அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் நம்பமுடியாத வெல்கம் ஆபரை அறிவித்துள்ள Jio!

|

குறிப்பிட்ட சில நகரங்களில் சத்தம் போடாமல் தனது 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் புதிய 5ஜி சேவைக்கான வெல்கம் ஆபரையும் (Jio 5G Welcome Offer) அறிவித்துள்ளது.

ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆபர் (Jio True 5G Welcome Offer) என்கிற பெயரின் கீழ் அணுக கிடைக்கும் இந்த புதிய சலுகையின் கீழ், என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அது யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பதை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

சைலன்ட் ஆக 5G சேவைகளை தொடங்கிய ஜியோ!

சைலன்ட் ஆக 5G சேவைகளை தொடங்கிய ஜியோ!

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியால் 5ஜி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை வருகிற தீபாவளியிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே சில நகரங்களில் தனது 5ஜி சேவைகளை வழங்கத் தொடங்கி உள்ளது!

5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

எந்தெந்த நகரங்களில் ஜியோ 5ஜி கிடைக்கிறது?

எந்தெந்த நகரங்களில் ஜியோ 5ஜி கிடைக்கிறது?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் - தனது 5ஜி வெல்கம் ஆபர் உடன் சேர்த்து - மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் உள்ள ஜியோ பயனர்களுக்கு அதன் பீட்டா சோதனையின் ஒரு பகுதியாக, 5ஜி சேவைகளை வழங்கத்தொடங்கி உள்ளது.

இந்த சேவைகள், நேற்று, அதாவது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட நகரங்களில் அணுக கிடைக்கிறது!

ஜியோவின் ட்ரூ 5ஜி வெல்கம் ஆபர் விவரங்கள்!

ஜியோவின் ட்ரூ 5ஜி வெல்கம் ஆபர் விவரங்கள்!

ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆபர் ஆனது மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் உள்ள ஜியோ பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது.

இதன் கீழ், அந்தந்த நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் 1Gbps+ வேகத்திலான அன்லிமிடெட் 5G டேட்டாவை பெறுவார்கள்.

எச்சரிக்கை! 5G சேவை வழியாக உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் புது சிக்கல்!எச்சரிக்கை! 5G சேவை வழியாக உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் புது சிக்கல்!

இந்த ஆபரில்.. ஒரு ட்விஸ்ட் இருக்கிறது!

இந்த ஆபரில்.. ஒரு ட்விஸ்ட் இருக்கிறது!

அது என்னவென்றால், ஜியோவின் ட்ரூ 5ஜி வெல்கம் ஆபர் ஆனது குறிப்பிடப்பட்ட நகரங்களில் மட்டுமே அணுக கிடைக்கும் என்பது மட்டுமின்றி, இது முழுக்க முழுக்க அழைப்பின் அடிப்படையிலானது.

அதாவது இது அனைவருக்கும் அணுக கிடைக்காது, சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்று அர்த்தம்!

இந்த ஆபர் மற்ற நகரங்களுக்கும் வருமா?

இந்த ஆபர் மற்ற நகரங்களுக்கும் வருமா?

வரலாம்! ஏனென்றால், மற்ற நகரங்களுக்கான பீட்டா ட்ரையல் சேவை ஆனது படிப்படியாக அறிவிக்கப்படும் என்று ஜியோ குறிப்பிட்டுள்ளது.

சிறந்த கவரேஜ் மற்றும் பயனர் அனுபவத்தை வழங்க, ஒரு நகரத்தின் நெட்வொர்க் கவரேஜ் ஆனது கணிசமாக நிறைவடையும் வரை, ஜியோ பயனர்கள் இந்த பீட்டா ட்ரையலை தொடர்ந்து பெறுவார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிய 5ஜி சிம் கார்டுக்கு வேலை இல்லை!

புதிய 5ஜி சிம் கார்டுக்கு வேலை இல்லை!

ஜியோவின் 5ஜி வெல்கம் ஆபருக்காக "அழைக்கப்பட்ட" வாடிக்கையாளர்கள் தற்போதுள்ள ஜியோ சிம் அல்லது தங்களது 5ஜி ஸ்மார்ட்போனை மாற்ற வேண்டிய தேவையில்லாமல், தானாகவே ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைக்கு மேம்படுத்தப்படுவார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜியோ 5ஜி சேவைகள் ஆனது அனைத்து வகையான 5ஜி போன்களுடனும் தடையின்றி வேலை செய்ய, அனைத்து மொபைல் பிராண்டுகளுடனும் இணைந்து செயல்படுவதாக ஜியோ நிறுவனம் கூறுகிறது.

Samsung முதல் Lava வரை.. ரூ.20,000 க்குள் உள்ள மொத்த 5G போன்களும் இதோ!Samsung முதல் Lava வரை.. ரூ.20,000 க்குள் உள்ள மொத்த 5G போன்களும் இதோ!

ஜியோ ஏன், அதன் 5ஜி நெட்வொர்க்கை.. ட்ரூ 5ஜி என்கிறது?

ஜியோ ஏன், அதன் 5ஜி நெட்வொர்க்கை.. ட்ரூ 5ஜி என்கிறது?

ஏனென்றால், ஜியோவின் ட்ரூ 5ஜி ஆனது "தனித்த" 5ஜி கட்டமைப்பு, சார்புகள் இல்லாத மேம்பட்ட 5ஜி, லோ லேடன்சி, மெஷின்-டூ-மெஷின் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பலவற்றுடன் மிகவும் பலமானதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜியோவின் 5ஜி சேவைகள் அந்த மிகப்பெரிய மற்றும் சிறந்த கலவையிலான ஸ்பெக்ட்ரமையும் (700 மெகா ஹெர்ட்ஸ், 3500 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டுகள்) கொண்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், ஆழமான உட்புற கவரேஜை உறுதிசெய்ய 700மெகா ஹெர்ட்ஸ் லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரமை கொண்ட ஒரே டெலிகாம் ஆப்ரேட்டர் - ஜியோ மட்டுமே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

ஜியோ 5ஜி திட்டங்களின் விலை - எப்படி இருக்கும்?

ஜியோ 5ஜி திட்டங்களின் விலை - எப்படி இருக்கும்?

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி திட்டங்களின் விலை நிர்ணயம் ஆனது (ஆரம்பத்தில்) தற்போது அணுக கிடைக்கும் 4ஜி திட்டங்களை போலவே தான் இருக்கும்.

மெல்ல மெல்லவே விலை உயர்வை சந்திக்கும்!

Best Mobiles in India

English summary
Jio 5G Welcome Offer Unlimited 5G Data Up To 1Gbps Speed Here Full Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X