் கட்டி இந்த சேவையை முன்பதிவு செய்யலாம், இந்த தொகை ஃபைனல் பேமண்ட்டில் அட்ஜெஸ்ட் செய்யப்படும். இந்த 50 நாள் ஆபரின் கீழ் ஜியோ 5ஜி பயனர்கள், ஜியோ ஏர்ஃபைபர் சேவையை வெறும் ரூ.1,111-க்கு பெற முடியும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber 100 Mbps Plan with 1000 GB Data 15 OTT Free Installation Offer Till December 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X