Jio சிம் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு அடுத்த 98 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள்.. 2GB டேட்டா!
ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களாக இருந்தால், அடுத்த 98 நாட்களுக்கு வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், 3 மாதங்களுக்கு ஓடிடி சந்தா, 18 மாதங்களுக்கு ஜெமினி சந்தா கிடைக்கும் இந்த திட்டத்தை தவறவிடாதீர்கள்.
1 மாதம், 2 மாதம், 3 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்து சலித்துவிட்டது. 100 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) சரியாக இருக்கும். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜியோ ரூ.999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 3 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 98 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls), எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் (STD & Roaming Calls) கிடைக்கிறது.
மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா தொடர்ந்து கொடுக்கப்படும். இது 4ஜி கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, 98 நாட்களுக்கு 196 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி இருக்க முடியும். 5ஜி கஸ்டமர்களாக இருந்தால் லிமிட் இல்லை.
98 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு எந்த லிமிட்டும் இருக்காது. ஆனால், இந்த சலுகையை 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் கஸ்டமர்களாக இருக்க வேண்டும். இதற்கு அடுத்து முக்கிய சலுகையான எஸ்எம்எஸ் ஆனது நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கூடுதல் சலுகைகளை ஏராளமாக இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. முதலாவது சலுகையாக ஜியோ நிறுவனத்தின் ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாவையும் இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
இந்த கிளவுட் ஸ்டோரேஜை பயன்படுத்த ஜியோ மொபைல் நம்பரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியை லாகின் செய்யவும் ஜியோ மொபைல் நம்பரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த சலுகைகள் போக 5 டிபிக்கு கிளவுட் ஸ்டோரோஜ் (Cloud Storage) மற்றும் நானே பனானா (Nano Banana) அணுகலை கொடுக்கும் ஜெமின் ப்ரோ கிடைக்கிறது.
இந்த சந்தாவை 18 மாதங்கள் வரையில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், 98 நாட்களுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடிவதால், உடனடியாக அடுத்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டமும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கும் திட்டங்களாக இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தொடர்ந்து கிடைக்காது.
மூன்று மாதங்களுக்கு மேல் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல் ஓடிடி சந்தா, ஜெமினி ப்ரோ சந்தா வேண்டுமானால், இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவே இதில் ஹைட்லைட் சலுகைகளாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications