Home
News

அம்பானி ஸ்கெட்ச்: அசுர வளர்ச்சியில் ஜியோ., விட்டதை பிடிக்கும் ஏர்டெல்- பரிதாப நிலையில் விஐ!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பயணித்த பாதையை ஜியோ வருகைக்கு முன், ஜியோ வருகைக்கு பின் என இரண்டு கட்டமாக பிரிக்கலாம். காரணம், அந்த அளவிற்கு ஜியோ வருகைக்கு பின் அதன் வளர்ச்சியும் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஜியோவின் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன என்று தெரியுமா?

குறைந்த விலையில் அதிக நன்மைகள்

குறைந்த விலையில் அதிக நன்மைகள்

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ அறிமுகமான குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது. ஜியோ குறைந்த விலையில் அதிக நன்மைகளுடன் கூடிய திட்டங்களை வழங்கி வருகிறது. ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்களுடன் ஈடுகட்டும் வகையில் ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்தாலும், அது ஜியோ வழங்கும் திட்டங்களின் விலையை விட அதிகமாகவே இருக்கிறது. பிற நிறுவனங்களைவிட ஜியோ மட்டும் எப்படி குறைந்த விலையில் திட்டங்களை வழங்குகிறது.

ஜியோ, விஐ, ஏர்டெல்

ஜியோ, விஐ, ஏர்டெல்

இந்தியாவில் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக ஜியோ திகழ்கிறது. இரண்டாவது பெரிய நிறுவனமாக ஏர்டெல் இருக்கிறது. தொடர்ந்து விஐ, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் அடுத்த இடங்களை பிடித்திருக்கிறது. ஜியோ குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்க காரணம், அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். ஜியோவை விட குறைந்த வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் ஏர்ஜெல், விஐ நிறுவனங்களால் ஜியோ விலை அளவிற்கு ரீசார்ஜ் திட்டங்களை வழங்க முடிவதில்லை. ஜியோ தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்கள் அதிகரிப்பு

16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்கள் அதிகரிப்பு

அதன்படி, இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை இணைத்து சந்தையில் முன்னணியில் இருக்கிறது. அதேபோல் பாரதி ஏர்டெல் 8.1 லட்சம் பயனர்களை கூடுதலாக இணைத்திருக்கிறது. டிராய் அறிவித்த இந்த தகவலின் அடிப்படையில் ஜியோ மற்றும் ஏர்டெல் அதிக வாடிக்கையாளர்களை இணைத்திருக்கிறது. விஐ நிலை என்ன என்ற கேள்வி வரலாம்?- அதுகுறித்த விவரத்தை பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களை இழந்த விஐ

வாடிக்கையாளர்களை இழந்த விஐ

ஒருபுறம் ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. டிராய் அறிக்கையின்படி ஏப்ரல் 2022-ல் மட்டும் சுமார் 15.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை விஐ இழந்துள்ளது.

ஜியோ மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

ஜியோ மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கடந்த வியாழக்கிழமை மாதாந்திர சந்தாதாரர் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. இதில் ஜியோ நிறுவனம் 16.8 லட்சம் பயனர்களை சேர்த்துள்ளது. இதன்மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.5 கோடியாக அதிகரித்துள்ளது.

பாரதி ஏர்டெல் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

பாரதி ஏர்டெல் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

அதேபோல் பாரதி ஏர்டெல்லும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதன்படி சுனில் மிட்டல் தலைமையிலான பாரதி ஏர்டெல் 8.1 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை இணைத்திருக்கிறது. இதன்மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் சந்தாதாரர்கள் 36.11 கோடியாக அதிகரித்திருக்கிறது.

பின்தங்கிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

பின்தங்கிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

வோடபோன் ஐடியா நிறுவனம் பல மடங்கு பின்தங்கி இருக்கிறது. அதாவது விஐ எனப்படும் வோடபோன் ஐடியா சுமார் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன்மூலம் விஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25.9 கோடியாக இருக்கிறது.

மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

அதேபோல் ஒட்டுமொத்தமாக ஏப்ரல் 2022 இறுதியில் இந்தியாவின் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.3 கோடியாக அதிகரித்திருப்பதாக டிராய் சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்த சேவை வழங்குனர்களில் ரிலையன்ஸ் ஜியோ (41.1 கோடி), பாரதி ஏர்டெல் (21.5 கோடி), வோடபோன் ஐடியா (12.2 கோடி) என வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கொண்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio added 16.8 lakh mobile subscribers and Airtel add 8.1 lakh: VI loss Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X