Home
News

அம்பானியின் முக்கிய அறிவிப்பு: ஜியோ 5ஜி சேவை எப்போது அறிமுகம் தெரியுமா?

இன்று நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 நிகழ்வின் போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, வரும் ஜூன் 2021-க்குள் இந்தியாவில் ஜியோவின் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அவர் கூறியது என்னவென்றால் ஜியோ

மேலும் அவர் கூறியது என்னவென்றால் ஜியோ வழங்கும் 5 ஜி சேவை அரசாங்கத்தின் ஆத்மனிர்பர் பாரத் கொள்கைக்கு சான்றாக இருக்கும் என்று தெரிவித்தார். பின்பு இந்தியா இன்று டிஜிட்டல் மையத்தால் இணைக்கப்பட்ட சிறந்த உலக நாடுகளில் ஒன்றாக
திகழ்கிறது.

மலிவு விலையில் அனைத்து மக்களுக்கும் கிடைக்க

அதேபோல் இந்தியாவில் 5ஜி சேவை மலிவு விலையில் அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கைகள் தேவை. அதில் ஜியோ நிறுவனம் ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். கண்டிப்பாக 2021-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 5ஜி புரட்சி உண்டாகும். இது உள்ளநாட்டிலேயே உருவாக்கம் பெற்ற நெட்வொர்க், வன்பொருள் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எனவே இந்த 2ஜி சேவைக்கு

மேலும் இந்தியாவில் 2ஜி சேவைக்குள் 300 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் சிக்கியுள்ளனர். எனவே இந்த 2ஜி சேவைக்கு மாற்று கொண்டுவர ஒரு நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் 5ஜி இந்தியாவுக்கு நான்காவது தொழில்துறை புரட்சியில் பங்கேற்க மட்டுமல்லாமல், அதை வழிநடத்தவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் இந்திய

குறிப்பாக இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய சமுதாயத்தின் டிஜிட்டல்மயமாக்கல் வேகத்தை அதிகரிக்கும்போது, டிஜிட்டல்வன்பொருளுக்கான தேவை மிகப்பெரிய அளவில் வளரும். பின்பு முக்கியமான தேசிய தேவை உள்ள இந்த பகுதியில் பெரியஅளவிலான இறக்குமதியை நாம் நம்ப முடியாது என்று அம்பானி அவர்கள் குறிப்பிட்டார்.

உற்பத்தி வசதிகளை அமைப்பதற்காக

இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்காக பல முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் வருகின்றன என்று கூறிய அம்பானி,சிப் வடிவமைப்பில் உலகத் தரம் வாய்ந்த பலங்களை நம் நாடு உருவாக்கியுள்ளது என்றார்.

வழிவகுக்கும் என்பதை

அதிநவீன semiconductor தொழிலுக்கு இந்தியா ஒரு முக்கிய மையமாக மாறுவதை நான் தெளிவாகக் காண்கிறேன் என்றுகுறிப்பிட்டுள்ளார் அம்பானி அவர்கள். பின்பு அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்படும்போது, வன்பொருளில் நிகழம் இந்தியாவின் வெற்றி, மென்பொருளில் நிகழும் நமது வெற்றிக்கும் வழிவகுக்கும் என்பதை நிச்சியமாக உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

விவசாயம், கல்வி, சுகாதாரம், நி

மேலும் ஜியோ நிறுவனம் இதுவரை 20-க்கும் மேற்பட்ட start-up கூட்டாளிகளுடன், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா, மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், பிளாக்செயின் போன்றவற்றில் உலகத் தரம் வாய்ந்த திறன்களை உருவாக்கியுள்ளது. எனவே அவைகள் விவசாயம், கல்வி, சுகாதாரம், நிதி சேவைகள், வர்த்தகம் என பல்வேறு துறைகளுக்குள் நீள்கிறது.

Best Mobiles in India

English summary
Jio 5G services will be launched in India at Before June 2021: Mukesh Ambani Said: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X