Home
News

ஜியோ சிம் கார்டுக்கு வைத்திருப்பவர்களுக்கு அடுத்த 98 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 196 ஜிபி டேட்டா!

கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் இந்த ஜியோ திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் தொடங்கி அன்லிமிடெட் 5ஜி டேட்டா வரையில் கிடைக்கின்றன. இதுபோக பிரீமியம் ஓடிடி சந்தா, ஏஐ சந்தா போன்ற சலுகைகளும் இலவசமாக கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

ஜியோ 98 நாட்கள் வேலிடிட்டி திட்டம் (Jio 98 Days Validity Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.999 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா கிடைக்கிறது. கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஏஐ சந்தாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜியோ சிம் கார்டுக்கு வைத்திருப்பவர்களுக்கு அடுத்த 98 நாட்கள்!

இந்த திட்டத்தை பெற்ற பிறகு 98 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்தி கொள்ளலாம். இது 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சலுகையாக இருக்கிறது. ஆகவே, 4ஜி ஸ்மார்ட்போனை வைத்திருந்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பெறலாம்.

இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தலாம். 98 நாட்களுக்கு 2 ஜிபி வீதம் 196 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த டேட்டா சலுகைகளை மட்டுமே இந்த ரூ.999 திட்டம் கொடுக்கிறது. டேட்டா வவுச்சர்கள் போல கூடுதல் டேட்டா சலுகைகள் கொடுக்கப்படவில்லை.

இந்த டேட்டாவை போலவே 98 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) பயன்படுத்தி கொள்ளலாம். இதில் லோக்கல் கால்கள், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன. வாய்ஸ் கால்களுடன் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். ஓடிடி சலுகையும் கிடைக்கிறது.

இந்த 98 நாட்கள் வேலிடிட்டி திட்டத்துக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சந்தாவை எளிதாக பெறலாம். அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த உடனே சந்தா தொடங்கிவிடும். ஜியோஹாஸ்டார் ஆப்பை டவுன்லோட் செய்து, ஜியோ மொபைல் நம்பரை லாகின் செய்தால் போதும்.

இந்த சந்தாவை பெற்று கொள்ளலாம். இதேபோல ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சந்தாவும் கிடைக்கிறது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக கூடுதலாக கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) சந்தா கிடைக்கிறது. 12 மாத சந்தாவாக இது இருக்கிறது. தனியாக பெற்றால், ரூ.1590 ஆக விலை இருக்கும்.

கூடுதல் டேட்டா மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், ஜியோ ரூ.899 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதிலும் முந்தைய திட்டத்தில் பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆனால், 20 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இதுபோக 20 ஜிபி டேட்டாவை கூடுதலாக பெற்று கொள்ளலாம். ஆகவே, 90 நாட்களுக்கு 2 ஜிபி வீதம் 180 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி டேட்டா என்று மொத்தமாக 200 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio 98 Days Validity Plan With Unlimited Voice 196 GB Data At Rs 999 Check Unlimited 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X