Home
News

இது அம்பானி ஆஃபர்.. ஜியோவின் 7ஆவது ஆண்டில் 7 ஜிபி கூடுதல் டேட்டா.. ஆடிப்போன கஸ்டமர்கள்!

ஜியோ நிறுவனத்தின் 7ஆவது ஆண்டு விழாவை (Jio 7th Anniversary offers) முன்னிட்டு மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு இலவச டேட்டா உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று திட்டங்கள் மற்றும் அவற்றின் ஆஃபர்கள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோ ரூ 299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Call) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கிடைக்கும். அதோடு ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படும்.

ஜியோவின் 7ஆவது ஆண்டில் 7 ஜிபி கூடுதல் டேட்டா.. ஆடிப்போன கஸ்டமர்கள்!

இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு 56 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதோடு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்துகொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் செய்து கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டாவை முழுமையாக பயன்படுத்திவிட்டாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து இன்டர்நெட் சேவை வழங்கப்படும். அதே போல ஜியோ அன்லிமிடெட் 5ஜி சேவை வெல்கம் ஆஃபர் (Jio 5G Welcome Offer) பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த சலுகைகள் போக, ஜியோ 7ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 7 ஜிபிக்கான 4ஜி டேட்டா வவுச்சர் (4G Data Voucher) இலவசமாக வழங்கப்படும்.

ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோகிளவுட் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த 90 நாட்களுக்கு 2ஜிபி தினசரி டேட்டா வீதம் மொத்தமாக 180 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்துகொள்ளலாம். அதேபோல 100 தினசரி எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் 2 ஜிபி தினசரி டேட்டா முடிந்த பின்பும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்துக்கும் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் சலுகை பொருந்தும். இந்த சலுகைகள் போக, உங்களுக்கு 7 ஜிபிக்கானா 4ஜி டேட்டா வவுச்சர் 2 வழங்கப்படும். ஆகவே, மொத்தமாக 14 ஜிபி டேட்டாவை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் மொத்தமாக 194 ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ ரூ 2999 திட்ட விவரங்கள் (Jio Rs 2999 Plan Details): இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இந்த நாட்களில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 912 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கும் ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோகிளவுட் மற்றும் 5ஜி வெல்கம் ஆஃபர் சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக ஜியோ 7ஆம் ஆண்டு விழா சலுகையாக மூன்று 7 ஜிபிக்கான 4ஜி டேட்டா வவுச்சர் வழங்கப்படுகிறது. ஆகவே, 21 ஜிபி டேட்டாவை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் ஃபுட் டெலிவரி தளமான ஸ்விக்கியில் ரூ.249க்கு மேல் ஆர்டர் செய்தால், ரூ.100 தள்ளுபடி கிடைக்கும். அதேபோல யாத்ரா (Yatra) டிராவல் ஏஜென்சி மூலம் விமான டிக்கெட் புக் செய்தால் 15 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், யாத்ராவில் ஹோட்டல் புக் செய்வோருக்கு ரூ.4000 வரையில் தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும், அஜியோ (Ajio) தளத்தில் ரூ.999க்கு மேல் ஆர்டர் செய்தால் ரூ.200 தள்ளுபடி மற்றும் நெட்மெட்ஸ் (Netmeds) தளத்தில் ரூ.999க்கு மேல் ஆர்டர் செய்தால், 20 விழுக்காடு சூப்பர்கேஸ் வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. இந்த அனைத்து சலுகைகளும் இன்று (செப்டம்பர் 5) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio 7th Anniversary Offers This Three Prepaid Plans With Extra Data, Special Vouchers Till September 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X