தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் 10x ஸ்பீடில் Jio 5G யூஸ் பண்ணலாம்.! இதற்கு 5G போன் தேவையா?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 5G சேவையை அடுத்த மாதம் இந்தியாவில் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யவிருக்கிறது. குறிப்பாக, ஜியோவின் புதிய 5ஜி சேவை, அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்யப்படும் என்று ஜியோ அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துடன் மக்கள் ஜியோவின் புதிய 5ஜி (Jio 5G) சேவையைப் பயன்படுத்தத் துவங்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த 4 இந்திய நகரங்கள் முதல் 5ஜி சேவையைப் பெறுகிறது?

எந்த 4 இந்திய நகரங்கள் முதல் 5ஜி சேவையைப் பெறுகிறது?

முதற்கட்டமாக இந்த புதிய 5ஜி சேவை, இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் களமிறக்கப்படுகிறது என்பதை நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த முதற்கட்ட 5G சேவை அறிமுகத்தில், இந்தியாவின் 4 முக்கிய நகரங்களை ஜியோ சேர்த்துள்ளது. குறிப்பாக, இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய நகரமும் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, எந்த 4 இந்திய நகரங்கள் முதல் 5ஜி சேவையைப் பெறுகிறது என்று பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் முதல் 5ஜி பெரும் நகரம் எது தெரியுமா?

தமிழ்நாட்டில் முதல் 5ஜி பெரும் நகரம் எது தெரியுமா?

ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் உள்ள டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய 4 நகரங்களில் தான் ஜியோவின் புதிய 5ஜி சேவை அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகை முதல் 5ஜி சேவையை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பிற நகரங்கள், சிறு நகரங்கள், கிராமப்புற தாலுகாக்களில் டிசம்பர் 2023-க்குள் 5ஜி சேவை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

ஜியோ மட்டும் ஏன் ஸ்டாண்ட்-அலோன் 5G என்று கூறப்படுகிறது?

ஜியோ மட்டும் ஏன் ஸ்டாண்ட்-அலோன் 5G என்று கூறப்படுகிறது?

ஜியோ அறிமுகம் செய்யும் "Jio True 5G" சேவையானது, பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்கிறது மற்றும் லேடென்சி தாமதத்தை வெகுவாகக் குறைக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. ஜியோ 5G உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட 5G நெட்வொர்க்காக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஜியோ 5G இன் சமீபத்திய பதிப்பை ஸ்டாண்ட்-அலோன் 5G என அழைக்கிறது. காரணம், இது எந்த 4G நெட்வொர்க்குடனும் தொடர்பில்லாதா பூஜ்ஜிய சார்பு கொண்ட 5ஜியை வழங்குகிறது.

10x வேகத்தில் லேடென்சி இல்லாத 5ஜி அனுபவமா?

10x வேகத்தில் லேடென்சி இல்லாத 5ஜி அனுபவமா?

4ஜி சேவைகளை விட ஜியோவின் 5ஜி வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இப்போது, ​​ஜியோ 5ஜி சேவையைப் பெறும் 4 நகரங்களில் வசிக்கும் மக்கள் அதிவேக இணையச் சேவையை அனுபவிக்க, அவர்களிடம் கட்டாயம் ஒரு 5ஜி போன் இருக்க வேண்டுமா என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இதற்கான விடை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

உங்கள் போன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கிறதா? இல்லையா?

உங்கள் போன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கிறதா? இல்லையா?

5G சேவையின் முழுமையான பயனையும் வேகத்தையும் அனுபவிக்க, உங்கள் போனில் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் அம்சம் இருக்க வேண்டும். எனவே, உங்கள் போன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கிறதா? இல்லையா? என்பதை அறிவதற்கு சில எளிமையான வழிமுறைகள் இருக்கிறது. அதை எப்படிக் கண்டறிவது என்பதை இப்போது பார்க்கலாம். உங்கள் போன் 5ஜியை ஆதரிக்கிறதா என்பதைக் கண்டறிய

உங்கள் போன் 5ஜி சேவையை ஆதரிக்குமா என்பதை தெரிந்துகொள்ள இதை செய்யுங்கள்

உங்கள் போன் 5ஜி சேவையை ஆதரிக்குமா என்பதை தெரிந்துகொள்ள இதை செய்யுங்கள்

  • உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள Settings செல்ல வேண்டும்.
  • Wi-Fi & Network என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • அடுத்து, 'SIM & Network' விருப்பத்தை கிளிக் செய்யவும்
  • நீங்கள் இப்போது 'Preferred network type' விருப்பத்தின் கீழ் இணைப்பு பட்டியலைப் பார்க்க முடியும்.
  • உங்கள் போன் 5G சேவையை ஆதரித்தால், அதில் 2G/3G/4G/5G என பட்டியலிடப்பட்டிருக்கும்.
  • உங்கள் போன் 5ஜி சேவையை ஆதரிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

    உங்கள் போன் 5ஜி சேவையை ஆதரிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

    சரி, ஒருவேளை உங்கள் போன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கவில்லை என்றால், அதிவேக இணையத்தை அனுபவிக்க, 5G இயக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கலாம். Xiaomi, OnePlus, Realme, Samsung போன்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே பல்வேறு விலைப் புள்ளிகளில் 5G ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறார்கள். வெகு விரைவில் Realme மற்றும் Lava போன்ற சில நிறுவனங்கள் ரூ.10,000 விலைக்குள் 5G போன்களை அறிமுகம் செய்யுமென்றும் கூறியுள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio 5G Will Be Available For Delhi, Mumbai, Chennai, and Kolkata Cities From Next Month 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X