Jio அதிரடி ஒவ்வொரு ரீசார்ஜ் உடன் ரூ.300 வரை கேஷ்பேக்! அம்பானியின் ராஜ தந்திரம்!
ஜியோ பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, ரூ.149 அல்லது அதற்கும் மேற்பட்ட ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 15, 2020 வரை மட்டும் ரூ.300 வரையிலான கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்று முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாகக் கீழே குறிப்பிட்டுள்ள முறைப்படி ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

ஒவ்வொரு ரீசார்ஜ் உடன் ரூ.300 வரை கேஷ்பேக்
முன்னணி டிஜிட்டல் வேலட் நிறுவனங்களான பேடிஎம் (Paytm), அமேசான் பே (Amazon Pay), போன்பே (PhonePe), மொபிக்விக் (MobiKwik) மற்றும் ப்ரீசார்ஜ் (FreeCharge) போன்ற டிஜிட்டல் வேலெட் பயனர்களுக்கு மட்டுமே இந்த ரூ.300 வரையிலான கேஷ்பேக் கிடைக்கிறது. இந்த நிறுவனங்களுடன் ஜியோ கூட்டணி கொண்டு, இந்த சலுகையைத் தனது பயனர்களுக்கு பிப்ரவரி 15ம் தேதி வரை வழங்குகிறது.

ஜியோவின் இந்த கேஷ்பேக் சலுகையை பெறுவது எப்படி?
- இந்த சலுகையை பெற நீங்கள், மைஜியோ அப் அல்லது ஜியோ.காம் (MyJio / Jio.com) வழியாக ரூ.300 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- டிஜிட்டல் வேலெட் யூபிஐ வழிமுறையைப் பயன்படுத்தியவர்களுக்கு மட்டும் இந்த சலுகை செல்லுபடியாகும்.
- இந்த சலுகை ஒரு பயனருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.
- அதாவது, பிப்ரவரி மாதத்தில் நீங்கள் செய்யும் முதல் ரீசார்ஜிற்கு மட்டுமே இந்த சலுகை நிபந்தனைகள்பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளம் மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.
- டிஜிட்டல் வேலெட் பயனர்கள், சலுகைக்கு உரிய ப்ரோமோ-கோடை நிறுவனம் குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குள் பயன்படுத்தினால் மட்டுமே சலுகை செல்லுபடியாகும்.
- இந்த சலுகை ஒரு பயனருக்கு ஒரு முறை மட்டுமே பொருந்தும், அதுவும் பிப்ரவரி மாதத்தில் செய்யும் முதல் ரீசார்ஜிக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பயனருக்கு ஒரு முறை மட்டும்

பேடிஎம் UPI வழியாக கேஷ்பேக் பெறுவது எப்படி?
பேடிஎம் பயனர்கள் இந்த சலுகையைப் பெற மைஜியோ அல்லது ஜியோ.காம் (MyJio / Jio.com) வழியாக ரூ.149 அல்லது அதற்கும் மேற்பட்ட திட்டத்தைத் தேர்வு செய்து, Paytm UPI வழியில் UPI பரிவர்த்தனை செய்ய வேண்டும். இவர்களுக்கு ரூ.50 என்கிற கேஷ்பேக் வழங்கப்படும், அதேபோல் இந்த சலுகை பழைய பயனர்களுக்குக் கிடைக்காது. அதாவது, முன்பே பேடிஎம் யூபிஐ பரிவர்த்தனை செய்து ரீசார்ஜ் செய்த பயனர்களுக்குச் செல்லுபடியாகாது.

பேடிஎம் (Paytm) ஆப் வழியாக கேஷ்பேக் பெறுவது எப்படி?
பேடிஎம் ஆப் வழியாக இதுவரை ரீசார்ஜே செய்யாத பயனர்கள் JIO15 எனும் குறியீட்டைப் பயன்படுத்தி ரூ.15 என்கிற கேஷ்பேக் சலுகையைப் பெறலாம். இதே சலுகை பழைய பேடிஎம் பயனர்களுக்கும் அணுகக் கிடைக்கிறது என்பது சிறப்பு. அவர்களும் JIO15 எனும் குறியீட்டைப் பயன்படுத்தி, ரூ.15 என்கிற கேஷ்பேக்கை பெறலாம். இந்த சலுகை ஒரு பயனருக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கப்பெறுகிறது.

அமேசான் பே வழியாக கேஷ்பேக் பெறுவது எப்படி?
அமேசான் பே ஆப் வழியாக இதுவரை ரீசார்ஜே செய்யாத பயனர்கள், அமேசான் பே ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.300 மதிப்பிலான ரீவார்ட்கள் வழங்கப்படும். இதே சலுகை பழைய அமேசான் பே பயனர்களுக்கும் அணுகக் கிடைக்கிறது. அவர்களும் ரூ.300 மதிப்பிலான அமேசான் பே ரீவார்ட்களை பெறலாம். இந்த சலுகை ஒரு பயனருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.

போன்பே வழியாக கேஷ்பேக் பெறுவது எப்படி?
போன்பே ஆப் வழியாக இதுவரை ரீசார்ஜே செய்யாத பயனர்கள், போன்பே ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.75 மதிப்பிலான ஸ்க்ராட்ச் அன்ட் வின் (Scratch & Win) ரீவார்ட் வழங்கப்படும். இதே சலுகை பழைய போன்பே பயனர்களுக்கும் அணுகக் கிடைக்கிறது.

ஸ்க்ராட்ச் அன்ட் வின் ரீவார்ட்
ஆனால் அவர்களுக்கு வெறும் ரூ.50 மதிப்பிலான ஸ்க்ராட்ச் அன்ட் வின் ரீவார்ட் மட்டுமே கிடைக்கும். இந்த சலுகையானது UPI அல்லது UPI+Wallet வழியிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபிக்விக் (MobiKwik) வழியாக கேஷ்பேக் பெறுவது எப்படி?
மொபிக்விக் ஆப் வழியாக இதுவரை ரீசார்ஜே செய்யாத பயனர்கள், மொபிக்விக் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், ரூ.200 மதிப்பிலான சூப்பர் கேஷ் கிடைக்கிறது. புதிய மற்றும் பழைய மொபிக்விக் பயனர்கள் JIO50P எனும் கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்த சூப்பர் கேஷ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரீசார்ஜ் (FreeCharge) வழியாக கேஷ்பேக் பெறுவது எப்படி?
ஃப்ரீசார்ஜ் ஆப் வழியாக இதுவரை ரீசார்ஜே செய்யாத பயனர்கள், ஃப்ரீசார்ஜ் மூலம் ரீசார்ஜ் செய்தால், உங்களின் ஜியோ ரீசார்ஜிற்கு ரூ.30 என்கிற தள்ளுபடி கிடைக்கிறது. புதிய ஃப்ரீசார்ஜ் பயனர்கள் JIO30 எனும் ஆஃப்பர் குறியீட்டை பயன்படுத்தும்போதும் மட்டுமே ரூ.30 கேஷ்பேக் கிடைக்கிறது. அதுவே பழைய பயனர்கள் இதே குறியீட்டை பயன்படுத்தினால் ரூ.15 மட்டுமே கிடைக்கிறது. இந்த சலுகையும் ஒரு முறை மட்டுமே பொருந்தும்.



Click it and Unblock the Notifications