Home
News

மறுபடியும் இலவசம்.. ஏப்.15-க்குள்ள இதை பண்ணுங்க.. அப்புறம் 90 நாட்களுக்கு Jio யூசர்களுக்கு ஜமாய்.. எந்த சலுகை?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, 90 நாட்களுக்கான இலவச சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு ஏப்ரல் 15ஆம் தேதி கடைசி நாளாக இருப்பதால், இப்போதே ரீசார்ஜ் பட்டையை கிளப்புகிறது. எந்ததெந்த திட்டங்களில் இந்த 90 நாட்கள் இலவச கிடைக்கிறது? இந்த சலுகையை எப்படி பெறுவது உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐபிஎல் 2025 போட்டிகளை முன்னிட்டு இந்த 90 நாட்கள் இலவச சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்காது. ஆனால், ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) இலவமாக கொடுக்கப்படும்.

மறுபடியும் இலவசம்.. ஏப்.15-க்குள்ள இதை பண்ணுங்க.. அப்புறம் 90 நாட்கள்!

இந்த ஜியோஹாட்ஸ்டார் சலுகையானது மார்ச் 22ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்திருந்த கஸ்டமர்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டுமா என்று தயங்கினர்.

இதனால், இலவச ஜியோஹாட்ஸ்டார் சலுகையை பெற முடியாமல் போனது. ஆனால், இந்த சலுகை ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் கிடைக்கும் என்று இப்போது ஜியோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனால், ஜியோ கஸ்டமர்கள் குஷியாகிவிட்டனர். அடிச்சு புடிச்சு ரீசார்ஜ் செய்ய தொடங்கிவிட்டனர். எந்தெந்த திட்டங்களில் ஜியோஹாட்ஸ்டார் சலுகை வருகிறது?

ஜியோவில் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் அல்லது அதற்கு மேல் விலை கொண்ட அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களிலும் 90 நாட்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ரூ 299 ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளையும், ஜியோஹாஸ்டார் சந்தா பிரத்யேகமாக கிடைக்கும் டேட்டா வவுச்சர் திட்டங்களையும் இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 299 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை மற்றும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும், 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு செய்ய கிடைக்கின்றன.

இந்த சலுகைகள் போக இப்போது ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 90 நாட்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால், இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைப்பதால், அடுத்த ரீசார்ஜை உடனடியாக செய்ய வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். பிரத்யேக திட்டங்கள் எப்படி?

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வேண்டாம், வெறும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியுடன் மட்டுமே கிடைக்கும் திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இரண்டு டேட்டா வவுச்சர் திட்டங்கள் (Data Voucher Plan) இருக்கின்றன. இந்த திட்டங்களில் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதில் டேட்டா மற்றும் ஓடிடி மட்டுமே கிடைக்கும்.

ஜியோ ரூ 100 டேட்டா திட்டம் (Jio Rs 100 Data Plan): இந்த டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களிடம் பேஸ் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். 5 ஜிபி டேட்டா மற்றும் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. 5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) வருகிறது.

ஜியோ ரூ 195 டேட்டா திட்டம் (Jio Rs 195 Data Plan): இந்த டேட்டா திட்டத்திலும் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. ஆனால், டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, 15 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை இதில் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கும் ஆக்டிவ் திட்டம் வேண்டும்.

Best Mobiles in India

English summary
Jio 90 Days Free JioHotstar Offer Extends To April 15 How to Get Jio Unlimited Offer For IPL Season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X