அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!

|

இந்தியா முழுவதும் புயல் வேகத்தில் தனது 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து வரும் ரிலையன்ஸ் ஜியோ, மேலும் 50 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவையை (Jio 5G) அறிமுகம் செய்துள்ளது.

அந்த 50 நகரங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ஈரோடு (Erode) மற்றும் தர்மபுரியும் (Dharmapuri); யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் (Puducherry) அடங்கும்!

ஒருவேளை நீங்கள் ஈரோடு, தர்மபுரி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், ஜியோவின் 5ஜி டேட்டாவை இலவசமாக பெறுவது எப்படி? அதாவது ஜியோவின் வெல்கம் ஆபரை (Jio Welcome Offer) பெறுவது எப்படி? அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்கிற விவரங்கள் இதோ:

Airtel முக்குது.. Jio பறக்குது!

Airtel முக்குது.. Jio பறக்குது!

மேலும் 50 நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்ததன் விளைவாக ஜியோவின் 5ஜி சேவைகள் கிடைக்கும் இந்திய நகரங்களில் மொத்த எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.

மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானது (தற்போது வரையிலாக) வெறும் 52 இந்திய நகரங்களில் மட்டுமே தனது 5ஜி பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. அந்த 52 நகரங்களில் புதிதாக சேர்ந்த நகரங்கள் - கோவை, திருச்சி, மதுரை மற்றும் ஓசூர் ஆகும்!

கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் Airtel 5G அறிமுகம்! எந்தெந்த ஏரியாக்களில் கவரேஜ் கிடைக்கும்? இதோ லிஸ்ட்!கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் Airtel 5G அறிமுகம்! எந்தெந்த ஏரியாக்களில் கவரேஜ் கிடைக்கும்? இதோ லிஸ்ட்!

புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியுடன் சேர்த்து வேறு எங்கெல்லாம் Jio 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியுடன் சேர்த்து வேறு எங்கெல்லாம் Jio 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

- ஈரோடு, தர்மபுரி (தமிழ்நாடு)

- புதுச்சேரி (புதுச்சேரி)

- சித்தூர், கடப்பா, நரசராவ்பேட்டை, ஓங்கோல், ராஜமகேந்திராவரம், ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் (ஆந்திரா)

- நாகோன் (அஸ்ஸாம்)

- பிலாஸ்பூர், ராஜ்நந்த்கான், கோர்பா (சத்தீஸ்கர்)

- பனாஜி (கோவா)

- அம்பாலா, பகதூர்கர், ஹிசார், கர்னால், பானிபட், ரோஹ்தக், சிர்சா, சோனிபட் (ஹரியானா)

- தன்பாத் (ஜார்கண்ட்)

கர்நாடகா, கேரளா தொடங்கி பஞ்சாப் வரை!

கர்நாடகா, கேரளா தொடங்கி பஞ்சாப் வரை!

- பாகல்கோட், சிக்கமகளூரு, ஹாசன், மாண்டியா, துமகுரு (கர்நாடகா)

- ஆலப்புழா (கேரளா)

- கோலாப்பூர், நான்டெட்-வகாலா, சாங்க்லி (மகாராஷ்டிரா)

- பாலசோர், பரிபாதா, பத்ரக், ஜார்சுகுடா, பூரி, சம்பல்பூர் (ஒடிசா)

- பிகானர், கோட்டா (ராஜஸ்தான்)

- அமிர்தசரஸ் (பஞ்சாப்)

அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!

மேற்கண்ட நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் 5ஜி வெல்கம் ஆஃபரை பெற என்ன செய்ய வேண்டும்?

மேற்கண்ட நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் 5ஜி வெல்கம் ஆஃபரை பெற என்ன செய்ய வேண்டும்?

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி வெல்கம் ஆஃபர் ஆனது ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தை பயன்படுத்தும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் கூட, சமீபத்தில் அறிமுகமான ரூ.61 டேட்டா பிளானை ரீசார்ஜ் செய்வதன் மூலமாகவும் நீங்கள், ஜியோவின் 5ஜி சேவைக்குள் நுழையலாம்.

அதாவது நீங்கள் ரூ.239 க்கும் குறைவான விலையை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து இருந்தாலும் கூட, ரூ.61-ஐ ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஜியோவின் வெல்கம் ஆஃபருக்கு தகுதி பெறுவீர்கள்!

இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் உள்ளது!

இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் உள்ளது!

ஜியோவின் ரூ.61 திட்டத்தை ரீசார்ஜ் செய்த உடனேயே ஜியோவின் வெல்கம் ஆஃபருக்குள் நுழைந்து விடுவீர்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

ரூ.61-ஐ ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீங்கள் ஜியோவின் வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்படுவதற்கான தகுதியை மட்டுமே பெறுவீர்கள். அதன் பின்னர் நீங்கள் ஜியோவால் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே வெல்கம் ஆஃபருக்குள் நுழைய முடியும்; 5ஜி வேகத்திலான டேட்டாவை அனுபவிக்க முடியும்!

Best Mobiles in India

English summary
Jio 5G Service Now in Puducherry Dharmapuri and Erode Just Recharge Rs 61 to get Welcome Offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X