Home
News

குட் நியூஸ் சொன்ன அம்பானி.. புது Jio ஏஐ டாக்டர்.. ஜியோ ஏஐ டாக்டர் என்றால் என்ன? இது எப்படி மக்களுக்கு உதவும்?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) சார்பில் நேற்று 47வது ஆண்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு ஏறக்குறைய 2.30 மணி நேரம் நடைபெற்றது. இதில் RIL குழுமத்தின் தலைவர் மற்றும் உரிமையாளனரான முகேஷ் அம்பானி பல சுவாரசியமான தகவல்களை நேரலையில் பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்வில் பல புதிய தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இந்திய மக்களுக்கு பெரியளவில் பயனளிக்கும் விதமாக முகேஷ் அம்பானி புதிய ஜியோ ஏஐ டாக்டர் (Jio AI Doctor) என்ற புதிய ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சேவையை அறிமுகம் செய்து வைத்தார்.

உலகளவில் இப்போது வேகமாக வளர்ந்து வரும் துறையாக ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) துறை பார்க்கப்படுகிறது. ஆப்பிள் (Apple), கூகுள் (Google), சாம்சங் (Samsung) போன்ற நிறுவனங்கள் எல்லாம் இப்போது அவர்களுக்கு சொந்தமான AI சேவையை உருவாக்கி வருகின்றனர். இந்த வரிசையில் முகேஷ் அம்பானி நிறுவனமும் களமிறங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற 47வது ஆண்டு கூட்டத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகேஷ் அம்பானி, ஜியோ ஏஐ டாக்டர் சேவையை அறிமுகப்படுத்தினார்.

குட் நியூஸ் சொன்ன அம்பானி.. புது Jio ஏஐ டாக்டர்.. ஏஐ டாக்டரா அப்படினா?

முகேஷ் அம்பானி அறிமுகம் செய்த புதிய ஜியோ ஏஐ டாக்டர் சேவை (Mukesh Ambani Introduced New Jio AI Doctor Service):

இது சுகாதாரத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என்று கூறி ஜியா ஏஐ டாக்டர் சேவையை அறிமுகம் செய்தார். செயற்கை நுண்ணறிவு அல்லது ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று அழைக்கப்படும் சேவையின் மூலம் மருத்துவத் துறையை மாற்றி, நாடு முழுவதும் சுகாதார வழங்கலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த AI சேவையை அறிமுகம் செய்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். மில்லியன் கணக்கான மக்களுக்கு இது சில நிமிடங்களில் முழுமையாக உதவுமென்று கூறியுள்ளார்.

ஜியோ ஏஐ டாக்டர் சேவையை நீங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே அணுகலாம். உங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கான செயல்முறையை இது மிக - மிக எளிமைப்படுத்துகிறது. இந்த ஏஐ டாக்டர் நம்பகமான மருத்துவ ஆலோசகராக செயல்படுகிறது. உங்கள் உடலில் உள்ள நோய்களை கண்டறிதல், டிஜிட்டல் சுகாதார பதிவுகளை பராமரித்தல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை பரிந்துரைகளை வழங்குதல் போன்றவற்றை செய்யும் திறன் கொண்டது.

ஜியோ ஏஐ டாக்டர், 24x7 என்று எல்லா நேரமும் மக்கள் அணுக கிடைக்கும். நபர்கள் எந்த நேரத்திலும் மருத்துவ ஆலோசனையைத் தேடுவதற்கு அவர்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலம் ஜியோ ஏஐ டாக்ட்டரை அணுகினால் போதும். உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை வைத்து, நோய்களை பகுப்பாய்வு செய்து, சரியான நேரத்தில் சிகிச்சை பரிந்துரைகளை வழங்க இந்த AI-யால் முடிகிறது. இந்த புதுமையான கருவி தரவு-சார்ந்த நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி, தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களை உருவாக்குகிறது.

ஜியோ பிரைன் ஏஐ (Jio Brain AI):

கூடுதலாக, இது தடுப்பு மற்றும் முன்கணிப்பு சுகாதார நடவடிக்கைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதிலும், எதிர்கால நோய்களின் அபாயத்தை குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இத்துடன் நேற்று நடைபெற்ற நிகழ்வில் முகேஷ் அம்பானி, புதிதாக ''ஜியோ பிரைன் (Jio Brain)'' என்ற புதிய AI சேவையையும் அறிமுகம் செய்து வைத்தார். முதலில் நாம் பார்த்த ஜியோ ஏஐ டாக்ட்டர் முற்றிலும் ஆரோக்கியம் மற்றும் சுகாதார சேவைக்காக மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், இந்த புதிய ஜியோ பிரைன் ஏஐ (Jio Brain AI), இனி ரிலையன்ஸ் கீழ் இயங்கும் எல்லா தளங்களிலும் சேவை செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் சந்தேகம், தேவை மற்றும் வாடிக்கையாளர்கள் தளங்களில் மேற்கொள்ள முயலும் செயல்களை எளிமையாக முடிக்க இந்த புதிய ஜியோ பிரைன் ஏஐ பயன்படுத்தப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AI Doctor: Mukesh Ambani Introduced New Jio Ai Doctor and Jio Brain Ai at 47th AGM Meeting 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X