புது ஆஃபர்.. செப்.10 கடைசி.. 8ஆவது ஆண்டில் Jio.. போன கஸ்டமர்கள் கலங்கிட்டாங்க.. டேட்டா, ஓடிடி எல்லாமே இலவசம்!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கட்டண உயர்வுக்கு பிறகு அந்த நிறுவனத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்த புதிய கஸ்டமர்கள் பலர் அடிமட்ட விலைக்கு திட்டங்களை கொடுக்கும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறினர். இப்போது, அவர்கள் மட்டுமல்லாமல், ஜியோவை விட்டு மற்ற நிறுவனத்துக்கு மாறிய ஒட்டுமொத்த கஸ்டமர்களும் கலங்கும்படியான ஆஃபரை ஜியோ கொடுத்துள்ளது. 8ஆம் ஆண்டு விழாவில் இலவச டேட்டா முதல் ஓடிடி வரையில் சலுகைகளை வாரிவழங்கி இருக்கிறது. மூன்று திட்டங்களில் இந்த சலுகை கிடைக்கிறது.
ஜியோ கொடுத்தால் கூரை பிச்சிக்கும் என்று சொல்லும் அளவுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டும் ஜியோ 8வது ஆண்டு விழா சலுகைகள் (Jio 8th Anniversary Offers) வழங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும். ரூ.899, ரூ.999 மற்றும் ரூ.3599 ஆகிய திட்டங்களில் சலுகைகள் கிடைக்கிறது.

ஆகவே, மேற்கூறிய திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அந்த திட்டத்தின் சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக ரூ.175 மதிப்பில் 10 ஓடிடி ஆப்களின் சந்தா (OTT Apps Subscription) மற்றும் 10 ஜிபி டேட்டா (10GB Data) சலுகை கிடைக்கிறது. இதுபோக சொமேட்டோ கோல்டு மெம்பர்ஷிப் (Zomato Gold Membership) கிடைக்கிறது. இதை மூன்று மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், ரூ.500 மதிப்பிலான அஜியோ வவுச்சர் (AJIO Voucher) கிடைக்கிறது. ரூ.2999-க்கு மேல் ஆர்டர் செய்யும்போது, இந்த வவுச்சரை பயன்படுத்தி கொள்ளலாம். மேற்கூறிய 3 திட்டங்களில் எந்தெந்த ஓடிடிகளை எதிர்பார்க்கலாம். இந்த இலவச சந்தாவில் சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) கிடைக்கிறது.
மேலும், டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), டாகுபே (DocuBay), எபிக் ஆன் (EPIC ON) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஆப்கள் கிடைக்கிறது. சொல்லப்போனால், ஜியோ ரூ.175 திட்டத்தின் சலுகைகள் அனைத்தும் ரூ.899, ரூ.999 மற்றும் ரூ.3599 ஆகிய திட்டங்களில் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 899 திட்ட விவரங்கள் (Jio Rs 899 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இப்போது, கூடுதலாக 20 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ல் கால்கள் (Unlimited Voice Calls), 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது.
ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 98 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை இந்த திட்டத்திலும் கிடைக்கிறது.
ஜியோ ரூ 3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் எல்லாம் போக மேற்கூறிய ஆண்டு விழா சலுகைகள் கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications