Reliance Jio பயனர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ரீசார்ஜ் செய்தால் ரூ.10 லட்சம் வரை பரிசு..
ரிலையன்ஸ் ஜியோ தனது 6-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரீசார்ஜ் செய்யும் குறிப்பிட்ட பயனர்களுக்கு ரூ.10 லட்சம் வரை பரிசு அறிவித்துள்ளது. எந்தெந்த பயனர்களுக்கு பரிசுகள் கிடைக்கும், பரிசுகளை பெறுவதற்கு என்ன விதிமுறைகள் என்று பார்க்கலாம் வாங்க.

6-வது ஆண்டு நிறைவு விழா
தொலைத் தொடர்பு துறைகளின் வளர்ச்சியை ஜியோ அறிமுகத்திற்கு முன்பு, அறிமுகத்திற்கு பிறகு என இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம்.
காரணம் அந்தளவிற்கு ஜியோ அறிமுகமான குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஜியோவுடன் போட்டிப்போட முடியாமல் பிற நிறுவனங்கள் திண்டாடி வருகின்றன என்றே கூறலாம்.
இந்த நிலையில் ஜியோ தனது 6-வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட இருக்கிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தனது பயனர்களுக்கும் பரிசுகளை அறிவித்துள்ளது.

தினசரி ரூ.10 லட்சம் வரை பரிசு
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வொர்க் சேவைகளை செப்டம்பர் 5, 2016 அன்று அறிவித்தது. இதையடுத்து செப்டம்பர் 5, 2022 உடன் ஜியோ தனது 6 ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
6 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக 6 நாட்களுக்கு தினசரி ரூ.10 லட்சம் வரை பரிசை அறிவித்துள்ளது ஜியோ. அதாவது செப்டம்பர் 6 முதல் 11 வரை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இந்த பரிசு கிடைக்கும். நிபந்தனைகள் என்னவென்று பார்க்கலாம் வாங்க.

செப்டம்பர் 6 முதல் 11 வரை...
செப்டம்பர் 6 முதல் 11 வரையிலான காலக்கட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இந்த பரிசு கிடைக்கும். ரூ.299க்கு மேற்பட்ட திட்டங்களை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள பரிசை வெல்லலாம் என ஜியோ அறிவித்துள்ளது. இந்த பரிசு குழுக்கள் முறையில் வழங்கப்படுமா அல்லது எப்படி என்ற விவரங்கள் எதையும் ஜியோ தெரிவிக்கவில்லை.

ஜியோ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு
இதுகுறித்த அறிவிப்பை ஜியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பதிவுடன் ஒரு லிங்க்-ம் இணைக்கப்பட்டுள்ளது. இதை கிளிக் செய்தால் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்ட பக்கத்துக்கு அழைத்து செல்லப்படுகிறது. எனவே இந்த சலுகை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு மட்டுமே என கணிக்கப்படுகிறது.

ரீசார்ஜ் செய்வது அவசியம்
இந்த காலக்கட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்பதால், உங்களது ப்ரீபெய்ட் திட்டம் செயலில் இருந்தாலும், சலுகைக்கு தகுதி பெற ஜியோவிடம் இருந்து உங்களுக்கு பிடித்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

தமிழ்நாடுக்கும் மட்டும் நோ..
தமிழ்நாடு வட்டத்தில் உள்ள பயனர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என ஜியோ அறிவித்துள்ளது. சலுகை பொருந்தாது என வேறு எந்த மாநிலத்தையும் ஜியோ குறிப்பிடவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள பயனர்களை தவிர இந்தியா முழுவதும் உள்ள ஜியோ பயனர்களும் இந்த சலுகைக்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
ஜியோ தமிழ்நாட்டை மட்டும் புறக்கணிக்க காரணம் என்னவென்று விளக்கம் அளிக்கவில்லை.

ரூ.2999 ரீசார்ஜ் திட்டம்
6 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக ஜியோ முன்னதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அது, 6 ஆண்டை கொண்டாடும் விதமாக ரூ.2999 திட்டத்தில் 6 நன்மைகள் என்ற அறிவிப்பாகும்.
ரூ.2999 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா என 365 நாட்களுக்கு வழங்கப்படும் மற்றும் 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் இலவசம் வழங்கப்படும். ஜியோ அறிவித்த 6 நன்மைகளில் இது அடங்காது.

ஜியோ அறிவித்த 6 நன்மைகள்
ரூ.2999 திட்டத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளுடன் கூடுதலாக 6 நன்மைகளை ஜியோ அறிவித்தது. அது 75 ஜிபி கூடுதல் டேட்டா, ரிலையன்ஸ் டிஜிட்டல் நன்மைகள், AJIO கூப்பன்கள், நெட்மெட்ஸ் காப்பீடு, ஜியோ சாவ்ன் ப்ரோ அணுகல்கள் ஆகும். இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா என 365 நாட்களுக்கு மொத்தம் 912.5 ஜிபி டேட்டா இணையம் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications