Home
News

தூக்கி சாப்பிட்ட ஜியோ.. இனிமே ஒரு ரீசார்ஜ் போதும்.. 90 நாட்களுக்கு வேலிடிட்டி.. ரூ.100 போதும்.. 5 ஜிபி டேட்டா!

இனிமேல் ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு ஒரேவொரு ரீசார்ஜ் போதும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் 5 ஜிபி டேட்டா மற்றும் ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகளை இலவசமாக பார்த்து கொள்ளும்படி ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. சொல்லபோனால், இதைவிட மலிவான விலைக்கு மற்ற நிறுவனங்களில் திட்டங்கள் கிடையாது. இதே சலுகைகள் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தில் ரூ.152 விலைக்கு கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 100 திட்ட விவரங்கள் (Jio Rs 100 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ஜியோ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கிறது. ஏனென்றால், இந்த விலைக்கு ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களில் எந்தவொரு திட்டமும் கிடையாது. அதேபோல 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.

தூக்கி சாப்பிட்ட ஜியோ.. இனிமே ஒரு ரீசார்ஜ்-க்கு 90 நாட்களுக்கு சேவை!

இந்த திட்டம் டேட்டா (போஸ்ட் டேட்டா) மற்றும் ஓடிடி சந்தா சலுகைகளை மட்டுமே கொண்ட திட்டமாக இருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 5 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

அதேபோல ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்கும் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், உங்களிடம் பேஸ் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். ஒருவேளை 28 நாட்கள் வேலிட்டி கொண்ட திட்டத்தை பேஸ் ஆக்டிவ் திட்டமாக வைத்திருந்தால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை தொடர்ந்து பெறுவதற்கு 48 மணி நேரத்துக்குள் அடுத்த பேஸ் ஆக்டிவ் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இதேபோல டேட்டா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா வேண்டுமானால், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் ரூ.151 மதிப்பிலான டேட்டா திட்டத்தை (Data Plan) ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை பார்த்தால், ஜியோ கஸ்டமர்களுக்கும் வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கும் எந்த திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கிறது என்பது தெரிய வரும்.

வோடபோன் ஐடியா ரூ 151 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 151 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் கிட்டத்தட்ட முந்தைய திட்டத்தை போலவே சலுகைகளை கொடுக்கிறது. அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆனால், 4 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது.

இந்த டேட்டாவுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடையாது. 30 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, அதற்கு பிறகு டேட்டா வேண்டுமானால், புதிய வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இந்த டேட்டா திட்டத்துக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டம் டேட்டா மற்றும் அதற்கான வேலிடிட்டியை குறைவாக கொடுக்கிறது.

அதே நேரத்தில், விலை ரூ.51 அதிகமாக இருக்கிறது. ஆகவே, இந்த திட்டங்களில் ஜியோ நிறுவனமே லாபத்தை கொடுக்கிறது. இதற்கு அடுத்து ஜியோஹாஸ்டார் திட்டம் வேண்டுமானால், ரூ.195 விலைக்கு மற்றொரு டேட்டா மற்றும் ஓடிடி அடங்கிய திட்டம் ஜியோவில் இருக்கிறது. இந்த திட்டத்திலும் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். 15 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த 15 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது. ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இதனால், ஜியோஹாஸ்டார் சந்தாவை கொடுக்கும் திட்டங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜியோ நிறுவனம் அதை அடிமட்ட விலைக்கு கொடுத்து கஸ்டமர்களை தட்டி தூக்கி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio 90 Days Plan Offer Free JioHotstar Subscription 5GB Data 64Kbps Post Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X