Home
News

ஒரு வழியாக நிம்மதியான முகேஷ் அம்பானி: ஜியோ நிறுவனம் மீண்டும் அதிரடி.!

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு தான் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்.பின்பு கடந்த ஆண்டின் இறுதியில் ஜியோ நிறுவனம் கட்டணங்களை உயர்த்தியது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜியோ

அதன்பின்பு, கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜியோ நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களை இழந்துகொண்டே வந்தது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் ஒருவழியாக ஜியோ நிறுவனத்தின் இழப்புகள் முடிவுக்கு வந்து புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர்.

டிராய் அமைப்பு வெளியிட்ட

அதாவது டிராய் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 12.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. எனவே இதன்மூலம் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 40.4 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மூன்று மாத இழப்புக்கு பிறகு மார்ச் மாதத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளது முகேஷ் அம்பானிக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பர் மாதம் முதல்

அதேசமயம் வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 28.1 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்தாலும் ஏர்டெல் டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து வந்தது.

 கடந்த மார்ச் மாதத்தில் ஏர்டெல்

அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 22.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 36 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது தினசரி 1.5ஜிபி டேட்டவை வழங்கும் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். குறிப்பாக 300 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் நன்மைகளை வழங்குகிறது இந்தஅட்டகாசமான திட்டம்.

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்

ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

 ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT இயங்குதளத்திற்கு சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ஜியோ ரூ.783 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.783 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.783 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

Best Mobiles in India

English summary
Jio added 1.26 million subscribers After three months of decline: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X