இதுபோதுமே அம்பானி சார்.. இனிமே 90 நாட்களுக்கு நோ டென்ஷன்.. அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 5G டேட்டா.. ஓடிடி சந்தா!
ஜியோ கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா தொடங்கி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 90 நாட்களுக்கான ஓடிடி சந்தாவை ஒரு ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு டேட்டா ஓடிடி மற்றும் வாய்ஸ் கால்களுக்கு குறை இருக்க கூடாது என்றால் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இப்போது முழு சலுகைகளை பார்க்கலாம்.
இப்போதெல்லாம் மூன்று மாத திட்டங்கள் என்றால் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஜியோ மட்டுமல்ல, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை அதிகமாக வைத்திருக்கின்றன. ஆனால், இது மூன்று மாத வேலிடிட்டியில் இருந்து 6 நாட்கள் குறைவாகும்.

அதாவது, மூன்று மாதங்களுக்கு 90 நாட்கள் என்று எடுத்து கொண்டால், அதில் 6 நாட்கள் குறைவாக இருக்கிறது. ஆகவே மொத்தமாக 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் இருக்கிறதா என்றால் ஜியோவில் ரூ 899 மதிப்பிலான திட்டம் இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப சலுகைகளும் பட்டையை கிளப்புகின்றன.
ஜியோ 90 நாட்கள் வேலிடிட்டி திட்ட சலுகைகள் (Jio 90 Days Validity Plan Offers): இந்த திட்டத்தின் டேட்டா சலுகைகள் உங்களை மிரள வைக்கும். தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமில்லாமல், கூடுதலாக இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. தினசரி டேட்டாவை பார்க்கையில் நாளொன்றுக்கு 2 ஜிபி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது 4ஜி வேகத்தில் கிடைக்கும். அதுவே நீங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறும்பட்சத்தில், இந்த தினசரி டேட்டா இல்லாமலேயே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு லிமிட் கிடையாது. 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால் அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த 5ஜி டேட்டாவும், 4ஜி டேட்டாவும் போக உங்களுக்கு 20 ஜிபி டேட்டா கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட டேட்டா வவுச்சர் போலத்தான், ஆகவே உங்களுக்கு 4ஜி வேகத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த கூடுதல் டேட்டாவுக்கும், தினசரி டேட்டாவுக்கும் லிமிட் முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆகவே டேட்டாவில் எவ்வளவு சலுகைகளை கொடுக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்கு அடுத்து கிடைக்கும் சலுகைகள் வழக்கமாக கிடைக்கும் திட்டங்களில் இருப்பதை போலவே தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகளை கொடுக்கிறது. அதேபோல ஜியோ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கொடுக்கப்படும் ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த சலுகைகள் மட்டுமே சில மாதங்களுக்கு முன்பு வரை கொடுக்கப்பட்டன. ஆனால், ஜியோ சினிமா மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்கள் ஒன்றாக இணைந்து ஜியோஹாட்ஸ்டார் என்று மாறியதில் இருந்து, ஜியோ கஸ்டமர்களுக்கு இந்த சந்தா 90 நாட்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த திட்டத்துக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது.
இதை 90 நாட்களுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மொபைல் சந்தா சலுகைகளை மட்டுமே கொடுக்கும். இந்த சலுகைகளையே இந்த ஜியோ ரூ 899 திட்டம் கொடுக்கிறது. 90 நாட்களுக்கு டேட்டா ஓடிடி எஸ்எம்எஸ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற ஒட்டுமொத்த சலுகைகளும் வேண்டுமானால் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








