தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!

|

தீபாவளி திருநாள் முதல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ட்ரூ 5ஜி (Jio 5G) சேவைகளை பயன்படுத்த விரும்புகிறீர்களா?

ஆம் என்றால், ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலிகளில் ஒன்றான மைஜியோ ஆப்பில் (MyJio App) நீங்கள் ஒரு "குறிப்பிட்ட வேலையை" செய்ய வேண்டி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

ஏனென்றால்?

ஏனென்றால்?

ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகள் ஆனது உங்களுக்கு தானாகவே கிடைக்காது; அதற்காக மைஜியோ ஆப் வழியாக நீங்கள் "விண்ணப்பிக்க" வேண்டி இருக்கும்!

அதை செய்வது எப்படி? அப்படி செய்வதன் வழியாக ஜியோ 5ஜி நெட்வொர்க் உடன் சேர்த்து வேறு என்ன கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

தயார் நிலை!

தயார் நிலை!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவைகளை, வருகிற தீபாவளியன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் வெளியிட தொடங்கும் என்று ஆகஸ்ட் மாதமே அறிவித்து விட்டது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளதால், ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகள் ஆனது கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது என்றே கூறலாம்!

ஜியோகிட்ட மட்டுமே

ஜியோகிட்ட மட்டுமே "இப்படி ஒன்னு" இருக்கு!

இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்குவதில், ஜியோ நிறுவனத்தின் செயல்பாடுகள் தனித்து நிற்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஏனென்றால், ஜியோ நிறுவனத்திடம் மட்டுமே 5ஜி சேவைகளுக்கான 700MHz உள்ளது மற்றும் ஜியோ நிறுவனத்தின் சமீபத்திய 5ஜி சோதனைகளின்படி, இந்த டெலிகாம் நிறுவனத்தால் 1Gbps அளவிலான பதிவிறக்க வேகத்தை (Download Speed) வழங்க முடியும்!

வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!

தானாகவே கிடைக்காது!

தானாகவே கிடைக்காது!

ஜியோ நிறுவனம், ஏற்கனவே தனது 5ஜி சேவைகளை 4 நகரங்களில் சோதித்து வருகிறது. அதாவது இந்நிறுவனத்தின் 5G சேவைகள் ஆனது மற்ற நகரங்களுக்கு விரிவடைவதற்கு முன்பு, அந்த 4 நகரங்களில் பரவலான 5ஜி அறிமுகம் நடக்கும்.

இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த 4 நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் இருந்தாலும் கூட, ஜியோவின் 5ஜி சேவைகள் ஆனது உங்களுக்கு தானாகவே கிடைக்காது!

ஜியோ 5G-க்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்!

ஜியோ 5G-க்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்!

ஆம்! ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஆனது இன்வைட்-ஒன்லி (Invite-only) அடிப்படையின் கீழ் மட்டுமே அணுக கிடைக்கும்.

அதாவது ஜியோவின் 5ஜி சேவைகளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் அதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும்!

ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!

விண்ணப்பிக்கும் முன் இதை 'செக்' பண்ணிக்கோங்க!

விண்ணப்பிக்கும் முன் இதை 'செக்' பண்ணிக்கோங்க!

ஜியோ 5ஜி-க்கான இந்த இன்வைட் (விண்ணப்பம்) விருப்பம், குறிப்பிட்ட நகரங்களில் உள்ள சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும், எனவே வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், உங்களுக்கான அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கவும்.

மேலும், இதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால், உங்களிடம் ஒரு 5G ஸ்மார்ட்போன் இருப்பதையும், அதில் ஜியோவின் 5G சேவைகளை இயக்கும் மென்பொருள் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அறியாதோர்களுக்கு Realme, OnePlus, iQOO, Vivo, Samsung மற்றும் Xiaomi போன்ற நிறுவனங்களின் பெரும்பாலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஆனது ஜியோ 5ஜி-க்கான சப்போர்ட்-ஐ வழங்குகின்றன!

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி?

- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள மை ஜியோ ஆப்பை திறக்கவும். ஒருவேளை உங்களிடம் மைஜியோ ஆப் இல்லை என்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று MyJio ஆப்பை கண்டுபிடித்து, அதை இன்ஸ்டால் செய்யவும்.

- பின்னர் உங்கள் ஜியோ நம்பரை பயன்படுத்தி MyJio ஆப்பில் லாக்-இன் செய்யவும்.

Truecaller-ல் இதை மட்டும் செஞ்சிட்டா போதும்! உங்களுக்கு ஒரே Truecaller-ல் இதை மட்டும் செஞ்சிட்டா போதும்! உங்களுக்கு ஒரே "VIP அந்தஸ்து" தான்!

"ஜியோ வெல்கம் ஆஃபர்" என்கிற கார்டு கிடைக்கும்!

அதனை தொடர்ந்து, ​​உங்கள் ஜியோ எண் ஆனது 5ஜி வெளியீட்டிற்கு தகுதியான வட்டத்தை (டெல்லி, மும்பை, வாரணாசி மற்றும் கொல்கத்தா) சேர்ந்ததாக இருந்தால், மேல் ஸ்லைடரில் ஒரு கார்டை பார்ப்பீர்கள்.

அந்த கார்ட்டில் "ஜியோ வெல்கம் ஆஃபர்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் மற்றும் ஜியோவின் 5ஜி சேவைகளை முதலில் பெறும் நான்கு நகரங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும்!

அதை கிளிக் செய்யவும்!

அதை கிளிக் செய்யவும்!

ஜியோவின் 5ஜி சேவைகளுடன் உங்களை இணைக்க, ஜியோ 5ஜி-க்காக உங்களை ரிஜிஸ்டர் செய்ய, அந்த கார்டை கிளிக் செய்ய வேண்டும்.

அந்த கார்ட்டை கிளிக் செய்த பிறகு, "நன்றி! ஜியோவின் ட்ரூ 5ஜி நோக்கிய உங்கள் பயணம் இப்போது முதல் தொடங்குகிறது" என்கிற மெசேஜை பார்ப்பீர்கள்!

அவ்வளவு தான்! அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால், நீங்கள் ஜியோவின் 5ஜி சேவைகளை பெறுவீர்கள், உடன் ஜியோ வெல்கம் ஆஃபருக்கான அழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்!

Best Mobiles in India

English summary
Jio 5G would not available for all users You need to register via Myjio App to get welcome offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X